Thursday, September 23, 2010

உங்கள் பிளாக்கை மொபைல் போனுக்கு ஏற்றதாக மாற்ற

 மொபைல் வைத்திருப்போர் எண்ணிக்கை அபரிமிதமான வளர்ச்சியை பெற்று உள்ளது. கணினியில் உள்ள அனைத்து வசதிகளும் இப்பொழுது மொபைல் போனிலும் வந்து விட்டது. அதில் குறிப்பிட்ட வசதி இணையம். செல்போனில் இணையம் உபயோகிப்பது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. தொழில் நுட்பதிற்கு ஏற்ற மாதிரி நம் பிளாக்கை நாம் மாற்றினால் தான் நம் பிளாக்கை  பிபலபடுத்த முடியும். ஆகையால் நம்முடைய தளங்களை நாம் செல்போனில் திறப்பதற்கு வசதியாக மாற்றினால் நம் பிளாக்கின் page views அதிகரிக்கும்.
உறுதி படுத்த வேண்டுமென்றால் கீழே என் தளத்தின் ஒருமாத வரவை பற்றி கொடுத்துள்ளேன்.




Page views by operating systems
இதில் மொபைல் போன்களில் 100 முறைக்கு மேல் என் தளம் திறக்கப்பட்டிருப்பதை காணலாம். 
  • உங்கள் பிளாக்கில் Design -Edit Html என்ற இடத்திற்கு செல்லுங்கள்.




blogger design
  • சென்று <head> இந்த வரியை கண்டு பிடிக்கவும். கண்டு பிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து <head> கீழே/பின்னே பேஸ்ட் செய்யவும்.

<meta content='IE=EmulateIE7' http-equiv='X-UA-Compatible'/>

<b:if cond='data:blog.isMobile'>

<meta content='width=device-width,minimum-scale=1.0,maximum-scale=1.0' name='viewport'/>

<b:else/>

<meta content='width=1100' name='viewport'/>

</b:if>
உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளுங்கள்.




Mobile friendly
சரியான இடத்தில் சேர்த்தவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி விடவும். இனி உங்கள் பிளாக்கை எந்த செல்போனிலும் எளிதாக திறந்து கொள்ளலாம்.



டுடே லொள்ளு 
Photobucket

ஓவரா குடிக்காதடான்னு சொன்னனே கேட்டியா, எவனோ ஓசியில வாங்கி தரான்னு குடிச்சா இப்படி தான். 

7 comments:

Gayathri said...

அண்ணா ஒரு டவுட்..நம்ம ப்ளாக் லாம் தமிழ் ல இருக்கே..எப்படி மொபைல் ல தெரியுமா??

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றி சசி. யாருப்பா அவருக்கு ஓசியில வாங்கி ஊத்திவிட்டது :))

Mrs.Menagasathia said...

ohh thxs a lot sasi!!

ம.தி.சுதா said...

தகவலுக்கு நன்றி சகோதரம் முயற்சிக்கிறேன்..

ஈரோடு தங்கதுரை said...

சசி, நாம குடிக்கலாமா? சும்மா ... நல்ல தகவல் ... வாழ்த்துக்கள்

sheik said...

http://kuwaittamils.blogspot.com/2010/09/blog-post_24.html

Farhath said...

super Post

Post a Comment

Text Widget

Text Widget