Tuesday, September 14, 2010

நம் பிளாக்கினை தேடியந்திரங்கள் அறிவதற்கு வசதியாக மாற்ற

நம்முடைய பதிவுகளை தமிழ் திரட்டிகளில் இணைத்து அதன் மூலம் நம் பிளாக்கிற்கு வாசகர்கள் வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால் தமிழ் திரட்டிகளின் மூலம் நம் தளத்திற்கு வரும் வாசகர்களுக்கும் தேடியந்திரங்களில்(SEO) மூலம் நம் பிளாக்கிற்கு வரும் வாசகர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றன.

தேடியந்திரங்களின் மூலம் நம் பிளாக்கிற்கு வாசகர்கள் வந்தால் நம் பிளாக்கின் ரேங்க் விரைவாக உயரும். ஆகையால் நம் பதிவை தேடியந்திரங்கள் மூலம் அறியபடுவதர்க்கு ஏற்ற மாதிரி செய்வது நம் கையில் தான் உள்ளது.



தேடியந்தரங்களில் தேடுபவர்கள் அவர்களுக்கு  தேவையான  பதிவை தான் தேடுவார்கள். நம் தளத்தின் தலைப்பை  தேடமாட்டார்கள். ஆகையால் நம் தளத்தில் தலைப்பில் சிறிய மாற்றங்கள் செய்தால் மட்டுமே பதிவிற்கு முக்கியத்துவத்தை கொடுக்க முடியும்.

கீழே உள்ள படத்தையும் பாருங்கள் 


இந்த இரண்டு படங்களில் பார்த்தாலே உங்களுக்கு தெரியும் நம்முடைய பதிவிற்கு பிறகு நம்முடைய தலைப்பு வருகிறது இது தான் SEO க்கு ஏற்ற முறையாகும். இது போல் நம் பிளாக்கிலும் மாற்ற உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
  • Design

  • Edit Html -சென்று கீழே உள்ள வரியை கண்டு பிடிக்கவும். 

<title><data:blog.pageTitle/></title>
இந்த வரியை கண்டு பிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த வரியின் மீது REPLACE செய்து விடவும்.

<b:if cond='data:blog.pageType == &quot;index&quot;'> <title><data:blog.title/></title> <b:else/> <title><data:blog.pageName/> | <data:blog.title/></title> </b:if>
இப்பொழுது SAVE TEMPLATE கொடுத்து விடுங்கள்.  இந்த மாற்றங்கள் நம் தேடியந்தரங்களில் வருவதற்கு சில நாட்கள் ஆகும். ஆனால் நான் கண்டிப்பாக சொல்கிறேன் இந்த மாற்றங்கள் செய்த பிறகு உங்கள் பிளாக்கிற்கு வரும் வாசகர்கர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.



டுடே டெம்ப்ளேட் 




Features: 2 columns, right sidebar, 4 columns in the footer, light, full widget, share buttons enabled.




டுடே லொள்ளு 



Photobucket


என்ன பண்றது ஒரே கண்ணிலேயே மாத்தி மாத்தி பார்க்க வேண்டியிருக்கு.

15 comments:

Kousalya said...

தேவையான தகவல் தான் சசி. நன்றி

சைவகொத்துப்பரோட்டா said...

அசத்தல் தகவல்!! இன்னைக்கு லொள்ளு செம டெர்ரர் :))

rk guru said...

தேவையான பதிவு சசி....வாழ்த்துகள் ....டுடே லொள்ளு சூப்பர்

தமிழ் உதயம் said...

ஒவ்வொரு நாளும் பதிவர்களுக்கு சிறந்த பதிவுகள் கொடுத்து மகிழ்விக்கிறிர்கள். நன்றி.

அருண் பிரசாத் said...

லொள்ளு கலக்கல் சசி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

replace என்றால் அந்த வரியை நீக்கி விட்டு இதை சேர்க்க வேண்டுமா?

Chitra said...

டுடே லொள்ளு கலக்கல்... Super!

திருடன் said...

sasi one help..

Mrs.Menagasathia said...

thxs sasi!!

anputan Muthupearl said...

அன்னே நான்ந்த்தே நான் இந்த பக்கத்துக்கு புதுசு ... ரெம்ப சூப்பரா இருக்கு உங்கள் வலை பின்னல் . அருமை அருமை

Jeyamaran said...

Anna asathal

ம.தி.சுதா said...

ரொம்ப ரொம்ப அருமையான பதிவுங்கோ....

ம.தி.சுதா said...

அது சரி சகோதரா தமிழ் மண வாக்குப்பட்டையை மேலும் கீழும் வர வைக்க வேண்டுமானால் நீங்கள் முதல் பதிவில் சொன்னது போல் செய்து விட்டு மேலே இருப்பதை நீக்காமல் விட்டால் சரியா...?

sakthi said...

மிக அருமை நண்பரே !

பரிதி நிலவன் said...

நன்றி நண்பரே, மிக உபயோகமான தகவல்.

Post a Comment

Text Widget

Text Widget