Thursday, October 28, 2010

ஜிமெயிலில் புதிய வசதி - Auto Advance

பொதுவாக நாம் ஜிமெயிலில் ஏதேனும் மெயிலை delete செய்தாலோ அல்லது archive செய்தாலோ நம்முடைய விண்டோ திரும்பவும் முகப்பு பக்கத்துக்கே(inbox) சென்று விடும் நாம் திரும்பவும் மெயிலை க்ளிக் செய்து தான் நாம் அடுத்த மெயிலை delete மற்றும் archive செய்ய முடியும். இனி அது போல் செல்ல வேண்டியதில்லை நாம் ஒரு மெயிலை delete செய்தால் நம் விண்டோ இன்பாக்ஸ்க்கு செல்லாமல் அட்டோமேடிக்காக அடுத்த மெயில் ஓபன் ஆகியிருக்கும்.

இந்த வசதி ஏற்கனவே யாகூவில் உள்ளது. இப்பொழுது ஜிமெயிலிலும் இந்த வசதியை புகுத்தி உள்ளனர்.
  • இந்த வசதியை பெற முதலில் நீங்கள் உங்கள் ஜிமெயில் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். 

  • Settings - Labs - Auto advance என்ற வசதியில் உள்ள enable என்பதை தேர்வு செய்து கீழே உள்ள Save Changes என்பதை க்ளிக் செய்து விடுங்கள்.

  • திரும்பவும் Settings சென்று General பகுதியில் இருக்கும் auto advance வசதியை உங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி கொண்டு கீழே உள்ள Save Changes பட்டனை அழுத்தி நீங்கள் மாற்றியதை சேமித்து கொள்ளுங்கள்.

  • இப்பொழுது ஏதேனும் மெயிலை அழித்தோ அல்லது அர்ச்சிவ் செய்தோ பாருங்கள் உங்களுக்கு நீங்கள் செய்த மாற்றம் தெரியும்.



டுடே லொள்ளு 


என்ன படத்தையோ காணோம்னு தேடாதிங்க கொஞ்சம் இருங்க அவரு உள்ளே ரெஸ்ட் எடுத்து கிட்டு இருக்காரு.

11 comments:

தமிழ் உதயம் said...

நல்ல தகவல்.

அந்நியன் said...

அன்பின் சசி உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன் உங்கள் மூலம் தமிழில் தொழில்நுட்ப தகவல் எல்லோருக்கும் பொய் சேர்கிறது என்பதில் ஆச்சர்யமில்லை ..ஆனால் பதிவுலகில் நீங்கள் alexa rank முன்னணியில் இருந்தும் ஏன் உங்களை அவர் தன்னுடைய top 10n இல் சேர்க்கவில்லை .உங்களை ஏன் இருட்டடிப்பு செய்கிறார் ..

அருண் பிரசாத் said...

இதோ மாத்திடறேன்

சைவகொத்துப்பரோட்டா said...

@லொள்ளு:நீங்க உள்ளேயே இருங்க ராசா.

பிரவின்குமார் said...

வழக்கம்போல் பயனுள்ள தகவல்
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே..!

அந்நியன் said...

அன்பின் சசி அண்ணா உங்களின் பெருந்தன்மைக்கு நன்றி ..அனால் உங்களைபோல் என்னால் இருக்க முடியாது இதுவரை நூற்றுக்கு மேற்ப்பட்ட தளத்தில் மூன்று கருத்துகளை சொல்லி இருக்கிறேன் நெறைய பேர் கட்டவே இல்லை சில பேர் போய் வேலையை பார் என்கிறார்கள் உங்களின் நிலை என்றாவது ஒருநாள் இவர்களுக்கு புரியும் அதுவரை காத்திருக்கவேண்டும் உங்கள் அமைதிக்கு வெற்றி நிச்சயம் கிட்டும் .உண்மையான திறமையை யாரளும் அளிக்க முடியாது வெற்றி நிச்சயம் ..உங்களால் தமிழ் தொழில்நுட்பம் மேலும் வளர வாழ்த்துக்கள் ..

Jiyath ahamed said...

ரொம்ப நல்லா மாற்றம் தெரிந்தது. சூப்பர்...... நன்றி சசி அண்ணா!

Mrs.Menagasathia said...

ohhh thxs sasi!! useful post...

சிநேகிதி said...

நல்ல தகவல் சசி.. பகிர்வுக்கு நன்றி

ம.தி.சுதா said...

நல்லதொரு தகவல் சகோதரா நன்றிகள்...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

நன்றி சசி.. ஆமாம் மிஸ்டர் லொள்ளு எங்கே காணாம போறார்..:))

Post a Comment

Text Widget

Text Widget