Wednesday, September 22, 2010

படங்களினால் உங்கள் பிளாக் திறக்க தாமதமாகிறதா-Lazy Load Plugin

பிளாக்கரில் நாம் பதிவு எழுதும் போது அதற்கு சம்பந்தமான படங்களை சேர்ப்போம் எதையும் எளிதில் புரிய வைக்கவே நாம் படத்தை உபயோகிக்கிறோம்.ஒரு படமானது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம். அது மட்டுமில்லாமல் போட்டோ பதிவுகளும் போடுவோம்.

ஆகையால் படங்கள் என்பது நாம் தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. இதில் என்ன பிரச்சினை என்றால் நாம் பிளாக் திறக்கும் போது படங்கள் தான் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்து கொள்கிறது. சாதாரண படங்களை விட gif வகை படங்கள் இன்னும் அதிக நேரம் எடுத்து கொள்ளும். நம்முடைய தளமும் திறக்க நேரம் எடுக்கும். இதை தவிர்க்கவே இந்த Lazy load Plugin

JQUERY lAZY LOAD PLUGIN:

  • நம் தளத்தில் இந்த குறையை போக்க நம்மக்கு உதவுவதே இந்த Lazy Load Plugin.   

  • இந்த வசதி Jquery தளத்தினால் அளிக்க பட்டுள்ளது. 

  • இதை நம் தளத்தில் சேர்க்க உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.

  • DESIGN- EDIT HTML - பகுதிக்கு செல்லுங்கள்.

  • </head> இந்த வரியை கண்டு பிடிக்கவும். 

  • கண்டுபிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த வரிக்கு மேலே முன்னே பேஸ்ட் செய்யவும். 

<script charset='utf-8' src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3.2/jquery.min.js' type='text/javascript'/>

<script src='http://pwam.googlecode.com/files/jquery.lazyload.js' type='text/javascript'/>

<script charset='utf-8' type='text/javascript'>

$(function() {

$(&quot;img&quot;).lazyload({placeholder : &quot;http://pwam.googlecode.com/files/grey.gif&quot;,threshold : 200});

});

</script>
அவ்வளவு தான் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி SAVE செய்து விடவும். அவ்வளவு உங்கள் பிளாக்கில் படங்கள் விரைவில் லோட் ஆகி விடும்.

டுடே லொள்ளு  
Photobucket
காடு எல்லாம் அழிச்சிட்டு இங்க வந்து பிளாக் எழுதிகிட்டு இருக்கீங்களா, உங்கள விடமாட்டேன்.  

16 comments:

அஹமது இர்ஷாத் said...

அசத்தல் சகா..டுடே லொள்ளு'ல கருத்து கந்தசாமியா ரைட்டு..

அருண் பிரசாத் said...

இந்த கோடிங் எப்படி லோடிங் நேரத்தை குறைக்கிறது சசி?

Mrs.Menagasathia said...

பதிவும்,லொள்ளும் சூப்பர்ர் சசி!!

ம.தி.சுதா said...

தகவலுக்கு நன்றி சகோதரா...?

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றி சசி, காட்டை நான் அழிக்கல...எஸ்கேப்பு :))

என்னது நானு யாரா? said...

ட்ரை பண்ணப்போறேன். பார்க்கலாம் எந்த அளவுக்கு வித்தியாசம் இருக்குன்னு? நல்ல தகவல் தந்ததற்கு நன்றி சசி!

ராமலக்ஷ்மி said...

எனக்கு ரொம்ப உபயோகமான தகவல்:)! நன்றி சசிகுமார். முயன்று பார்க்கிறேன்.

எஸ்.கே said...

இந்த வசதி என் தளத்திற்கு மிகவும் தேவை. மிக்க நன்றி! அப்படியே ஃபிளாஷ்க்கும் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நண்பரே!

S Maharajan said...

மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றி

Kousalya said...

thank u sasi...

சிநேகிதி said...

நல்ல தகவலுக்கு நன்றி

prabhadamu said...

good post நண்பா.

GEETHA ACHAL said...

superb sasi...சசி.comment போடும் பொழுது அந்த கமண்ட் மட்டும் தனியாக தெரிய வேண்டும். அந்த கோட்டினை பத்தி பதிவு போடுங்க...

நேசமுடன் ஹாசிம் said...

நன்றி நண்பா நெடுநாளாக அனுபவித்த பிரச்சினைக்கு வழி அறிவித்து உதவினீர்கள் நன்றி சொல்ல வரிகளில்லை நன்றி

rk guru said...

உங்கள் தளத்திலே நீங்கள் சொல்ற பிரச்சனை இருந்தது ஆனால் இப்போது இல்லை கிளிக் செய்தவுடன் முழுவதும் வெளியாகிறது....நல்ல தகவல் பதிவு வாழ்த்துகள் சசி

karurkirukkan said...

great work
thank you

Post a Comment

Text Widget

Text Widget