Wednesday, October 6, 2010

பிளாக்கில் பதிவின் தலைப்பை வெவ்வேறு நிறங்களில் கொண்டு வர

நாம் எழுதும் பதிவுகளுக்கு ஏற்ற மாதிரி தலைப்பு கொடுப்போம். ஆனால் அந்த தலைப்பு குறுப்பிட்ட நிறத்தில் மட்டுமே வரும்(xml தேர்வு செய்துள்ள நிறம்). அதை எப்படி வெவ்வேறு நிறங்களில் கொண்டு வருவது என்று இங்கு காணலாம். இதற்காக எந்த கோடிங்கயும் டெம்ப்ளேட்டில் சேர்க்க வேண்டியதில்லை எந்த விட்ஜெட்டையும் சேர்க்க வேண்டியதில்லை. மிகவும் சுலபமான வேலை இது நம் தளமும் அழகாக காணப்படும்.
  • முதலில் நீங்கள் எப்பவும் போல் பதிவு எழுத New post பகுதிக்கு செல்லுங்கள்.

  • உங்களுக்கு தேவையான தலைப்பை compose மோடில் எழுதுங்கள்.

  • அடுத்து தேவையான வண்ணத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

  • நீங்கள் தலைப்பு முழுவதும் ஒரே நிறமும் தேர்வு செய்யலாம் அல்லது ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு நிறத்தை கொடுக்கலாம் அது உங்கள் விருப்பம்.

  • தலைப்பு முழுவதும் ஒரே நிறத்தை தேர்வு செய்வதே படிப்பதற்கு சுலபமாக இருக்கும்.இது போலவும் செய்யலாம் என்பதற்காகவே நான் இதுபோல் தேர்வு செய்து உள்ளேன்.

  • உங்களுக்கு தேவையான நிறத்தில் மாற்றி கொண்டு மேலே Edit HTML என்பதை கிளிக் செய்யுங்கள்.

  • உங்களுக்கு அந்த தலைப்பிற்கான HTML கோடிங் இருக்கும் அதை அப்படியே  காப்பி செய்து TITLE பகுதியில் பேஸ்ட் செய்து விடுங்கள்.

  • உங்களுடைய பதிவின் தலைப்பு பகுதியில் ஒரே HTML கோடிங்காக இருக்கும் கவலை வேண்டாம் பதிவை பப்ளிஷ் செய்தவுடன் அந்த HTML கோடிங் மறைந்து வெறும் தலைப்பு மட்டும் நமக்கு தெரியும்.

  • அதுவும் நாம் தேர்வு செய்த நிறங்களுடன் நம் தலைப்பு அழகாக தெரியும்.

  • நீங்கள் தலைப்பு நிறத்தை மாற்றியதை உறுதி செய்ய கீழே உள்ள PREVIEW என்ற பட்டனை அழுத்தி பார்த்து கொள்ளவும். பின்பு நீங்கள் எப்பவும் போல் பதிவு எழுதி வெளியிடலாம்.

  • இனி நம் பதிவுகள் அழகாக ஜொலிக்கும்.

டுடே லொள்ளு 
Photobucket
அழாதடா கண்ணா உன்ன ரோபோவுக்கு கூட்டிட்டு போறேன்.

17 comments:

எஸ்.கே said...

என்னென்னமோ புதுசு புதுசா சொல்றீங்க! ரொம்ப ரொம்ப நன்றி! வாழ்த்துக்கள் நண்பரே!

தமிழ் உதயம் said...

வலைப்பூவை அழகு படுத்த ஒரு யோசனை. சிறந்த பகிர்வு.

அஹமது இர்ஷாத் said...

ரொம்ப உபயோகம் நண்பா..நன்றி

prabhadamu said...

good post :)

அருண் பிரசாத் said...

நல்ல வழிதான் சசி. ஆனால், உங்கள் பதிவின் டைட்டில் பார் பார்த்தீங்களா? அது XML கோடிங்கோடு வருகிறது. இதை சரி செய்ய முடியாதா?

ஈரோடு தங்கதுரை said...

நல்ல பதிவு சசி வாழ்த்துக்கள், பிளாக்கர் டிப்ஸ் தருவதர்காகவே நீங்கள் உள்ளீர்கள், ( அதை பயன் படுத்தி கருத்து சொல்லவே நாங்கள் இருக்கிறோம். ) ஹி ஹி ஹி ..!

ஈரோடு தங்கதுரை said...

நான் செய்து பார்த்தேன் சசி. கொஞ்சம் தவறி வருகிறது. Home botten அழுத்தினால் HDML code வருகிறது . Tittle colour font வரவில்லை

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றி சசி.

அஸ்மா said...

கலர் ஃபுல் இடுகை :) சூப்பர் சகோ!

நேசமுடன் ஹாசிம் said...

புதிய ஒரு பாடம் கற்றுத்தந்த என் ஆசானை வாழ்த்துகிறேன் நன்றி நண்பா

asiya omar said...

சிறந்த பகிர்வு.

Mrs.Menagasathia said...

super post!!

rk guru said...

நல்ல பதிவு சசி வாழ்த்துக்கள்

ம.தி.சுதா said...

ஆஹா ரொம்ப நல்லாயிருக்க அடுத்த பதிவில் பிரயோகிக்கிறேன்.... குறைநினைக்க வேண்டாம்... தங்களது பழைய பெவிகொன் இதைவிட நல்லாக இருந்தது....

குவைத் தமிழன் said...

அருமையான தகவல்,நன்றி. தமிழ்மணத்துல வாக்களித்தவர்கல் யார் யாருன்னு எப்படி கண்டுபிடிக்கறதுன்னு எனக்கு தெரியால. சொல்ல முடியுமா?

mkr said...

எப்படி உங்களால் மட்டும் இப்படி தகவல்களை தர முடிகிறது நன்பா.பாரட்டுகள்

LIFE DIRECTION NETWORK said...

பிளாக்கர் தகவல்களை தேடும் போது இந்த தளமே அதிக அளவில் வருகிறது இதில் உங்கள் நுட்ப அறிவு மட்டுமிலாது பொறுமையுடன் கூடிய உழைப்பும் வெளிப்படுகிறது எனவேதான் இதன் எல்லா பக்கங்களும் பயனுள்ளதாகவும் புரியும்படியும் இருக்கிறது நன்றி, வாழ்த்துக்கள்.

Post a Comment

Text Widget

Text Widget