Thursday, September 30, 2010

ஒரே நேரத்தில் உங்கள் பைலை 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் செய்ய

கணினி இல்லாமல் எதுவும் இல்லை என்று உள்ள இந்த காலக்கட்டத்தில் தினம் தினம் புது புது வைரஸ்கள் உருவாகி நம் கணினியில் பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றன. இந்த வைரஸ்களை தடுக்க எவ்வளவு ஆன்டிவைரஸ்கள் உள்ளன. இதில் என்ன பிரச்சினை என்றால் ஒவ்வொரு ஆன்ட்டிவைரசும் ஒவ்வொரு விஷயத்தில் சிறந்ததாக உள்ளது. ஆகையால் நம் பைலை எப்படி ஒரே நேரத்தில் 15+ ஆன்ட்டிவைரசில் ஸ்கேன் செய்வது என்று காணலாம்.
ஆனால் நம் கணினியில் ஒன்றிற்கும் மேற்பட்ட  ஆன்டிவைரஸ் நிறுவ சில நிறுவனங்கள் ஒத்துழைப்பதில்லை. ஆகையால் நாம் ஒரே ஒரு ஆன்டிவைரஸ் மட்டுமே நம் கணினியில் நிறுவ முடிகிறது. ஆகையால் ஒரு ஆன்டிவைரசில் மட்டுமே நம் பைல்களை ஸ்கேன் செய்து வந்தோம்.

  • குறிப்பாக நமக்கு இமெயில் வரும் பைல்கள் நம்பக தன்மை வாய்ந்ததா என்று இந்த முறையில் அறிந்து கொள்ளலாம்.

  • இந்த குறையை போக்க நமக்கு இந்த தளம் உதவுகிறது. இந்த தளம் சென்றவுடன் உங்களக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  • மேலே படத்தில் காட்டியுள்ள இடத்தில் உள்ள Choose file என்பதை க்ளிக் செய்யுங்கள்.

  • உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்ய விரும்பும் பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

  • அடுத்து அதற்கு கீழே உள்ள Submit file என்பதை கிளிக் செய்யுங்கள்.உதவிக்கு கீழே உள்ள பதத்தை பார்த்து கொள்ளவும்.

  • அவ்வளவு தான் நீங்கள் தேர்வு செய்த பைல் வைரஸ் ஸ்கேன் ஆகி ஒவ்வொரு ஆன்டி வைரசிற்கு நேராக அதான் முடிவுகள் வரும்.



மேலே படத்தில் உள்ளதை போல அனைத்து ஆன்டிவைரசிலும் Found nothing என்று முடிவு வந்தால் உங்கள் பைல் 100% பாதுகாப்பாக உள்ளது. நீங்கள் இந்த பைலை தைரியமாக உபயோக படுத்தி கொள்ளலாம்.
இந்த தளம் செல்ல இந்த லிங்கில் கிளிக் http://virusscan.jotti.org/enசெய்யவும்
டுடே லொள்ளு 
Photobucket
ச்சே ஒரு நிமிஷத்துக்கு ஒரு முறை இந்த எந்திரன்  ட்ரெயிலர போட்டு இம்ச படுத்துராம்பா 

6 comments:

Praveen-Mani said...

பகிர்வுக்கு நன்றி சசி அண்ணா...உண்மையாலுமே நிமிஷத்துக்கு ஒரு முறை ட்ரெயிலர போட்டு இம்சிக்கிராய்ங்க...டுடே லொள்ளு அருமை

சைவகொத்துப்பரோட்டா said...

மிக அவசியமான தகவலுக்கு நன்றி சசி.

எஸ்.கே said...

இது பாதுகாப்பான தளமா? ஏனெனில் இப்படி ஸ்கேன் செய்யுங்கள் என சொல்லும் தளங்கள் மூலமாகவும் வைரஸ் பரவுவதாக படித்திருக்கிறேன். அனுபவமும் பட்டிருக்கிறேன்!

Jiyath ahamed said...

இது உண்மையிலேயே அவசியமானதொன்று. பகிர்விற்கு மிக்க நன்றி. அசத்தல் தான். சூப்பர்... சூப்பர்...

மாணவன் said...

மிகவும் பயனுள்ள தகவல் சசி அண்ணே
பகிர்ந்தமைக்கு நன்றி
லொள்ளு சூப்பர்

Anonymous said...

Today Lollu! Rombavae Rasithaen. Let your good work continue. All the Best. - Rajan

Post a Comment

Text Widget

Text Widget