Monday, September 27, 2010

உங்கள் பிளாக்கில் வைரஸ் உள்ளதா என கண்டறிய

இந்த வைரஸ் மனிதனை தான் ஒரு ஆட்டு ஆட்டுதுன்னு பார்த்தால் கணினியை கூட விட்டு வைக்க மாட்டேங்குது. இன்னும் ஒரு படி மேல் சென்று வலைத்தளங்களை கூட விட்டு வைப்பதில்லை. பெரிய வலைத்தளங்கள் கூட இந்த பிரச்சினையால பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நம் தளத்தை நாம் பாதுகாப்பாக வைத்து கொள்ள நம் பிளாக்கில் வைரஸ் உள்ளதா என பரிசோதிக்கலாம் வாருங்கள்.

இந்த சேவையை நமக்கு ஒரு தளம் வழங்குகிறது. இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.



  • அதில் நீங்கள் SUBMIT URL என்ற பட்டனை அழுத்தி உங்களுக்கு வரும் கட்டத்தில் நீங்கள் உங்களுடைய பிளாக்கின் URL கொடுக்கவும்.  

  • பிறகு அதற்க்கு அருகே உள்ள SUBMIT URL என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் பிளாக் ஸ்கேன் ஆகும்.உங்களுக்கு கீழே இருப்பதை போல முடிவு வரும்.

  • நான் வட்டமிட்டுள்ள இடத்தில் உங்கள் தளத்தின் முடிவு வந்திருக்கும். 

  • ஒரே நேரத்தில் ஏழு இயங்கு தளங்களில் உங்கள் பிளாக் பரிசோதிக்கப்படும். 

  • இந்த ஏழு தளங்களில் Clean site என்று வந்தால் உங்கள் பிளாக் எந்த வைரசினாலும் பாதிக்க படவில்லை பாதுகாப்பாக உள்ளது. 

  • உங்கள் தளத்தில் ஏதேனும் வைரஸ் இருந்தால் அந்த பட்டியலில் காண்பிக்கப் பட்டுவிடும்.

  • இதே போல் வாரம் ஒருமுறை உங்கள் பிளாக்கை பரிசோதித்து பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.

  • இந்த தளம் செல்ல இந்த லிங்கில் http://www.virustotal.com/ செல்லுங்கள்

டுடே லொள்ளு 
free myspace graphics :: myspace images :: myspace pictures free myspace layouts


சனியனே நீ வந்ததால் தானே என் தூக்கமெல்லாம் கெட்டு போச்சு.

14 comments:

அஹமது இர்ஷாத் said...

நல்ல பதிவு..அந்த தளத்தின் முகவரி எங்கே சசி?

தமிழ் உதயம் said...

பரிசோதித்து பார்த்தாயிற்று. clean site. பகிர்வுக்கு நன்றி.

Praveen-Mani said...

என்னுடைய தளத்தையும் பரிசோதித்து பார்த்தேன்....clean site தான் ...நன்றி சசி அண்ணா

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றி நண்பா, இன்றய லொள்ளு பார்த்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது.

எஸ்.கே said...

நன்றி நண்பரே நன்றி!

எஸ்.கே said...

மிக மிக அவசியமான பதிவு. இப்போது பல பிளாக்குகளில் வைரஸ் பிரச்சினை உள்ளது!

prabhadamu said...

அவசியமான பதிவு. நன்றி நண்பரே...

Mrs.Menagasathia said...

தேவையான பதிவு!! நன்றி சசி!!

V.Radhakrishnan said...

மிகவும் பயனுள்ள பதிவு.

அன்பரசன் said...

Useful sasi.

பிரவின்குமார் said...

வழக்கம்போல் மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே.!

Venu said...

நல்ல பதிவு நண்பா. என்னுடய பிளாக்கை சோதித்து பார்த்தேன் Clean Site வந்துருச்சு. மிக்க நன்றி

மனசாட்சியே நண்பன் said...

அய்யா நன்றி பல உங்களுக்கு

karthikeyan said...

நன்றி நன்றி நன்றி

Post a Comment

Text Widget

Text Widget