Thursday, September 23, 2010

உங்கள் பிளாக்கை மொபைல் போனுக்கு ஏற்றதாக மாற்ற

 மொபைல் வைத்திருப்போர் எண்ணிக்கை அபரிமிதமான வளர்ச்சியை பெற்று உள்ளது. கணினியில் உள்ள அனைத்து வசதிகளும் இப்பொழுது மொபைல் போனிலும் வந்து விட்டது. அதில் குறிப்பிட்ட வசதி இணையம். செல்போனில் இணையம் உபயோகிப்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. தொழில் நுட்பதிற்கு ஏற்ற மாதிரி நம் பிளாக்கை நாம் மாற்றினால் தான் நம் பிளாக்கை  பிபலபடுத்த முடியும். ஆகையால் நம்முடைய தளங்களை நாம் செல்போனில் திறப்பதற்கு வசதியாக மாற்றினால் நம் பிளாக்கின் page views அதிகரிக்கும்.
உறுதி படுத்த வேண்டுமென்றால் கீழே என் தளத்தின் ஒருமாத வரவை பற்றி கொடுத்துள்ளேன்.




Page views by operating systems
இதில் மொபைல் போன்களில் 100 முறைக்கு மேல் என் தளம் திறக்கப்பட்டிருப்பதை காணலாம். 
  • உங்கள் பிளாக்கில் Design -Edit Html என்ற இடத்திற்கு செல்லுங்கள்.




blogger design
  • சென்று <head> இந்த வரியை கண்டு பிடிக்கவும். கண்டு பிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து <head> கீழே/பின்னே பேஸ்ட் செய்யவும்.

<meta content='IE=EmulateIE7' http-equiv='X-UA-Compatible'/>

<b:if cond='data:blog.isMobile'>

<meta content='width=device-width,minimum-scale=1.0,maximum-scale=1.0' name='viewport'/>

<b:else/>

<meta content='width=1100' name='viewport'/>

</b:if>
உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளுங்கள்.




Mobile friendly
சரியான இடத்தில் சேர்த்தவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி விடவும். இனி உங்கள் பிளாக்கை எந்த செல்போனிலும் எளிதாக திறந்து கொள்ளலாம்.



டுடே லொள்ளு 
Photobucket

ஓவரா குடிக்காதடான்னு சொன்னனே கேட்டியா, எவனோ ஓசியில வாங்கி தரான்னு குடிச்சா இப்படி தான். 

Wednesday, September 22, 2010

PDF பைல்களை இமேஜ்(jpg,gif,bmp,png,tif) பைல்களாக மாற்ற

PDF பைல்களை எப்படி நாம் இமேஜ் பைல்களாக மாற்றுவது என்று இங்கு காணபோகிறோம். இந்த வேலையை ஒரு சிறிய மென்பொருள் நமக்கு எளிதாக செய்து முடிக்கிறது.

இந்த மென்பொருள் பதிவர்களுக்கு மிகவும் தேவையான மென்பொருள் ஏனென்றால் நாம் ஏதேனும் PDF பைல்களை நம் பதிவில் சேர்க்க வேண்டுமென்றால் அதனை நேரடியாக சேர்க்க முடியாது அந்த பைல்களுக்கான Embeded உருவாக்க இன்னொரு தளத்தின் உதவியை நாட வேண்டிவரும். அதனால் நம் நேரம் தான் விரயம் ஆகும்.  அது மட்டுமில்லாமல் இன்னொரு தளத்தில் உறப்பினர் ஆக வேண்டும். இந்த குறையை தவிர்க்கவே இந்த அறிய மென்பொருள்.

மென்பொருளின் பயன்கள்: 



  • மிகச்சிறிய அளவே உடைய(1.9mb) முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.

  • மற்ற கன்வெர்ட் மென்பொருட்களை காட்டிலும் 87% வேகமாக இயங்க கூடியது.

  • பேட்ச் மோடில் இயங்க கூடியது.

  • இந்த முறையில் நாம் Jpg, Gif, Bmp, Tif, Png ஆகிய பார்மட்களில் மாற்றி கொள்ளலாம்.

  • தேவையான பக்கத்தை மட்டும் தேர்வு செய்து மாற்றும் வசதி உள்ளது. 

  • ஒரு போல்டரை அப்படியே கொடுத்து மாற்றும் வசதி.

  • Windows 2000, XP, Vista or 7 ஆகிய இயங்கு தளங்களில் வேலை செய்கிறது.

பயன் படுத்தும் முறை: 

  • உங்களுக்கு வரும் exe பைலை உங்கள் கணினியில் Install செய்து கொள்ளுங்கள்.

  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  • இதில் ADD என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் PDF பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

  • மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளதை போல் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும்.

  • கடைசியில் கீழே/மேலே  உள்ள CONVERT என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்கள் PDF பைல் நீங்கள் தேர்வு செய்த இமேஜ் வடிவில் வந்து இருக்கும்.

  • அவ்வளவு தான் நீங்கள் நேரடியாக உங்கள் இமேஜ் பைலை உங்கள் தளத்தில்  தரவேற்றி கொள்ளலாம்.



 டுடே லொள்ளு 
Photobucket 
மவனே கடைசி வரைக்கும் நீ என்ன பிடிக்கவே முடியாது.

படங்களினால் உங்கள் பிளாக் திறக்க தாமதமாகிறதா-Lazy Load Plugin

பிளாக்கரில் நாம் பதிவு எழுதும் போது அதற்கு சம்பந்தமான படங்களை சேர்ப்போம் எதையும் எளிதில் புரிய வைக்கவே நாம் படத்தை உபயோகிக்கிறோம்.ஒரு படமானது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். அது மட்டுமில்லாமல் போட்டோ பதிவுகளும் போடுவோம்.

ஆகையால் படங்கள் என்பது நாம் தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. இதில் என்ன பிரச்சினை என்றால் நாம் பிளாக் திறக்கும் போது படங்கள் தான் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்து கொள்கிறது. சாதாரண படங்களை விட gif வகை படங்கள் இன்னும் அதிக நேரம் எடுத்து கொள்ளும். நம்முடைய தளமும் திறக்க நேரம் எடுக்கும். இதை தவிர்க்கவே இந்த Lazy load Plugin

JQUERY lAZY LOAD PLUGIN:

  • நம் தளத்தில் இந்த குறையை போக்க நம்மக்கு உதவுவதே இந்த Lazy Load Plugin.   

  • இந்த வசதி Jquery தளத்தினால் அளிக்க பட்டுள்ளது. 

  • இதை நம் தளத்தில் சேர்க்க உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.

  • DESIGN- EDIT HTML - பகுதிக்கு செல்லுங்கள்.

  • </head> இந்த வரியை கண்டு பிடிக்கவும். 

  • கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த வரிக்கு மேலே முன்னே பேஸ்ட் செய்யவும். 

<script charset='utf-8' src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3.2/jquery.min.js' type='text/javascript'/>

<script src='http://pwam.googlecode.com/files/jquery.lazyload.js' type='text/javascript'/>

<script charset='utf-8' type='text/javascript'>

$(function() {

$(&quot;img&quot;).lazyload({placeholder : &quot;http://pwam.googlecode.com/files/grey.gif&quot;,threshold : 200});

});

</script>
அவ்வளவு தான் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி SAVE செய்து விடவும். அவ்வளவு உங்கள் பிளாக்கில் படங்கள் விரைவில் லோட் ஆகி விடும்.

டுடே லொள்ளு  
Photobucket
காடு எல்லாம் அழிச்சிட்டு இங்க வந்து பிளாக் எழுதிகிட்டு இருக்கீங்களா, உங்கள விடமாட்டேன்.  

Tuesday, September 21, 2010

அனைத்து விதமான கிராபிக்ஸ் பைல்களை பார்க்க மற்றும் கன்வெர்ட் செய்ய

இணையத்தில் நூற்றுகணக்கான  கிராபிக்ஸ் பைல்கள் காணப்படுகிறது. அதில் ஒரு சில மட்டும் நம் கணினியில் திறக்கும் மற்றவைகள் நம் கணினியில் திறக்க முடியாது. காரணம் அந்தந்த பைல்களுக்கு தேவையான support பைல்கள் நம் கணினியில் நிருவப்படாததே காரணம். இதற்க்கு ஒவ்வொன்றாக நாம் தேடி சென்று support பைல்கள் சேர்ப்பது என்பது சுலபமான காரியமல்ல. இந்த குறைகளை தவிர்க்கவே இந்த அறிய மென்பொருள் நமக்கு பயன்படுகிறது.

மென்பொருளின் பயன்கள்:

  • இந்த மென்பொருள் சுமார் 400 வகையான கிராபிக்ஸ் பைல்களை திறக்க முடியும்.

  • இந்த மென்பொருளில் Converter வசதியும் உள்ளது. எந்த படத்தையும் நமக்கு தேவையான வடிவில் அமைத்து கொள்ளலாம்.

  • இதில் Screen Shot எடுக்கும் வசதியும் உள்ளது.

  • இதில் உள்ள இன்னொரு அற்ப்புத வசதி உங்களுக்கு தேவையான படத்தை நீங்கள் இமெயிலும் செய்யலாம்.

  • இதை பயன் படுத்துவது எளிதாக உள்ளது.

  • பிரிண்ட் எடுக்கும் வசதி உள்ளது.

  • நம் படங்களை Slide Show ஆக பார்க்கும் வசதியும் உள்ளது.

  • இந்த மென்பொருள் சுமார் 43 மொழிகளுக்கு உகந்ததாக உள்ளது.

  • மிகசிறிய அளவே உடையது. ஆனால் வேலையை கனகச்சிதமாக செய்கிறது.

  • Windows3.1/95/98/ME/NT/2000/XP/Linux/Free BSD/ Irix/ Solaris / HP-UX / AIX - போன்ற இயங்கு தளங்களுக்கு ஏற்றதாக உள்ளது.

பயன் படுத்தும் முறை:

  • முதலில் நீங்கள் டவுன்லோட் செய்த பைலை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

  • இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  • இடது பக்கம் கணினியின் டிரைவ்கள் காணப்படும். அதில் ஏதேனும் ஒன்றினை செலக்ட் செய்ததும் அந்த டிரைவில் உள்ள அனைத்து படங்களும் வலது பக்கத்தில் உள்ள இடத்தில் தெரியும்.

  • இதில் உங்களுக்கு தேவையான படத்தை செலக்ட் செய்து நீங்கள் விரும்பிய வண்ணம் மாற்றி அமைத்து கொள்ளுங்கள்.



அனைவருக்கும் பயனுள்ள மென்பொருள் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்.



டுடே லொள்ளு 
Photobucket
என்ன பார்க்கறீங்க  வீடு வாடகைக்கு வேணுமா? 

Monday, September 20, 2010

உங்கள் லேப்டாப் திருடப்படாமல் பாதுகாக்க ஒரு அறிய மென்பொருள்

இந்த கணினி உலகில் நாளுக்கு நாள் வசதிகள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நம்முடைய வீட்டில் உள்ள Desktop கணினிகள் திருடப்படுவதை விட லேப்டாப் தான் அதிக அல்வாவு திருடப்படுகிறது ஏனென்றால் பாக்கெட்டில் வைத்து செல்லும் அளவிற்கு கூட தற்போது லேப்டாப்கள் வந்துவிட்டன. இதனால் திருடப்படுவதும் நாளுக்கு நாள் வசதியாகி விட்டது. இந்த பிரச்சினைகளை தவிர்க்கவே இந்த அறிய மென்பொருள் நமக்கு உதவுகிறது.

மென்பொருளின் பயன்கள்:

  • இந்த மென்பொருள் நம் கணினி திருடப்படும் வாய்ப்பை வெகுவாக குறைக்கிறது.

  • இந்த மென்பொருள்  மிகச்சிறிய அளவே உடையது (968kb). 

  • இதில் Theft alarm மட்டுமின்றி Battery Alarm உள்ளது. இது நம் லேப்டாப்பின் பேட்டரி குறைந்தால் நமக்கு தெரிய படுத்துகிறது.

  • இதில் உள்ள மற்றொரு சேவையானது health Alarm. இந்த வசதி நாம் கொடுக்கப்படும் நேர இடைவெளிக்கு ஏற்ப நமக்கு உடலிற்கு ஒய்வு தேவை போன்ற செய்திகளை தரும்.

  • Disk Alarm, Permitter Alarm,  Intention Alarm, Panic alarm போன்றவை இதர பிற வசதிகளாகும். 

  • இவைகள் தேவைபட்டாலும் நீங்கள் Activate செய்து கொள்ளுங்கள். 

இன்ஸ்டால் செய்யும் முறை : 

  • இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் உங்களக்கு L Alarm57.exe என்ற பைல் வரும் அந்த பைலை இரண்டு முறை கிளிக் செய்யுங்கள்.

  • வரும் விண்டோவில் Run பட்டனை அழுத்துங்கள்.

  • அதற்கு அடுத்து வரும் விண்டோவில் Read Manual என்ற பட்டனை அழுத்தவும். 

  • அதில் இந்த மென்பொருளின் அனைத்து விளக்கங்களும் சிறப்பம்சங்களும் செயல் படுத்தும் முறைகளும் விளக்கமாக கொடுத்து இருப்பார்கள் அதை கண்டிப்பாக பார்த்துகொள்ளவும்.

  • அடுத்து Install என்ற பட்டனை அழுத்தவும்.

  • அடுத்து வரும் விண்டோவில் Read Licence Agreement என்பதில் Agree என்று கொடுக்கவும்.

  • அடுத்து உங்களுக்கு Authorization Code கேட்கும். அதில் நீங்கள் எதுவும் கொடுக்காமல் Ok மட்டும் கொடுங்கள்.

  • அவ்வளவு தான் உங்கள் கணினியில் L Alarm இன்ஸ்டால் ஆகி விடும். 

  • உங்கள் கணினியை ஒருமுறை Restart செய்து விடவும்.

பயன் படுத்தும் முறை: 
  • உங்கள் கணினியில் Start - Programs - L Alarm - Options செல்லுங்கள்.

  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.(இதில் நிறைய வசதிகள் உள்ளது அனைத்தையும் விளக்க நேரமில்லாததால் முக்கியமானதை மட்டும் தெரிவிக்கிறேன். முன்பு கூறியது போல் Read manual பகுதிக்கு சென்று அனைத்தையும் பார்த்து கொள்ளவும்).

  • இதில் Sound என்பதை கிளிக் செய்யவும். 

  • அதற்கு பிறகு Browse என்பதை கிளிக் செய்து உங்கள் கணினியில் உள்ள .Mp3 (or) .Wav பைலை செலக்ட் செய்யவும்.

  • உங்களுக்கு அது போல பைல்கள் இல்லை என்றாலும் கவலை வேண்டாம். Need Sound Files என்ற வசதியை அவர்களே கொடுத்து உள்ளார்கள். அதில் சென்று தரவிறக்கி இங்கு பொருத்துங்கள்.

  • உங்களுக்கு எந்தெந்த எந்தெந்த Alarm தேவை படுகிறதோ அதை பொருத்துங்கள்.

  • கடைசியில் உள்ள Armed என்ற இடத்தில் கண்டிப்பாக ஏதேனும் சவுண்ட் கொடுக்க வேண்டும்.

  • முடிவில் Ok கொடுத்து வெளியில் வந்து விடுங்கள்.

  • இப்பொழுது நீங்கள் கணினியில் இருந்து விலக நேரிட்டால் Windows+L கீயை ஒன்றாக  அழுத்திவிட்டு செல்லவும். 

  • இப்பொழுது யாராவது வந்து இந்த கணினியின் Power கேபிளை பிடுங்கினால் போதும் உடனே உங்கள் கணினி நீங்கள் theft Alarm செலக்ட் செய்த சவுண்டில் அடிக்க துவங்கி விடும்.   

டுடே லொள்ளு 
Photobucket
யாராவது அந்த Switch கொஞ்சம் ஆப் பண்ணிட்டு போங்களேன்.

உங்கள் கணினியை வேகமாகவும் சிறப்பாகவும் Defragment செய்ய

நாம் கணினியில் பல வேலைகள் செய்து கொண்டிருக்கும் போது நமக்கு தேவையானதை நம் கணினியில் சேமித்து வைத்து கொள்வோம். அப்படி நாம் கணினியில் சேமிக்கும் போது நம் கணினி ஒரு பைலை சிறு சிறு பகுதிகளாக பிரித்து நம் கணினியின் வெவ்வேறான  பகுதிகளில் சேமித்து விடுகிறது. திரும்பவும் நாம் அந்த பைலை ஓபன் செய்யும் போது நம் கணினி சேமித்து வைத்த இடங்களில் இருந்து அலைந்து திரிந்து அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நமக்கு கொடுக்கிறது. நாம் பைலை ஓபன் செய்யும் நேரம் ஆவதற்கு இது தான் காரணம்.







அதற்கு நாம் இந்த Defragmented செய்யும் போது வெவேறான பகுதிகளில் உள்ள சிறு சிறு பகுதிகளை ஒன்றாக ஒரே இடத்தில் சேர்த்து வைக்கும். நாம் ஒவ்வொரு பைலை திறக்கும் போதும் நம் கணினி அலைந்து திரிய வேண்டியதில்லை ஒரே இடத்தில் இருந்த நமக்கு தகவலை தரும்.  நமக்கும் விரைவாக நமக்கு வேண்டிய பைலை ஓபன் செய்து கொள்ளலாம்.

Photobucket
நம் கணினியிலேயே Defragment செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது ஆமை வேகத்திலும் சிறப்பாகவும் செயல் படுவதில்லை. அதற்கு தான் இந்த மென்பொருளின் உதவி நமக்கு தேவை படுதிறது.

பயன் படுத்தும் முறை:

  • இந்த மென்பொருளை தரவிறக்கி வரும் .rar பைலை extract செய்து கொள்ளுங்கள்.

  • வரும் .exe பைலை இரண்டு க்ளிக் செய்து இன்ஸ்டால் செய்யுங்கள். 

  • இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  • இதில் நீங்கள் Defragment செய்யவேண்டிய டிரைவ் செலக்ட் செய்து கொண்டு கீழே உள்ள Alalyze என்ற பட்டனை அழுத்தவும்.

  • உங்கள் டிரைவ் ஸ்கேன் ஆகி உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  • அதற்கு அடுத்து அருகில் உள்ள Defrag என்ற பட்டனை அழுத்தினால் நீங்கள் தேர்வு செய்த  டிரைவ் Defragment ஆகிவரும்.

  • இதில் ஒவ்வொரு முறையும் நீங்கள் Degfrag செய்யவேண்டிய அவசியமில்லை. அதில் உள்ள Auto Defragmentation என்ற வசதியை தேர்ந்தெடுத்து உங்களுக்கு தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்துகொள்ளவும்.

  • இனி நீங்கள் ஒவ்வொரு முறையும் சென்று Defrag செய்ய வேண்டிய அவசியமில்லை நீங்கள் தேர்ந்தெடுத்த வசதிகேற்ப அது தானகவே Defrag செய்து விடும். உங்கள் கணினியும் வேகமாக செயல் படும்.   





டுடே லொள்ளு  
Photobucket
எவ்வளவு நாள் தான் நானும் சும்மாவே உட்கார்ந்து கொண்டிருப்பது  

Sunday, September 19, 2010

உங்கள் பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க 40 சிறந்த வழிகள்

பிளாக் வைத்திருக்கும் அனைவரும் யோசிப்பது ஒன்று தான் நம் பதிவு பிரபல மாக வேண்டும். அதன் மூலம் நம் பிளாக் பிரபலமடைய வேண்டும். எப்படி நம் பிளாக் பதிவை பிரபலமடைய வைப்பது அது நம் தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அமைகிறது. வாசகர்கள் மூலம் மட்டுமே நம் பதிவு பிரபலமடைகிறது. ஆகவே நம் தளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கீழே 40 சிறந்த  வழிகளை கீழே தொகுத்துள்ளேன். நானும் இந்த வழிகளை தான் கடைபிடித்து கொண்டிருக்கிறேன்.

  1. சிறந்த பதிவுகளை வெளியிடவும்.

  2. மற்ற தளத்திற்கு சென்று பின்னூட்டம் இடுங்கள்.

  3. உங்கள் Sitemap தேடியந்திரங்களில் இணைக்கவும்.

  4. உங்கள் தளத்தை வேகமாக ஓபன் ஆகும் படி வைத்து கொள்ளுங்கள்.

  5. உங்கள் வலைபதிவை தேடியந்திரங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றுங்கள்.

  6. உங்கள் பயண நேரங்களை வீணாக்க வேண்டாம். அதிலும் ஏதாவது பதிவை பற்றி யோசித்தல் நல்லது.

  7. உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிய படுத்தவும்.

  8. ஆபாச பதிவுகளை தவிர்க்கவும்.

  9. உங்களுடைய புதிய இடுகைகளில் பழைய இடுகைகளின் லிங்க் கொடுக்கவும்

  10. உங்களுடைய தளத்தில் Friends Bloglist சேருங்கள்.

  11. உங்களுடைய பழைய பதிவுகளின் லிங்க் முகப்பு பக்கத்தில் தெரிவியுங்கள்.

  12. ஒரே இரவில் உங்கள் தளம் பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணங்களை விட்டு விடுங்கள்.

  13. நேரம் தவறாமல் பதிவு  போடவும்.

  14. Popular Post விட்ஜெட் சேருங்கள்.

  15. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் சேருங்கள்.

  16. உங்களுடைய பதிவில் சிறந்த பத்து பதிவுகளை தேர்ந்தெடுத்து பதிவாக போடுங்கள்.

  17. உங்களுடைய பக்கம் லோட் ஆகும் நேரத்தை குறைக்கவும்.

  18. வாசகர்கள் ரசிக்கும் படி எழுதுவது சிறந்தது.

  19. உங்களுடைய தளத்தில் Subscribe விட்ஜெட் சேருங்கள்.

  20. உங்கள் நண்பரின் மெயிலுக்கு உங்கள் பதிவின் சிறு முன்னோட்டத்தை தெரிவியுங்கள்.

  21. உங்களுடைய இமெயிலில் உங்கள் பிளாக்கின் முகவரியை கையெழுத்தாக பயன்படுத்துங்கள்.

  22. உங்கள் பிளாக்கை விளம்பர படுத்துங்கள்.- Google Adwords

  23. உங்கள் பிளாக்கை விளம்பர படுத்துங்கள்.- Facebook Add

  24. follower விட்ஜெட் பொறுத்த மறக்காதீர்.

  25. Archive விட்ஜெட் பொருத்துங்கள்.

  26. Alexa Traffic விட்ஜெட் பொருத்தவும். 

  27. Related Post விட்ஜெட் பொறுத்த தவற வேண்டாம்.

  28. Yahoo Answer போன்ற தளங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலை இட்டு உங்கள் பிளாக்கின் முகவரியை தெரிவிக்கவும்.

  29. உங்கள் பிளாக்கை சிம்பிளாக வைத்து கொள்ளுங்கள்.

  30. உங்கள் தளத்திற்கு பயனுள்ள விட்ஜெட் மட்டும் சேருங்கள்.

  31. ட்விட்டரில் உங்கள் பதிவுகளை இணையுங்கள்.

  32. பேஸ்புக்கில் உங்கள் பதிவுகளை இணைக்கவும்.

  33. கூகுள் பஸ்ஸில் பதிவுகளை இணைக்க தவறவேண்டாம்.

  34. உங்கள் பக்கத்தில் Twitter,Facebook- போன்ற தளங்களுக்கு இணைப்பு கொடுக்க மறக்க வேண்டாம்.

  35. உங்கள் தளத்திருக்கு ஏற்ற கீவேர்ட் தேர்வு செய்யுங்கள்.

  36. Alexa Tool bar கண்டிப்பாக உபயோகிக்கவும்.

  37. உங்கள் முகப்பு பக்கத்தை அழகுள்ளதாக வைத்து கொள்ளுங்கள். 

  38. பிளாக்கரில் உள்ள முக்கியமான சேவைகளை மட்டும் பயன்படுத்துங்கள்.

  39. தேவையில்லாத விட்ஜெட்டுக்களை பொறுத்த வேண்டாம். 

  40. தினமும் உங்கள் மெயில் சோதித்து வாசகர்கள் ஏதேனும் மெயில் அனுப்பி இருந்தால் அதற்கு பதில் போடவும்.

இந்த வழிகளை கடைபிடித்தால் கூடிய விரைவில் நீங்கள் சிறந்த பதிவராக வலம் வரலாம்.
டுடே லொள்ளு
Photobucket
என்ன மாப்ள ஒரே ஜாலியா இருக்க, யாராவது ஓசி சாப்பாட்டுக்கு கூப்பிட்டு இருக்காங்களா?  

Text Widget

Text Widget