Tuesday, September 28, 2010

பிளாக்கில் பதிவின் தலைப்பை நடுவில்(Center) கொண்டு வர

 நம்முடைய பிளாக்கில் நாம் தினம் பதிவு எழுதி வெளியிடுகிறோம். அப்படி வெளியிடும் போது நம் பிளாக்கில் நம் பதிவின் தலைப்பு இடது பக்கத்தில் இருந்தே ஆரம்பிக்கும். சிறிய தலைப்புகளாக இருந்தால் பாதியிலேயே பார்ப்பதற்கு அழகற்று காணப்படும். ஆனால் நம் பிளாக்கின் தலைப்பை நடுவில் கொண்டு வந்தால் நம் பதிவின் தலைப்பு அழகாக இருக்கும். அதை எப்படி நம்முடைய பிளாக்கில் கொண்டு வருவது என இங்கு பார்க்க போகிறோம்.

  • முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். 

  • Design - Edit Html - என்ற பகுதிக்கு செல்லுங்கள்.

  • சென்று .post h3 {  என்ற வரியை கண்டு பிடிக்கவும் (இந்த கோடிங் உங்கள் தளத்தில் சற்று மாறியிருக்க வாய்ப்புள்ளது) . 

  • Ctrl+f உபயோகித்தால் சுலபமாக கண்டு பிடிக்கலாம். உங்கள் கோடிங் கீழே இருப்பதை போல இருக்கும்.

.post h3 {

margin:.25em 0 0;

padding:0 0 4px;

font-size:140%;

font-weight:normal;

line-height:1.4em;

color:$titlecolor;

}
இந்த கோடிங்கில் நீங்கள் text-align:center; இந்த ஒரே ஒரு வரியை மட்டும் சேர்த்தால் போதும்.

.post h3 {

text-align:center;

margin:.25em 0 0;

padding:0 0 4px;

font-size:140%;

font-weight:normal;

line-height:1.4em;

color:$titlecolor;

}
மேலே காட்டியுள்ள இடத்தில் சரியாக text-align:center; ஒருவரியை மட்டும் சேர்த்து விட்டு கீழே உள்ள PREVIEW பட்டனை அழுத்தி நீங்கள் சேர்த்த கோடிங் வேலை செய்கிறதா என்று கண்டறிந்து பின் SAVE TMEPLATE என்ற பட்டனை அழுத்தி விடவும்.





 இப்பொழுது உங்களின் பதிவின் தலைப்புகள் நடுவில் வந்து விடும்.உங்கள் பழைய பதிவுகளின் தலைப்புகளும் தானாகவே மாறிவிடும். அதற்காக edit செய்ய வேண்டியதில்லை.

டுடே லொள்ளு 
free myspace graphics :: myspace images :: myspace pictures free myspace layouts


மவனே யார்க்கிட்ட 

10 comments:

ஆர்.கே.சதீஷ்குமார் said...

good post

தமிழ் உதயம் said...

உபயோகித்து கொள்கிறோம் சசிகுமார்.

பிரவின்குமார் said...

எளிமையான விளக்கத்துடன் பயனுள்ள தகவல் நண்பரே..!

எஸ்.கே said...

மீண்டும் ஒரு நல்ல பதிவு!

நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நன்றி நண்பா அருமையான பதிவு பயனுடையதாக இருந்தது

prabhadamu said...

என்னுடைய தளத்தில் அந்த கோடு இல்லையே நண்பா. என்ன செய்யட்டும்?

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றி நண்பா.

ஈரோடு தங்கதுரை said...

டுடே லொள்ளு ஓபன் ஆகவில்லை சசி.

ம.தி.சுதா said...

தங்கள் பதிவுகள் ஒரு காலத்தில் பத்தகமாக வந்த பிரபலமடையப் போகிறத வாழ்த்துக்கள்...

Ajith said...
This comment has been removed by the author.

Post a Comment

Text Widget

Text Widget