Thursday, September 2, 2010

பதிவர்களுக்கு பிளாக்கரில் மேலும் ஒரு புதிய பயனுள்ள வசதி Automatic Popular post, Stats Widget

நாம் இதற்க்கு முன்னர் Popular post விட்ஜெட் சேர்ப்பதற்கு சில கோடிங் கொடுத்து சேர்த்து இருப்போம். நானும் முந்தைய பதிவில் போட்டு இருந்தேன். ஆனால் அதில் என்ன பிரச்சினை என்றால் நம்முடைய தமிழ் எழுத்துக்களில் தலைப்பு இருப்பதால் இது நம் தலைப்பை காட்டாது அதற்கு பதில் நம்முடைய பதிவின் URL தான் தெரியும் இதனால் நம் வாசகர்களுக்கு நம் பதிவின் தலைப்பு தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கும். இனிமேல் இந்த கவலையே வேண்டாம் பிளாக்கரிலேயே இந்த Popular Post வசதியை அறிமுக படுத்திவிட்டார்கள்.

  • இதில் எந்த Language பிரச்சினையும் இல்லை. நம்முடைய தலைப்பு தமிழில் இருந்தாலும் தெள்ள தெளிவாக நம் தலைப்பை காட்டுகிறது. 

  • நம்முடைய பதிவில் உள்ள படத்துடன் சேர்த்து காட்டும் வசதி உள்ளது.

  • நம்முடைய பதிவை பற்றி சிறு முன்னோட்டதை(snipet) காட்டும் வசதியும் இதில் உள்ளது.  

  • இந்த வசதியை கொண்டு வர இந்த லிங்கில் செல்லுங்கள்.Blogger Draft

  • Design

  • Add a Gadget- சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.




Popular post
இதில் பார்த்தால் தெரியும் Popular post widget முதலில் இருக்கும்.  விட்ஜெட்டுக்களின் பக்கத்தில் உள்ள கூட்டல் குறியை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 



Popular post


  • இந்த விண்டோவில் உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து குறிப்பாக உங்கள் விட்ஜெட்டில் படமும், முன்னுரையும் தேவையில்லை தலைப்பு மட்டும் தெரிந்தால் போதும் என்று நினைத்தால் அங்கு உள்ள இரண்டு tick mark எடுத்து விடவும். 

  • அடுத்து படத்தில் காட்டியுள்ளதை போல் Save என்ற பட்டனை அழுத்தினால் போதும் இந்த Popular Post widget உங்கள் தளத்தில் சேர்ந்திருக்கும். 

  • இனி உங்கள் வாசகர்களுக்கு எந்த சிரமமும் இன்றி உங்களுடைய பிரபலமான பதிவுகளை கண்டு ரசிப்பார்கள் 

  • புதியர்களுக்கும் உங்களுடைய பதிவுகள் சென்றடையும்.

  • இனி உங்களுடைய பதிவின் Hit பொறுத்து இந்த விட்ஜெட்டின் பதிவுகள் தானாகவே மாறிக்கொள்ளும். நாம் மாற்றவேண்டிய அவசியமில்லை.



இதே முறையில் நீங்கள் Blogger Stats widget சேர்த்து கொள்ளுங்கள்.


டுடே லொள்ளு 
Photobucket
இந்த முறையாவது நம்ம நாட்டுக்கு தங்க பதக்கம் வாங்கணும் பாத்துடா 


நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கீழே உள்ள இன்ட்லியிலும்,மேலேயுள்ள தமிழ் மணத்திலும் உங்கள் ஓட்டு  போட்டு செல்லுங்கள். 

12 comments:

புதிய மனிதா.. said...

nice tips.........

தேனம்மை லெக்ஷ்மணன் said...

nice post Sas.. thx for sharing..

Chitra said...

:-) Thank you.

முனைவர்.இரா.குணசீலன் said...

அருமையான பகிர்வு நண்பா..

karurkirukkan said...

உங்கள் ப்ளோகில் உள்ளது போல எப்படி தனியாக ஒரு பக்கத்தை புதிய விண்டோவில் ஓபன் செயுயம்படி செய்வது ,

தமிழ் உதயம் said...

எனது Add a Gadgetல், popular posts, blog stats இரண்டும் இல்லை. ஏன்.

பதிவுலகில் பாபு said...

அருமையான தகவல்களைக் கொண்ட பதிவு.. நன்றி..

rk guru said...

பதிவர்கள் தங்கள் பதிவுகளை மெருகேற்றவே உங்கள் பதிவுகள் நாளுக்குநாள் மெருகேறுகிறது எங்கள் உள்ளங்களில்.....நல்ல தகவல் வாழ்த்துகள் சசி...!

நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நன்றி நண்பா உங்கள் தேடல் தெடரட்டும்

Mrs.Menagasathia said...

thxs a lot!!

அன்பரசன் said...

useful sasi

Meerapriyan said...

sasi vazhka...niraiya payanulla pathivukal. naanum email mulam santhekam kedka thayaaraaki vidden-meerapriyan

Post a Comment

Text Widget

Text Widget