Friday, October 1, 2010

நம் பிளாக்கின் அனைத்து Followers-க்கும் ஒரே நேரத்தில் செய்தி அனுப்ப

நாம் எழுதும் பதிவு நம் வாசகர்களுக்கு பிடித்திருந்தால் நம்முடைய தளத்தில் உள்ள Follower ஆக இனைந்து கொள்வார்கள். நம் தளத்தில் follower ஆக இனைந்து  கொள்வதால் நாம் பதிவு போட்ட உடனேயே நம் பதிவின் லிங்க் அவர்களின் பிளாக்கில் அப்டேட் ஆகும். அவர்களும் விருப்பமிருந்தால் அந்த லிங்கில் வந்து நம் பிளாக்கை பார்த்து கொள்வார்கள். இது போன்று நம் பதிவுகள் பிரபலமாக நம் followers முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

நம் பிளாக்கை பற்றி  ஏதேனும் செய்தியோ அல்லது நன்றி

மடலையோ இல்லை ஏதேனும் வாழ்த்து செய்தியோ அவர்களின் மெயிலுக்கு அனுப்ப விரும்பினால் ஒவ்வொருவரின் மெயில் முகவரிகளை கண்டறிந்து அவர்களுக்கு மெயில் அனுப்பவது என்பது முடியாத காரியம். ஆகவே அனைவருக்கும் ஒரே நேரத்தில் எப்படி செய்தி அனுப்புவது என்று கீழே பார்ப்போம்.
  • இதற்கு நீங்கள் கூகுள் வழங்கும் Google Friend Connect தளத்திற்கு செல்லுங்கள்.

  • User Id, Password கேட்டால் கொடுத்து விட்டு உள்ளே நுழைந்து கொள்ளுங்கள்.

  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  • இந்த விண்டோவில் உங்களுக்கு சொந்தமான அனைத்து பிளாக்குகளும் இருக்கும். இதில் நீங்கள் எந்த பிளாக்கில் உள்ள Followersக்கு செய்தி அனுப்ப வேண்டுமோ அந்த பிளாக்கை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

  • நீங்கள் பிளாக்கை தேர்வு செய்ததும் அந்த பிளாக்கின் தலைப்பும் அதில் எத்தனை பேர் Followersஆக உள்ளனர் என்ற விவரமும் வரும்.

  • அடுத்து படத்தில் காட்டியுள்ள இடத்தில் உள்ள Newsletter என்பதை கிளிக் செய்யவும்.

  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். இதில் மூன்று படிகள் உள்ளது.

Compose a News Letter:
  • இதில் நீங்கள் முதலில் அனுப்பும் செய்திக்கு தலைப்பை பொருத்துங்கள்.

  • இரண்டாவது கட்டத்தில் உங்களுடைய பேரையோ அல்லது உங்கள் பிளாக்கின் பெயரையோ கொடுக்க வேண்டும். 

  • அதற்கு அடுத்ததாக உள்ள பெரிய கட்டத்தில் நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை கொடுக்கவும்.

  • உங்கள் தளத்திற்கான லிங்கும் இதில் இணைக்கும் வசதி உள்ளது. 

  • அடுத்து இரண்டாவதாக உள்ளது Choose Recipients இதில் நீங்கள் All Subscribers தேர்வு செய்து கொள்ளுங்கள். 

  • அடுத்து கீழே உள்ள Preview and Send News Letter என்ற பட்டனை அழுத்திவிடவும். உங்களுக்கு நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியின்  நகல் தெரியும்.

நீங்கள் மற்றவர்களுக்கு செய்தியை அனுப்புவதற்கு முன்னர் உங்கள் மெயிலுக்கு அனுப்பி சரியாக உள்ளதா என உறுதி படுத்தி கொண்டு கடைசியில் Send news letters என்ற பட்டனை அழுத்தினால் அனைவருக்கும் இந்த செய்தி சென்று விடும். அதிக followers இருந்தால் கொஞ்சம் நேரம் பிடிக்கும் காத்திருக்கவும்.
அவ்வளவு தான் இனிமேல் எந்த செய்தியையும் நாம் சுலபமாக அனுப்பி விடலாம்.


டுடே லொள்ளு 
Photobucket
உன்ன நம்பி வேற பதிவு போட்டுட்டேன் சீக்கிரம் கொண்டு போய் சேர்த்துடும்மா உனக்கு புண்ணியமா போகும். 

15 comments:

prabhadamu said...

சூப்பர் நல்ல தகவல் நன்றி நண்பா.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நன்றி ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது

பிரஷா said...

நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்

Mrs.Menagasathia said...

good information,thx u sasi!!

பிரஷா said...

நல்ல தகவல் நண்பரே நன்றி....

தமிழ் உதயம் said...

அருமையான, எங்களுக்கு தேவையான பதிவு. நன்றி.

இளங்கோ said...

நன்றி நண்பரே...

rk guru said...

arumaiyaana thagaval sasi...vazhthukal

ஈரோடு தங்கதுரை said...

பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் சசி.

Jaleela Kamal said...

அருமை வாழ்த்துக்கள்

venu said...

விரைவில் உதவும்..மிகவும் பிரயோசனம்

கனாக்காதலன் said...

Nice Information ! Thanks friend !

சாமீ அழகப்பன் said...

எனது வலைப்பூ அனைத்து அன்பர்களுக்கும் ஒரு செய்தி அனுப்பிவிட்டேன்
நன்றி
என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்

பதிவுலகில் பாபு said...

ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருந்த விசயம்.. நன்றி சசி..

மனசாட்சியே நண்பன் said...

நன்றி பல நண்பரே உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்

Post a Comment

Text Widget

Text Widget