Thursday, September 16, 2010

உங்கள் தளம் ஓபன் ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறதா?

உங்கள் தளம் ஓபன் ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறதா? ஆம் என்றால் உங்களுக்கான பதிவு இது. நம்முடைய தளத்தை வேகமாக வைத்து கொள்வது நம்முடைய முக்கிய கடமையாகும். ஏனென்றால் நம் தளத்திற்கு வரும் வாசகர்கள் தளம் மெதுவாக இயங்கினால் அவர்கள் நம் தளத்தை விரும்ப மாட்டார்கள். அதனால் நம்முடைய வாசகர்களை நாம் இயக்க நேரிடும். இந்த குறையை தவிர்க்கவே இந்த பதிவு இதன் படி செய்தால் உங்கள் தளம் கண்டிப்பாக வேகமாக இயங்கும்.

STAGE -I

  • உங்கள் தளத்தில் உள்ள படத்தின் அளவை குறைக்கவும். வாசகர்கள் தேவையென்றால் பெரிது படுத்தி பார்த்து கொள்வார்கள்.

  • உங்கள் தளத்தில் ஏதேனும் Flashல் உருவான விட்ஜெட் இருந்தால் நீக்கி விடவும். இது லோடு ஆக அதிக நேரம் எடுத்து கொள்ளும்.

  • முடிந்த வரையில் பிலாக்கரின் default விட்ஜெட்டுகளை மட்டுமே பயன் படுத்துவது சிறந்தது.

  • உங்களுடைய தளத்தில் உள்ள அனைத்து விளம்பர பலகைகளையும் நீக்கி விடுங்கள். தேவையென்றால் புதியதாக சேர்த்து கொள்ளவும். 

  • உங்கள் தளத்தில் தேவையற்ற தற்போது உபயோகிக்காத விட்ஜெட்டுகளை கண்டறிந்து நீக்கி விடவும்.

  • உங்களுடைய முகப்பு பக்கத்தில் முழு பதிவும் தெரிவதற்கு பதில் ஒரு READMORE என்ற லிங்க் கொடுக்கலாம்.

STAGE- II

  • மேலே உள்ள மாற்றங்கள் செய்த பிறகும் உங்கள் தளம் மெதுவாக தான் இயங்கு கிறதா. 

  • எந்த விட்ஜெட் லோடு ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறது என்று அறியமுடியவில்லையா கவலையை விடுங்கள் உங்களுக்கு ஒரு தளம் உள்ளது.

  • இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  • இந்த தளத்திற்கு செல்ல லிங்க் - pingdom

  • அதில் கொடுக்க பட்டிருக்கும் காலி கட்டத்தில் உங்களுடைய தளத்தின் URL கொடுக்கவும்.

  • பிறகு அதற்கு அருகே உள்ள Test Now என்ற பட்டனை அழுத்தினால் உங்களுடைய தளம் உங்களுடைய தளம் ஸ்கேன் ஆகும்.

  • முடிவில் உங்களுக்கு கீழே இருப்பதை போல முடிவு வரும். 

  • இதில் உங்கள் தளத்தில் உள்ள அனைத்து HTML லிங்கும் ஸ்கேன் ஆகி வரும்.

  • ஒவ்வொரு லிங்கிற்கு நேராக மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் அடங்கிய பார்(bar) வரும். 

  • அதன் மீது நம் மவுசின் கர்சரை வைத்தால் அந்த விட்ஜெட் லோடு ஆக எவ்வளவு நேரம் ஆனது என்று வரும். 

  • இது போல் எந்த லிங்க் லோடு ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறது என்று கண்டறிந்து அதை நம் தளத்தில் இருந்து நீக்கி விடவும். 

STAGE- III
  • இந்த வேலையை செய்வதற்கு இன்னொரு தளமும் உள்ளது. அந்த தளத்திருக்கு சென்றால் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.

  • இதில் உங்களுடைய தளத்தின் முகவரி கொடுத்து அருகில் உள்ள START TEST என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

  • கிளிக் செய்தவுடன் உங்கள் தளம் ஸ்கேன் ஆகி உங்களுக்கு முடிவுகள் வரும். இதில் எந்தெந்த பகுதிகள் எவ்வளவுநேரம் எடுத்து கொண்டது என்ற செய்திகள் முடிவுகள் வரும் இதன் படி நம் தளங்களை மாற்றி அமைத்து கொள்ளலாம்.

  • இந்த தளம் செல்ல லிங்க் - Webpage Test 

டுடே லொள்ளு 
Photobucket
 நீ வாங்குற பத்து அஞ்சி பிச்சைக்கு இது தேவையா? 
அண்ணே ஒரு விளம்பரம்.

14 comments:

தமிழ் உதயம் said...

பரிசோதனை செய்து கொள்கிறோம். நன்றி சசி.

Tamil2012 said...

ஆம்! நல்ல தகவல். எம‌து தளத்தின் Backround வர்ணத்தை வெள்ளை நிறத்தில் அமைத்தால் விரைவாக பதிவிறங்கும். ப்லொக்கரின் 2006ம் ஆண்டு உருவாக்கப்பட்ட Layot டெம்பலட்கள் சிறந்தவை.

Chitra said...

useful post.

மதுரை பாண்டி said...

Thanks... I have sent a mail to ur gmail id.. waiting for ur reply..

அன்பரசன் said...

Useful sasi..

பதிவுலகில் பாபு said...

ரொம்ப பயனுள்ள தகவல்..:-)

சைவகொத்துப்பரோட்டா said...

இப்போதெல்லாம் லொள்ளும் களை கட்டுது நண்பா!!

GEETHA ACHAL said...

ரொம்ப பயனுள்ள தகவல்...சசி...Readmore எப்படி கொடுப்பது என்று சொல்லுங்க...எற்கனவே சொல்லி இருந்திங்க என்றால் லிங்க ப்ளிஸ்...

ஈரோடு தங்கதுரை said...

பயனுள்ள தகவல் சசி. அப்புறம், இந்த TV காரங்கதான் சொந்தமா படம் எடுத்து அத தினமும் அவங்க TV ல போட்டு டார்ச்சர் செய்றாங்க . நீங்களுமா ? ஆனாலும் அருமை சசி.

என்னது நானு யாரா? said...

நண்பரே! நன்றி மிக மிக அருமையான பல விஷய்ங்களை சொல்கிறீர்கள்.

ஒரு சந்தேகம். உங்களின் பதிவுகள் மட்டும் என்னுடைய Dashboard-ல் update ஆவதில்லை. நான் Follow செய்யும் மற்ற வலைபக்கங்கள் எல்லாம் சரியாக update ஆகின்றன். அது எதனால் என்று கண்டுபிடித்து சொல்லுங்கள் நண்பரே!

இரவு வானம் said...

ரொம்ப நன்றிங்க, நானும் புதுசா பிளாக் ஆரம்பிச்சு இருக்குறங்க, உங்க பிளாக் பாத்துதான் நெரயா விசயங்கள் தெரிங்சுகிட்டங்க, மறுபடியும் நன்றிங்க

சிநேகிதி said...

உனகளின் இந்த பகிர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கு நன்றி சசி..

rk guru said...

நாளுக்கு நாள் உங்கள் தளத்தின் அழுகு மிளிர்ந்துகொன்டே இருக்கிறது வாழ்த்துகள் சசி ......

சிவா said...

சூப்பர் சசி! ரொம்ப பயனுள்ள தகவல்!

Post a Comment

Text Widget

Text Widget