Sunday, September 26, 2010

பேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலில் உங்களை நீக்கியவரின் விவரங்கள் அறிய

இந்த கணினி உலகில் பேஸ்புக் என்பது ஒரு அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. நம்மில் 90% மேல் பேஸ்புக் உபயோகிக்கிறார்கள். நம் மெயிலுக்கு பேஸ்புக்கில் இருந்து ஒரு மெயில் வரும் இத்தனை நண்பர்கள் உங்களை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர் என்று வரும் ஆனால் யார் யார் நம்மை நண்பர்கள் லிஸ்டில் இருந்து நீக்கி உள்ளனர் என்பதை கண்டறியும் வசதி பேஸ்புக்கில் இல்லை. மற்றும் நாம் நண்பர்கள் கோரிக்கை அனுப்பி இன்னும் எத்தனை கோரிக்கைகள் ஏற்க்கபடாமல் உள்ளது என்றும் எப்படி கண்டறிவது என்று கீழே பார்ப்போம்.

  • இந்த வசதியை பெற நீகள் இந்த லிங்கில் http://www.unfriendfinder.fr சென்று அங்கு உள்ள Download என்ற பட்டனை அழுத்தி ஸ்கிரிப்ட் பைலை டௌன்லோட் செய்து கொள்ளுங்கள். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளுங்கள்.

  • இந்த ஸ்கிரிப்ட் பைலை டௌன்லோட் செய்தவுடன் உங்கள் பிரௌசரில் தானகவே இணைந்து கொள்ளும். 

  • இந்த ஸ்கிரிப்ட் பைல் Google Chrome/ Opera / Mozillaa / Safari ஆகிய இயங்கு தளங்களில் இயங்குகிறது. 

  • நீங்கள் Mozilla firefox உபயோகித்து கொண்டிருந்தால் இந்த ஸ்கிரிப்ட் பைலை நிறுவ நீங்க உங்கள் பிரவுசரில் Greese Monkey Add On நிறுவியிருக்க வேண்டும்.  

  • இந்த ஸ்கிரிப்ட் பைலை நிறுவியவுடன் உங்கள் பேஸ்புக் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.

  • உங்களுக்கு புதியதாக ஒரு வசதி Unfriends  என்ற லிங்க் இருக்கும். 

  • இதில் கடந்த ஒரு வாரத்தில் உங்களை பட்டியலில் இருந்து நீக்கியவரின் விவரங்கள் தெரியும். 

  • இதில் உள்ள இன்னுமொரு வசதி ஏற்க்கபடாத கோரிக்கைகள். 

  • நாம் அனுப்பிய நட்பு கோரிக்கைகளை ஏற்காமல் இருப்பவர்களின் விவரங்களையும் இதில் பார்த்து கொள்ளலாம். 

  • இதில் நாம் அனுப்பிய நட்பு கோரிக்கைகளை நாமே அகற்றி விடலாம்.

டுடே லொள்ளு 
free myspace graphics :: myspace images :: myspace pictures free myspace layouts


இதுல எத்தனை பேர் இருக்காங்கன்னு முடிஞ்சா கண்டு பிடிச்சு சொல்லுங்க பார்ப்போம் 

9 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

வளர்க உங்கள் பணி, நன்றி நண்பா.

Praveen-Mani said...

அருமையான பதிவு சசி அண்ணா
வாழ்த்துக்கள் ...!

ம.தி.சுதா said...

ஆஹா என்ன ஒரு தேடல்... மிகவும் உதவியானது நண்பருக்கு அறிமுகப்படுத்துகிறேன்...

ம.தி.சுதா said...

சகோதரா சந்தேகம் ஒன்று. இது எனது நண்பர்கள் பார்வைக்கு தெரியுமல்லவா... அதனால் போடுவது சிலவேளை மானத்தை வாங்கிவிடுமல்லவா...???

ம.தி.சுதா said...

மிக்க நன்றி சகோதரா...

G u l a m said...

சகோதரரே உங்கள் பதிவுகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது எனக்கு ஒரு சிறிய சந்தேகம். நமது கணினியில் உள்ள Audio Fileலையோ அல்லது சிறிய அளவில் உள்ள PDF File மற்றும் Software களை வலைப்பூவில் (Blog) இணைக்க முடியுமா?

சிநேகிதி said...

நல்ல பகிர்வு

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

மிக்க நன்றி தோழர்.. நான் பயன்படுத்திக் கொண்டேன்..!

பிரஷா said...

உங்கள் பதிவுகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது..நான் பயன்படுத்திக் கொண்டேன்.நன்றி நண்பரே..

Post a Comment

Text Widget

Text Widget