Sunday, August 22, 2010

நம் பிளாக்கில் வரும் வாசகர்களுக்கு "Welcome & Thankyou Msg Panel" வைக்க

நம் பதிவு எழுதுவதை பார்க்க வரும் வாசகர்களுக்கு  நாம் நன்றி சொல்லியோ அல்லது நம்முடைய பிளாக்கில் உள்ள தொகுப்புகளை பற்றியோ இதில் சொல்லலாம். அது மட்டுமில்லாமல் இதில் நம்முடைய படத்தையும் சேர்த்து கொள்ளலாம்.



நம் பதிவிற்கு மேலே இந்த விட்ஜெட்டை பொறுத்த உங்கள் .

<div style="background: #a5e9f8; padding: 5px 10px 10px;">

<h3><center><u>வருகைக்கு மிக்க நன்றி</u></center></h3>

<img border="2" style="float: right; margin: 0 0 5px 5px;" src="Your Picture Url" height="75px" width="75px" />

<p>நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் பிளாக்கர் டிப்ஸ், தொழில்நுட்ப செய்திகள், இலவச மென்பொருள்கள் மற்றும் அழகான புகைப்பட தொகுப்புகள் உள்ளன.</p>

<p>தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.</p>

</div>
பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள் கீழே உள்ள  கோடிங்கை காப்பி செய்து கொண்டு

  • Design

  • Add a Gadget

  • Html/ JavaScript - சென்று காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும். 

  • கோடிங்கில் சிவப்பு நிறத்தில் காட்டியுள்ள இடத்தில் உங்கள் உங்கள் படத்திற்கான URL கொடுதுவ்டவும்.

  • கீழே உள்ள வாக்கியங்களில் உங்கள் தளத்திற்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைத்து கொண்டு கீழே உள்ள SAVE என்ற பட்டனை அழுத்திவிடவும்.



முடிவில் மேலே படத்தில் காட்டியுள்ள இடத்தில் உங்கள் விட்ஜெட்டை நகர்த்தி வைக்கவும்.  கீழே உள்ள Save பட்டனை அழுத்தி நம் பிளாக்கிற்கு வந்து பார்த்தால் நம்முடைய பதிவின் மேல் நாம் வைத்த விட்ஜெட் வந்திருக்கும். 


பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள்.


டுடே லொள்ளு 
Photobucket
இன்னா மழை பேயுதுடா சாமி, குடை கொண்டு வரலன்ன அவ்வளவு தான்  


நண்பர்களே மறக்காமல் உங்கள் ஓட்டினை போடவும்.

Friday, August 20, 2010

நம் பிளாக்கை மேலும் அழகாக்க 100+ அழகான கடிகாரங்கள்



நமது வாசகர்களை கவர நாமும் தினம் தினம் புது புது விசயங்களை சேர்க்கிறோம் அந்த வகையில் நமது பிளாக்கையும் அழகு படுத்தலாமே.  நமது பிளாக்கை மேலும் அழகாக்க புத்தம் புதிய 100 க்கும் அதிகமான அழகான கடிகாரங்கள் இந்த தளத்தில் உள்ளது இந்த கடிகரங்களில் சில இங்கு கொடுத்துள்ளேன்.  





 இந்த விட்ஜெட்டை பெற பதிவின் முடிவில் கொடுத்துள்ள லிங்கை க்ளிக் செய்து அந்த தளம் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் 


 
  • இதில் உங்களுக்கு 149 வடிவில் கடிகாரங்கள் உள்ளன. இதில் உங்களுக்கு பிடித்த கடிகாரத்திற்கு கீழே உள்ள HTML CODE என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். 

  • இது போல் விண்டோ வந்தவுடன் அதில் உள்ள Html code காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.

  • Design- Add a gadget - Html/JavaScript - சென்று நீங்கள் காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல இருக்கவேண்டும்.

  • இப்பொழுது கீழே உள்ள Save என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய தளத்தில் நீங்கள் விரும்பிய கடிகாரம் வந்துவிடும்.

  • இதில் Time செட் பண்ண வேண்டியதில்லை உங்கள் கணினியில் இருக்கும் நேரத்தை தானாகவே எடுத்துகொள்ளும் வசதி இதில் உள்ளது.

கடிகாரம் பெறுவதற்கான லிங்க் : http://www.csalim.com/gallery.php

டுடே லொள்ளு 
Photobucket
யார்கிட்ட கத்துகிட்டு இருப்பாரு இப்படி அரைச்ச மாவையே அரைச்சுகிட்டு இருக்காரே.


பதிவு பயனுள்ளதாக இருந்தால் ஓட்டு போட மறக்காதிர்கள்

Thursday, August 19, 2010

உங்கள் கணினி Registry Clean செய்ய Wise Registry Cleaner Free

 நாம் கணினியில் சில மென்பொருட்களை இன்ஸ்டால் செய்திருப்போம். நாளடைவில் அது வேண்டாமென்று Uninstall செய்து விடுவோம். ஆனால் அப்படி செய்யும் போது சில தேவையில்லாத பைல்கள் நம் Registry லேயே தங்கிவிடும்.  இதனால் தான் நம் கணினி மிகவும் மந்தமாக  வேலை செய்யும்.

இந்த பைல்களை அழித்தாலே நம் கணினியின் வேகத்தை கண்டிப்பாக  கூட்ட முடியும் என்பதில் ஐயமில்லை. இதுவரை இந்த வேலைக்கு நான் வேறொரு நிறுவனத்தின் மென்பொருள் உபயோகித்து வந்தேன் ஆனால் இந்த மென்பொருள் அதைவிட நன்றாக உள்ளது. ஆதலால் இந்த Sofware அனைவருக்கும் உபயோக படும் என்று பதிவிடுகிறேன்.



இந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தவும்.

டவுன்லோட் செய்தவுடன் உங்களுக்கு வரும் WDCfree என்ற setup பைலை ரன் செய்து  இன்ஸ்டால் செய்து கொள்ளவும். உங்களுக்கு இரண்டு shortcut keys வந்திருக்கும். அதில் Clear with 1 click  என்பதை டபுள் கிளிக் செய்தாலே உங்கள் கணினியின் registry ஸ்கேன் ஆகி அதில் உள்ள தேவையில்லாத பைல்கள் ஸ்கேன் ஆகி தானாகவே பைல்களை delete செய்து விண்டோவும் க்ளோஸ் ஆகிவிடும். 
   


இந்த வேலைகளை Manual ஆக செய்ய வேண்டுமானால் Wise Registry Cleaner என்ற Shortcut கீயை டபுள் கிளிக் செய்து இயக்கி இடது பக்க மூலையில் மேலே உள்ள Scan என்ற பட்டனை அழுத்தினால் உங்களுடைய கணினி ஸ்கேன் ஆகி 


வந்ததும் நான்காவதாக உள்ள Fix என்ற  பட்டனை அழுத்தி உங்கள் கணினியை கிளீன் செய்து கொள்ளுங்கள்.


 முன்னர் உங்கள் கணினி இயங்கியதற்கும் இப்பொழுது இயங்குவதற்கும் நிறைய மாற்றங்கள் கண்டிப்பாக தெரியும்.


டுடே லொள்ளு  
Photobucket
மணியடிச்சாச்சு எல்லோரும் வந்து உங்க கமெண்ட்ட சொல்லிட்டு போங்க.


நண்பர்கள் நேரமிருந்தால் மறக்காமல் ஓட்டு போட்டு விட்டு செல்லவும்.  

Tuesday, August 17, 2010

நம் பிளாக்கை Google,yahoo,Bing போன்ற Search Engine-ல் இணைக்க

இணைய உலகில் தாதாவாக திகழும் மூன்று முக்கிய Search Engine-ல் நம்முடைய பிளாக்கை இணைப்பது என்று பார்ப்போம். இதன் மூலம் நம் தளத்திற்கு மேலும் பல வாசகர்களை கவர முடியும் என்பதில்  மாற்று கருத்து இல்லை. பிளாக்கருக்கு SEO (Search Engine Optimization) கிடைத்தால் மட்டுமே நம்முடைய பிளாக் பிரபலமடையும் என்பதில் மாற்று கருத்து இல்லை.





நம் தளத்தை எப்படி பிரபலமாக்குவது என்று சென்ற பதிவில் பார்த்தோம். அதில் இந்த குறிப்பும் கொடுத்து உள்ளேன். அதை எப்படி இணைப்பது என்று இங்கு விரிவாக காண்போம்.



Google Web Master Tools  



கூகுள் நிறுவனத்தின் Search Engine-ல்  இணைப்பதற்கு இந்த லிங்கில் செல்லுங்கள் https://www.google.com/webmasters/tools . உங்களுடைய Email Id , Password கேட்டால் கொடுத்து விட்டு உள்ளே செல்லுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.




Google Webmaster
  • வரும் விண்டோவில் படத்தில் காட்டியுள்ளதை போல் Add a site என்பதை கிளிக் செய்து உங்களுடைய URL கொடுத்து Continue என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.






Google webmasters
  • நீங்கள் கொடுத்த URL அங்கு சேர்ந்திருக்கும். அந்த URL மீது Click செய்யவும். உங்களுக்கு கீழே இருக்கும் விண்டோ வரும். 




google webmaster tool


  • இதில் Site maps என்ற இடத்தில் உள்ள Submit a Sitemap என்ற லிங்க் மீது  கிளிக் செய்யவும். உதவிக்கு மேலே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும். 

  • இப்பொழுது உங்களுக்கு ஒரு சிறிய text box ஓபன் ஆகும் அதில் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து அந்த இடத்தில் பேஸ்ட் செய்யவும். 

  • பேஸ்ட் செய்து விட்டு பக்கத்தில் உள்ள Submit sitemap என்பதை கிளிக் செய்தால் போதும் உங்களுடைய பிளாக்  Google Search Engine-ல் சேர்ந்து விடும். 

  • முக்கியமான விஷயம் நீங்கள் கொடுத்த Sitemap பக்கத்தில் பச்சை நிறத்தில் டிக் குறி வந்தால் மட்டுமே நீங்கள் கொடுத்த Site Map சரியாக Verify செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்.




Google Sitemap


  •   இல்லை என்றால் சற்று நேரம் பொருத்து இருந்து பார்க்கவும் டிக் குறிக்கு பதில் வேறு ஏதேனும் குறி வந்தால் உங்கள் Sitemap திரும்பவும் ReSubmit செய்யவும். 

Update Not verified owenship


  • நீங்கள் சரியான பிளாக்கர் ஐடி கொடுத்தபிறகும் Not verified owenship என்று error வந்தால் அங்கு அவர்கள் கொடுத்துள்ள Add Meta tag என்ற ஆப்சனை கிளிக் செய்து கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி கொள்ளுங்கள்.

  •   உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Design- EditHtml பகுதிக்கு சென்று <head> இந்த வரியை கண்டு பிடித்து காப்பி செய்த கோடிங்கை இதற்க்கு கீழே/பின்னே பேஸ்ட் Save Template கொடுத்து விடவும் 

  • செய்துவிட்டு திரும்பவும் Google வந்து தளத்தில் உள்ள Verify பட்டனை அழுத்தினால் போதும் உங்கள் பிளாக் verify ஆகிவிடும்.  





Bing & yahoo Search Engine 
அடுத்து கூகுளிற்கு அதுத பெரிய Search Engine-களான Bing மற்றும் yahoo எப்படி இணைப்பது  என்று இங்கு பார்க்க போகிறோம். இதில் இணைப்பது மிகவும் சுலபம். இதற்காக Sitemap Generator என்ற அருமையான tool உள்ளது.  கீழே உள்ள லிங்கில் க்ளிக் செய்யுங்கள் Sitemap Generator இதில் சென்றால் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.



Sitemap Generator
இதில் உங்கள் URL கொடுத்து Create Blogger Sitemap என்ற பட்டனை அழுத்தவும். உங்களுடைய URL சேர்ந்து உங்களுக்கு கீழே இருப்பதை போல வரும் 





Sitemap Generator
  நான் வட்டமிட்டு காட்டியுள்ள பகுதிகளில் நீங்கள் கிளிக் செய்தால் போதும் உங்கள் பிளாக் Search Engine-ல் சேர்ந்து விடும். அவ்வளவு தான் உங்களுடைய பிளாக்கை மிகப்பெரிய மூன்று Search Engine-ல் சேர்த்து விட்டோம். இதன் மூலம் புதிய வாசகர்கள் நம் தளத்திற்கு வருவார்கள். 
பதிவில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும்.


டுடே லொள்ளு 



Photobucket
funny animation


அப்பாடா இனிமே நம்மால யாரும் பார்க்க முடியாது தப்பிச்சிட்டேன்டா சாமி.


நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டு விட்டு செல்லவும்.

இணையத்தில் பதிவை பிரபலமாக்கவும், விளம்பரங்களை பெறவும்வழிகள்

நாம் நேற்று இணையத்தில் பிளாக்கர் மூலம்  சம்பாதிக்க நூறு இணைய தளங்களுக்கு மேல் பார்த்தோம். அவைகளை பற்றி சற்று விரிவாக கீழே பார்ப்போம். நம்முடைய பிளாக்கருக்கு இணையத்தில் கிடைக்கும்  விளம்பரங்கள் மூன்று முறைகளில் செயல் படுகிறது அவையாவன

விளம்பரங்கள் செயல் படும் முறைகள்  

  1. Pay per Click - இந்த வகை விளம்பரங்கள் ஒரு கிளிக் செய்தால் இவ்வளவு தொகை என்று பிரித்து அதன் அடிப்படையில் செயல்படும்.

  2. Page per Impression - இந்த வகை ஒவ்வொரு முறையும் நம் தளத்தில் விளம்பரங்கள் லோடு ஆகி வரும் எண்ணிக்கை வைத்து செயல்படும். நம் கணினியின் IP எண்ணை வைத்து கணக்கிடபடுகிறது.

  3. Pay per Action - இந்த வகை விளம்பரங்கள்  நம் தளத்தில் வாசகர்கள் கிளிக் செய்து அந்த குறிப்பிட்ட பொருளை வாங்கினால் மட்டுமே நமக்கு வருவாய் வரும்.   

Contexual Ads
நம்முடைய பிளாக்கருக்கு வரும் விளம்பரங்களில் அதிக பிரபலமானதும் அதிக வருவாய் ஈட்டி தருவதும் இந்த வகை விளம்பரங்கள் தான். நம் வாசகர்கள் செய்யும் ஒவ்வொரு கிளிக்கிற்கும் குறிப்பிட்ட தொகை என்று நிர்ணயித்து வழங்குவார்கள். பெரும்பாலும் இந்த வகை விளம்பரங்கள் pay per click வகையை சேர்ந்தது.
சிறந்தவை  :   Google Adsense, Kontera  


In-Text Advertising Programs :
 நீங்கள் கூட இணையத்தில் பார்த்திருப்பீர்கள் ஏதேனும் எழுத்தின் மீது நம் மவுசின் கர்சரை வைத்தால் அதிலிருந்து ஒரு விளம்பரம் தோன்றும். இந்த வகை விளம்பர்கன் TEXT LINK ADS எனப்படும். இந்த விளம்பரங்களுக்கு நாம் தனியாக நம் பிலாக்கரில் இடம் ஒதுக்க தேவையில்லை நம் பதிவில் உள்ள எழுத்தில் லிங்க் கொடுத்தாலே போதும் என்பது இதன் தனி சிறப்பு. பிளாக்கில் இணைக்க இணையத்தில் உள்ள விளம்பரங்களை பற்றி 

சிறந்தவை:   Info links இந்த தளம் சென்று உங்கள் பிளாக்கர் முகவரி மற்றும் உங்கள் விவரங்களை அவர்களுக்கு அனுப்பவும்.  





Affiliate Ads 
நம் தளத்திற்கு வரும் வாசகர்கள் நம் தளத்தில் உள்ள விளம்பர லிங்க் மீது கிளிக் செய்து அந்த பொருளை வாங்கினால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட தொகையை நமக்கு வழங்குவார்கள் இந்த வகை விளம்பரங்கள் Affiliate Ads எனப்படும். இது போல விளம்பரங்களை நம் பிளாக்கிற்கு பெறுவது மிகவும் சுலபம்.
(சிறந்தவை)  ebay Affiliate , Amazon Affiliate



Sponsor Reviews 
இது சற்று வித்தியாசமான முறை ஆகும்.  சில நிறுவனங்கள் நம்மை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்கள் நிறுவனத்தை பற்றியோ அல்லது தயாரிக்கும் பொருட்களை பற்றியோ அல்லது அவர்களின் இணையதளத்தை பற்றியோ உயர்த்தி பதிவு எழுத பணம் தருவாகள்.

விளம்பரங்கள் பெற : pay per post தளத்திற்கு சென்று பெறவும்.





நீங்கள் எந்த விளம்பரதாரர்களின் தளத்திற்கு சென்றாலும் அனைத்து தளத்திற்கும் அடிப்படை தேவை உங்களுடைய தளத்தின் Rank அதனால் கீழே உள்ள சில முக்கியமான டிப்ஸ் கொடுத்துள்ளேன்.  அதனை கடைபிடித்தால் நிச்சயமாக நம் பிளாக்கை பிரபல மாக்கி அதன் மூலம் நம் வருவாயை பெருக்கி கொள்ள முடியும். 





பிளாக்கை பிரபலமாக்குவது எப்படி :- 

  • நம் பிளாக்கில் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு பயன்  தரும் விஷயத்தையோ அல்லது சுவாரஸ்யமான விஷயத்தையோ எழுத வேண்டும். 

  • நம் பதிவின் தலைப்பை தேர்ந்தெடுப்பதில் மிக கவனம் செலுத்தவேண்டும் . ஏனென்றால் தலைப்பை வைத்து தான் வாசகர்கள் நம் தளத்திற்கு வருவார்கள் மற்றும் பதிவிற்கு ஏற்ற தலைப்பை தேர்ந்தெடுக்கவும்.

  • ADULDTS ONLY பதிவுகளை தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் நம் வாசகர்கள் எண்ணிக்கை கண்டிப்பாக குறைய வாய்ப்புள்ளது.

  • நம் பிளாக்கின் URL கூகுள், யாகு, பிங் போன்ற தேடியந்திங்களில் சேர்க்கவும். இது மிகவும் முக்கியமான ஒன்று.  இதன் மூலம் நாம் அதிக அளவு புதிய வாசகர்களை பெற வாய்ப்புள்ளது.  

  • பதிவு எழுதும் போது பதிவின் தலைப்பை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தவும், வாசகர்களை கவரக் கூடியதாகவும் அதே சமயம் பதிவிற்கு சம்பந்தமாகவும் தேர்வு செய்ய வேண்டும்.    

  •  நம் பிளாக்கில் எவ்வளவு வாசகர்கள் வருகிறார்கள் என்பதைவிட எவ்வளவு நேரம் ஒவ்வொரு பக்கமும் பார்வையிடப்படுகிறது என்பதை வைத்தே ALEXA RANK மதிப்பிட படுகிறது. ஆகவே நம் பிளாக்கை வாசகர்களை கவரும் விதத்தில் அழகாக மாற்றி கொள்ளுங்கள்.

  • உங்கள் பதிவில் படத்தினை சேர்த்தால் கண்டிப்பாக அந்த பதிவிற்கு ஏற்ற தலைப்பை கொடுக்கவும். ஏனென்றால் Google Images போன்ற தேடியந்திரகளில் தேடும் போது தலைப்பை வைத்தே படங்கள் தேர்வு பக்கத்தில் வரும்.    

  •  உங்கள் பிளாக்கிற்கு ஏற்ற keyword செலக்ட் செய்து உங்கள் டெம்ப்ளேட்டில் meta tag சேர்த்து விடவும். 

  • உங்கள் பிரௌசரில் Alexa Rank toolbar சேர்க்கவும். நிச்சயமாக இதன் மூலம் நம் பிளாக்கின் ரேங்க் உயர வாய்ப்புள்ளது.  

  • முக்கியமான விஷயம் தவறாமல் பதிவு போடவும் அதாவது அடிக்கடி பதிவு போடுவது என்று அர்த்தமல்ல தினமும் ஒரு பதிவு போட்டால் தினமும் ஒரு பதிவு போடவும். அல்ல வாரம் ஒருமுறை போட்டால் தவறாமல் அந்த நாளில் போட்டு விடவும். 

இந்த குறிப்புகளை கண்டிப்பாக நீங்கள் கடைபிடித்தால் கண்டிப்பாக உங்கள் பதிவை பிரபல மாக்கலாம். பின்பு விளம்பரங்களையும் பெறலாம்.



டுடே லொள்ளு  
Photobucket
ரோபோ சூட்டிங் போகணும்பா யாராவது வண்டி வச்சிருந்தால் கொஞ்சம் டிராப் பண்ணுங்கப்பா 





பதிவு பிடித்திருந்தால் ஒரு ஓட்டு போட்டு விட்டு செல்லவும்.

Sunday, August 15, 2010

பிளாக்கர் மூலம் சம்பாதிக்க (Make Money Online) 100+ இணையதளங்கள்

இது என்னுடைய 200 வது பதிவு  பதிவு. எழுதும் அனைவரும் தங்கள் பிளாக்கர் பிரபலமாகவேண்டும் என்று நினைப்பது உண்டு. அப்படி நம் பிளாக்கர் பிரபலம் ஆகும் போது நம்முடைய பிளாக்கை வைத்தே நாம் பெரியளவு   பணத்தையும் சம்பாதிக்க வழி உள்ளது. இங்கு கீழே  பிளாக்கர் மூலம் சம்பாதிக்க (Make Money Online) 100+  இணையதளங்கள் பட்டியலை கீழே கொடுத்துள்ளேன். தாங்கள் அந்த தாங்கள் இந்த தளங்களை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான பணத்தை சம்பாதிக்கவும் வழி உள்ளது. 

Advertising Programs





Selling Text Link Ads









In-Text Advertising Programs







RSS Feed Ads









Pop-ups and Pop-unders







Selling Direct Ads









 இந்த இணையதளங்களில் நீங்கள் உங்கள் பிளாக்கினை சேர்த்து அக்கௌன்ட் ஓபன் சிது கொண்டு உங்கள் மாத வருமானத்தை பெருக்கி கொள்வோம்.



டுடே லொள்ளு 
Photobucket
அய்யா இனிமே நானும் என் தளத்துல advertise ment போட்டு கொள்வேன். 
பதிவு பிடித்திருந்தால் உங்களுடைய பொன்னான வாக்கினை போட  மறக்கவேண்டாம் 



குறிப்பு: இந்த தளங்களை வைத்து நாம் எப்படி சம்பாதிப்பது என்று அடுத்த பதிவில் தெளிவாக இடுகிறேன்.

Saturday, August 14, 2010

யோகா செய்வது எப்படி?

வரலாறு


5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிர்ஷி தியான முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும். யோகாசனம் என்பது அந்த காலத்தில்  வாழ்ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள் பறைவகள் இவைகளின் செயல்களை பார்த்து வடிவமைத்தார்கள் என்று பல தகவல்கள் இருந்தாலும் . இந்த அறிய பொக்கிசத்தை முதன் முதலில் உலகுக்கு எழுத்து வடிவில் அளித்தவர் பஞ்சலி முனிவர் தான். இந்த நூலில் அத்தனையும் எழுத்து மூலமாகவே இருந்தது ஆனால் அதற்கு பிறகு வந்த நூல்கள் செய்யும் முறைகள் படங்களோடு நமக்கு கொடுத்து உள்ளார்கள்.
முக்கியமான யோகாசனங்கள் சில: 



  • உட்காசனம்

  • பத்மாசனம்

  • வீராசனம்

  • யோகமுத்ரா

  • உத்தீதபத்மாசனம்

  • சானுசீரானம்

  • பஸ்திமோத்தாசனம்

  • உத்தானபாத ஆசனம்

  • நவாசனம்

  • விபரீதகரணி

  • சர்வாங்காசனம்

  • ஹலாசனம்

  • மச்சாசனம்

  • சப்தவசீராசனம்

  • புசங்காசனம்

  • சலபாசனம்

  • தணுராசனம்

  • வச்சிராசனம்

  • மயூராசனம்

  • உசர்ட்டாசனம்

  • மகாமுத்ரா

  • அர்த்தமத்த்ச்யோந்தராசனம்

  • சிரசாசனம்

  • சவாசனம்

  • மயுராசனம்

  • உசர்ட்டாசனம்

  • அர்த்த மத்ச்யோந்திராசனம்

  • அர்த்த சிரசானம்

  • சிரசாசனம்

  • நின்ற பாத ஆசனம்

  • பிறையாசனம்

  • பாதாசுத்தானம்

  • திருகோணசனம்

  • கோணாசனம்

  • உட்டியானா

  • நெளலி

  • சக்கராசனம்

  • சவாசனம்/சாந்தியாசனம்

  • பவனமுத்தாசனம்

  • கந்தபீடாசனம்

  • கோரசா ஆசனம்

  • மிருகாசனம்

  • நடராசா ஆசனம்

  • ஊர்த்துவ பதமாசனம்

  • பிரானாசனம்

  • சம்பூரண சபீடாசனம்

  • சதுரகோனோசனம்

  • ஆகர்சன தனூராசனம்

  • ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்

  • உருக்காசனம்

  • ஏக அத்த புசங்காசனம்

  • யோகா நித்திரை

  • சாக்கோராசனம்

  • கலா பைரப ஆசனம்

  • அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்

  • கவையாசனம்

  • பூர்ண நவாசனம்

  • முக்த அகத்த சிரசாசனம்

  • ஏகபாத சிரசாசனம்

ஏன் யோகாசனம் செய்யவேண்டும் : 

  •  இன்றைய  கணினி உலகில் அனிவரும் உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டானாம் "பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட ஆசை வரும்" என்பது போல்  நமக்கு நோய் என்று வந்து மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.

  • மருத்துவரிடம் சென்று அவர் தரும் வேதிப்பொருளை (மாத்திரைகளை) வாங்கி சாப்பிடுவதை விட   இந்த யோகாசனகளை செய்தால் நம் உடலோடு சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு  காணப்படும்.  

  • ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசானங்கள்   இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

  • ஆசானங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை   அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள்.

  • நாம் அன்றாட வாய்வில் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் ஓவ்வொரு ஆசான்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  • ஒவ்வொரு நாளும் பல் தேப்பது குளிப்பது சாப்பிடுவது எப்ப எந்தளவுக்கு முக்கியமோ உடற்பயிற்சி செய்வதும் அந்த அளவுக்கு முக்கியம்.

  • உலகில் எண்ணிலடங்கா ஆசானங்கள் உள்ளன இருந்தாலும் சில குறிப்பிட்ட ஆசனங்களை  செய்தாலே நம் வாழ்நாள் முழுதும் நோய்நொடியின்றி புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.

இங்கு கீழே சில நம் அன்றாட வாழ்விற்கு தேவையான சில முக்கியமான யோகாசனங்களை பற்றி செய்யும் முறை செய்வதால் உள்ள நன்மை ஆகியவைகளை விளக்கி உள்ளேன். அனைவரும் இதை கடைபிடித்து பயன் பெறவும்.



பத்மாசனம் 


நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலது தொடையின் மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து நேரகாநிமிர்ந்து  உட்காரவும்.நம் பாதங்கள் மேல்புறத்தில் பார்த்தது போல இருக்க வேண்டும். குண்டாக இருப்பவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இது பழக பழக சரியாகிவிடும்.
பயன்கள் :  இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்க படும், கூன் முதுகு சாரியாகும், உடலில் சுறுசுறுப்பு உண்டாகும். 


தணுராசனம்


குப்புற படுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் முழங்காலுக்கு மேலுள்ள பகுதியை இரண்டு கைகளை பின்னே நீட்டி பிடித்து மூச்சை பிடித்து உங்கள் தலையை மேலே தூக்கி நேராக பார்க்கவும். இப்பொழுது நிதானமாக மூச்சு விடவும். இதே போல் ஐந்து அல்லது ஆறு முறை இந்த பயிற்சியை செய்யலாம்.

 பயன்கள் : நம் வயிற்றில் உள்ள வேதிபொருலான அட்ரினல்,தைராய்டு, பிட்யுட்டரி போன்ற சுரப்பிகளை சரிவர இயங்க செய்கிறது. வயிற்றின் கோளாறுகளை நீக்குகிறது, உடலுக்கு சுறுசுறுப்பு அளிக்கிறது.





சிரசாசனம்  



தரையில் ஒரு போர்வையை விரித்து தலையை கீழே வைத்து கைகளை ஆதரவாக வைத்து கொண்டு அப்படியே உங்கள் காலை மேலே தூக்க வேண்டும். சரியாக 90 டிகிரி கோணத்தில் தலைகீழாக நிற்க வேண்டும். குறைந்தது ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும். இந்த ஆசனத்தை இருதய சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ளவர் கணிப்பாக செய்ய கூடாது.
பயன்கள்:  தினமும் இதனை செய்வதால் நம் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும், மூளை சுறுசுறுப்பாகும்.
வஜ்ராசனம் : 


இரு கால்களை பின்புறமாக மடக்கி உட்கார்ந்து நம் பின்புறங்கள் இரு கால்களின் மேல் இருக்க வேண்டும். இதே  நிலையில் 15 நிமிடம் இருக்கவும். 
பயன்கள்: வயிற்றில் உள்ள கோளாறுகள், அஜீரணம் குணமாகுதல் , முது முதுகு தண்டுவடம் வலுப்பெறும். 


விபரீதகரணி 


நேராக படுத்துகால்கள் இரண்டையும் 90 டிகிரிக்கு மேலே தூக்க வேண்டும், மேலே தூக்கும் போதே மூச்சை இழுத்து விட்டு கொண்டே இரண்டு கைகளை பக்கவாட்டில் இறுகப் பிடித்து கொள்ள வேண்டும்.  
பயன்கள்: இந்த ஆசனம் செய்வதனால் இடுப்பு,வயிறு,பின்புறச் சதைகள் ஆகியன குறைந்து அழகாகத் தோற்றமளிக்கும்.   



புஜங்காசனம் 





தரையில் குப்புற படுத்து கொண்டு இரண்டு கைகளையும் உங்கள் காதுகளுக்கு நேராக நிறுத்தி உங்களுடைய தலையை மட்டும் தூக்கவும். உங்களுடையை வயிற்று பகுதியை தூக்க கூடாது. 
பயன்கள்:  இந்த ஆசனம் செய்வதனால் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் நீங்கும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும்.     


பச்சிமோத்தாசனம்


இரு கால்களை  நீட்டி நேராக உட்காரவும். இரு கைகளும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே கைவிரல்களால் கால் பாதத்தையோ அல்லது கட்ட விரலையோ பிடித்து கொள்ளவேண்டும். கால்களை மடக்க கூடாது. இந்த நிலையில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருங்கள்.
பயன்கள்: தொப்பை குறைய நல்ல வழி இது, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும். 



நன்றி : விக்கிபீடியா, கூகுள், வேர்க்கடலை விற்றவன்    
டுடே லொள்ளு  
Photobucket

 ஓடு ஓடு இந்த நாசமா போன உலகத்துல நாம இருக்கா வேணாம் நம்ம கிரகதுக்கே போயிடலாம்.





நண்பர்களே பதிவு பிடித்து இருந்தால் ஒரு ஓட்டு போட்டு விட்டு செல்லவும்.

Text Widget

Text Widget