Thursday, August 19, 2010

உங்கள் கணினி Registry Clean செய்ய Wise Registry Cleaner Free

 நாம் கணினியில் சில மென்பொருட்களை இன்ஸ்டால் செய்திருப்போம். நாளடைவில் அது வேண்டாமென்று Uninstall செய்து விடுவோம். ஆனால் அப்படி செய்யும் போது சில தேவையில்லாத பைல்கள் நம் Registry லேயே தங்கிவிடும்.  இதனால் தான் நம் கணினி மிகவும் மந்தமாக  வேலை செய்யும்.

இந்த பைல்களை அழித்தாலே நம் கணினியின் வேகத்தை கண்டிப்பாக  கூட்ட முடியும் என்பதில் ஐயமில்லை. இதுவரை இந்த வேலைக்கு நான் வேறொரு நிறுவனத்தின் மென்பொருள் உபயோகித்து வந்தேன் ஆனால் இந்த மென்பொருள் அதைவிட நன்றாக உள்ளது. ஆதலால் இந்த Sofware அனைவருக்கும் உபயோக படும் என்று பதிவிடுகிறேன்.



இந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தவும்.

டவுன்லோட் செய்தவுடன் உங்களுக்கு வரும் WDCfree என்ற setup பைலை ரன் செய்து  இன்ஸ்டால் செய்து கொள்ளவும். உங்களுக்கு இரண்டு shortcut keys வந்திருக்கும். அதில் Clear with 1 click  என்பதை டபுள் கிளிக் செய்தாலே உங்கள் கணினியின் registry ஸ்கேன் ஆகி அதில் உள்ள தேவையில்லாத பைல்கள் ஸ்கேன் ஆகி தானாகவே பைல்களை delete செய்து விண்டோவும் க்ளோஸ் ஆகிவிடும். 
   


இந்த வேலைகளை Manual ஆக செய்ய வேண்டுமானால் Wise Registry Cleaner என்ற Shortcut கீயை டபுள் கிளிக் செய்து இயக்கி இடது பக்க மூலையில் மேலே உள்ள Scan என்ற பட்டனை அழுத்தினால் உங்களுடைய கணினி ஸ்கேன் ஆகி 


வந்ததும் நான்காவதாக உள்ள Fix என்ற  பட்டனை அழுத்தி உங்கள் கணினியை கிளீன் செய்து கொள்ளுங்கள்.


 முன்னர் உங்கள் கணினி இயங்கியதற்கும் இப்பொழுது இயங்குவதற்கும் நிறைய மாற்றங்கள் கண்டிப்பாக தெரியும்.


டுடே லொள்ளு  
Photobucket
மணியடிச்சாச்சு எல்லோரும் வந்து உங்க கமெண்ட்ட சொல்லிட்டு போங்க.


நண்பர்கள் நேரமிருந்தால் மறக்காமல் ஓட்டு போட்டு விட்டு செல்லவும்.  

8 comments:

GEETHA ACHAL said...

நல்ல பகிர்வு...என் இப்பொழுது எல்லாம் போட்டோஸ் பதிவு போடுவதில்லை...அடிக்கடி அப்படி ஒரு பதிவும் போடுங்க...

கக்கு - மாணிக்கம் said...

நன்றி சசி. யாராவது கோரல் டிரா பயன்பாடுகள் பற்றி எழுதினால் உதவியாக இருக்கும்

மணிபாரதி said...

:))

அஹமது இர்ஷாத் said...

Thanks For Sharing Sasi...

Anonymous said...

Nanri nanbare payanulla pagirvu paaraattukkal

A.சிவசங்கர் said...

cc cleaner அதுவும் நல்லதுங்கதானே

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நல்ல பயனுள்ள பதிவுதான் நண்பரே . நன்றி . நானும் இதை பதிவிறக்கம் செய்து இணைத்துவிட்டேன்

dearbalaji said...

:)] Really my system is working better than before. thanks a lot.

Post a Comment

Text Widget

Text Widget