Tuesday, October 5, 2010

உங்கள் பிளாக்கில் Animated Favicon கொண்டுவர

பிளாக் வைத்திருப்பவர்கள் அனைவரும் அவர்களுக்கு விரும்பிய  படத்தை FAVICON களாக அவர்களின் பிளாக்குகளில் வைத்து உள்ளனர். (அப்படி எந்த படத்தையும் வைக்காதவர்களுக்கு பிளாக்கரின் 
நிலையான படமான B என்ற படம் மட்டுமே தெரியும் அது பார்ப்பதற்கு அழகற்று இருக்கும்.)  ஆனால் நாம் ஏதேனும் படத்தை மட்டுமே வைக்கமுடியும். நம் தளத்தின் பெயரை படமாக மாற்றி வைத்தாலும் ஓரிரண்டு எழுத்துக்களை மட்டுமே சேர்க்க முடியும். முழு பெயரையும் வைக்க முடியாது. எப்படி நம் தளத்தில் ANIMATED SCROLING TEXT பெவிகானாக மாற்றுவது என்று பார்ப்போம்.


  • கீழே உள்ள படத்தை பாருங்கள் நான் பெவிகானாக மாற்றிய படம் கீழே கொடுத்துள்ளேன் பார்க்கவும்.

Photobucket


  • இது போல் நமக்கு தேவையான படத்தையும், நம் தளத்தின் பெயரையும் கொடுத்து இதுபோல உருவாக்கி நம் பிளாக்கில் fevicon ஆக மாற்றி கொள்ளலாம். 

  • இதற்கு இந்த லிங்கில் Favicon Generator இந்த தளத்திற்கு செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  • முதலில் உங்கள் படத்தை தேர்வு செய்து கொள்ளவும்.

  • அடுத்துள்ள கட்டத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் எழுத்துக்களை கொடுக்கவும்.

  • முடிவில் Generate Favicon என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும்.

  • இதில் நான் வட்டமிட்ட இடத்தில் உள்ள animated favicon.gif என்ற பைலை உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.பின்பு Photobucket, flickr போன்ற Image host தளங்களுக்கு சென்று உங்கள் படத்திற்கான URL பெற்று கொள்ளவும்.

  • உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். 

  • Design- Edit Html பகுதிக்கு சென்று <head> இந்த வரியை கண்டு பிடிக்கவும்.

  • கண்டு பிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த வரிக்கு <head> கீழே பேஸ்ட் செய்யவும்.

<link href='YOUR ANIMATED FAVICON URL' rel='shortcut icon'/>
  • உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்துகொள்ளவும்.

  • இது போல் சரியான இடத்தில் கோடிங்கை சேர்த்தவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி விடவும்.

  • அவ்வளவு தான் உங்கள் Animated Scrollin Text Favicon உங்கள் பிளாக்கில் சேர்ந்து விட்டது. 

டிஸ்கி : இந்த  Animated Scrollin Text Favicon குறிப்பிட்ட பிரவுசர்களில் Firefox, IE ஆகிய பிரவுசர்களில் மட்டும் உகந்ததாக உள்ளது. மற்ற பிரவுசர்களில் சரியாக அனிமேசன் வரவில்லை வெறும் படம் மட்டுமே வருகிறது.


டுடே லொள்ளு 
Photobucket


இது என்ன புதுவிதமான உடற்பயிற்சியோ 

6 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றி நண்பா.

rk guru said...

நல்ல பதிவு சசி ....வாழ்த்துகள்

GEETHA ACHAL said...

எங்க இருந்து தான் டிஸ்கிக்கு படம் எடுப்பிங்களோ...கலக்கல் காமெடி...

asiya omar said...

லொள்ளு குட்டீஸ் ,பதிவும் சூப்பர்.

Praveen-Mani said...

good post...thanks sasi anna

தமிழ் உதயம் said...

நன்றி சசிகுமார்

Post a Comment

Text Widget

Text Widget