Saturday, May 15, 2010

வித்தியாசமான கார்களின் அணிவகுப்பு - படங்கள்























டுடே லொள்ளு


Photobucket
யாராவது அந்த fan switch கொஞ்சம் off பண்ணிட்டு போங்களேன். புண்ணியமா போகும்.    

Monday, May 10, 2010

நம்முடைய பிலாக்கரில் GOOGLE BUZZ பட்டன் கொண்டு வர?

நண்பர் முனைவர். இரா. குணசீலன் கேட்டதற்கு இணங்க இந்த பதிவை வெளியிடுகிறேன். இது பலருக்கும் உபயோகமாக இருக்கும்.    நம்முடைய பிலாக்கரில் GOOGLE BUZZ பட்டன் கொண்டு வருவது என்று கீழே காண போகிறோம். இதன் மூலம் நம்முடைய தளம் மேலும் பிரபலமடையும். இதை சேர்ப்பது மிகவும் சுலபமான ஒன்று. 




இதை நம்தளத்தில் கொண்டுவர கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள். 
<div style="float:right;padding:4px;">

<a title="Post on Google Buzz" class="google-buzz-button" href="http://www.google.com/buzz/post" data-button-style="normal-count" data-locale="en_IN" rel="nofollow" expr:data-url='data:post.url'></a>

<script type="text/javascript" src="http://www.google.com/buzz/api/button.js"></script>

</div>
அடுத்து உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். DASSBOARD - LAYOUT -  EDIT HTML - EXPAND WIDGET TEMPLATES சென்று கீழே உள்ள வரியை கண்டுபிடிக்கவும்.

<div class='post-header-line-1'/>
கண்டுபிடித்தபின் நீங்கள் காப்பி செய்த கோடிங்கை நீங்கள் கண்டுபிடித்த கோடிற்கு கீழே/பின்பு பேஸ்ட் செய்யவும். பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல இருக்க வேண்டும்.





கீழே உள்ள SAVE TEMPLATE என்பதை க்ளிக் செய்து பேஸ்ட் செய்து கொள்ளவும். அவ்வளவு தான் உங்களுடைய தளத்தில் GOOGLE BUZZ பட்டன் வந்திருக்கும்.


டுடே லொள்ளு   
Photobucket
சாப்பாடு ஒரு மணிநேரம் லேட் ஆனதுக்கா என்ன இப்படி பண்ற! 

Sunday, May 9, 2010

நான்

இன்று வரை என்னை பின் தொடரும் உள்ளங்களுக்கும், என் பதிவிற்கு தவறாமல் பின்னூட்டம் அளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.  





இன்று எனக்கு மிகவும் பிடித்த நாள் இன்று தான் என்னுடைய தாய் என்னை ஈன்றெடுத்த நாள். முதன் முதலில் என்னுடைய பிறந்த நாளை பதிவுலக  நண்பர்களோடு கொண்டாடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இங்கு நானே என்னை பற்றி  ஒரு சிறு அறிமுக படுத்தி கொள்கிறேன்.    

வேலன் சார் வடிவமைத்து கொடுத்தது.    








பெயர் :   சசிகுமார் (யாருக்கும் தெரியாது பாரு)





பிறந்த தேதி :  10-05-1984 (இது பள்ளியில், உண்மையில் 1983)





என்னை பிடித்தது :  அப்பாவுக்கு (நான் நன்றாக படித்ததால் ஹி ஹி ஹி ) 





எனக்கு பிடித்தது :  அம்மா (வீட்ல படிக்க சொல்லி தொந்தரவு செய்யாததால்)





படித்தது :  BBA, CCCA, ACDFT , and Web Designing (டே கேக்கறதுக்கு ஆள் இல்லேன்னா  என்னவென்னாலும் போட்டுபியா)



படிக்க நினைத்தது : (அத வுடுங்க என்னென்னவோ நெனச்சோம்)



மறக்க முடியாதது :   கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு விபத்தில் என் அம்மாவும், அக்காவும் அதே இடத்திலேயே இறந்தது. இதற்க்கு மேல் சொல்லி என்னுடன் சேர்த்து உங்களையும் அழவைக்க விரும்பவில்லை. (நண்பர்களே இதை பற்றி யாரும் கமென்ட் போட வேண்டாம்)  



மறக்க நினைப்பது :   மறக்க முடியாததை.



 பிடித்தது : அன்று அம்மா ஊட்டி விட்டது , இன்று என் மனைவி ஊட்டி விடுவது.



கடவுளிடம் வேண்டியது : எந்த குறையும் இல்லாமல் குழந்தை( கொடுத்த அந்த

இறைவனுக்கு நன்றி )

பெயர் : யுதிஷா. என் குழந்தை  


மகிழ்ச்சி: அன்பான மனைவி அமைந்தது. பெயர் சுனிதா.


என் மனைவி    




தற்போதைய பெருமை 


என்னவோ  படிச்சிட்டு வேலை தேடிகொண்டிருந்த எனக்கு கடைசியாக ஏனோ தானோ வென்று படித்த இந்த FASHION TECH. தாங்க சோறு போடுது. படித்தது எல்லாம் வீணாக போச்சே என்று கவலை பட அப்போது தான் எனக்கு இந்த ப்ளாக் ஆரம்பித்து அதிலே சில டிப்ஸ் போடலாமென்று யோசனை வந்தது. சரி ஒரு பக்கம் ஆதரவு இருக்குமா என்று சந்தேகம் வேறு. இப்பொழுது நான் எதிர் பார்த்ததை விட எனக்கு ஆதரவும், அன்புள்ள நண்பர்களும் கிடைத்து உள்ளனர். இப்பொழுது தினமும் குறைந்தது 5 நபர்களாவது மெயில் மூலமாகவும், போன் மூலமாகவும் தொடர்பு கொண்டு பிளாக்கில் சந்தேகங்களை கேட்டு கொண்டு இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட ஒரு நண்பர் சவுதியில் இருந்து போன் மூலம் தொடர்பு கொண்டார். (வீணாக தற்பெருமை அடித்து கொள்கிறேன் என்று கருத வேண்டாம் அந்த அளவிற்கு சந்தோசமாக உள்ளது நண்பர்களே.)  


வாழ்த்து:  இன்று என்னை போல பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.                

Saturday, May 8, 2010

வண்டிய பார்த்து ஒட்டுங்கப்பா - படங்கள்

































































டுடே லொள்ளு 


எங்கடா போய்ட்டாங்க என் செல்லங்க 




Thursday, May 6, 2010

நம்முடைய பிலாக்கரில் Background Music கொண்டுவர

ந ண்பர்கள் பலர் மெயில் மூலமாகவும், பின்னூட்டங்கள் மூலமாகவும் எப்படி நம் பிலாக்கரில் எப்படி  Background Music சேர்ப்பது என்று கேட்டதனால் இந்த பதிவை நான் இங்கு போட கடமை பட்டுள்ளேன்.   நம்முடைய பிலாக்கரில் background Music கொண்டுவருவது என்று இங்கு காணலாம்.



இதற்க்கு முதலில் நம்மிடம் அந்த சேர்க்க விரும்பும் mp3 பைலின் URL இருக்க வேண்டும். இல்லை என்றாலும் கவலையில்லை. இந்த சேவையை இணையத்தில் நிறைய தளங்கள் இலவசமாக தருகிறார்கள். நான் இந்த தளத்தை தேர்ந்தெடுத்து உள்ளேன்.  http://www.fileden.com இங்கு க்ளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லவும். சென்றவுடன் கீழே உள்ளதை போல விண்டோ வரும். இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினர் ஆகிகொள்ளுங்கள்.





இதில் உள்ள Register என்பதை க்ளிக் செய்து உறப்பினர் ஆகினால் அவர்கள் உங்கள் மெயிலுக்கு ஒரு Activation Link அனுப்புவார்கள் அதை க்ளிக் செய்து உங்கள் அக்கௌன்ட் Activate செய்து கொள்ளுங்கள்.    உறுப்பினர் ஆகியவுடன் அந்த தளத்திற்கு சென்று உங்களுடைய User Id, Password கொடுத்து உள்ளே நுழைந்து கொள்ளுங்கள் . உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும் 




வரும் விண்டோவில் நான் காட்டியுள்ளதை போல Upload என்பதை க்ளிக் செய்யுங்கள் . 
உங்களுக்கு கீழே உள்ளதை போல வரும். 


இதில் Continue to file uploader என்பதை கொடுத்து விடவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல வரும் 




இதில் browse files என்பதை க்ளிக் செய்து உங்கள் ஆடியோ பைலை செலக்ட் செய்து கொள்ளுங்கள். அடுத்து அருகில் உள்ள Start Upload என்பதை கொடுத்துவிட்டால் உங்கள் ஆடியோ பைல் upload ஆகும் , ஆகி முடிந்ததும் உங்களுக்கு உங்களுடைய ஆடியோ பைலின் URL கீழே தெரியும் அதை குறித்து கொள்ளவும்.







இப்பொழுது உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள் DASSBOARD - LAYOUT - ADD A GADGET - HTML/JAVA SCRIPT சென்று கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். இந்த கோடிங்கில் URL OF YOUR MUSIC FILE என்ற இடத்தில் நீங்கள் உங்கள் ஆடியோ பைலின் URL முகவரியை கொடுக்கவும். அவ்வளவு தான் உங்கள் தளத்தின் BACKGROUND MUSIC சேர்ந்து  இருக்கும். 
<embed style="width:250px; height:100px; visibility:true" autostart="true" loop="true" src="URL of your Music file"/></embed>


இதில் உங்கள் தளத்தில் MUSIC PLAYER தெரிய வேண்டாம் என்று நினைத்தால் visibility: hidden என்று கொடுக்கவும்.   


குறிப்பு: Music Player hidden செய்வதனால் நம் தளத்திற்கு வரும் வாசகர்கள் பாட்டு தேவையில்லை என்றால் நிறுத்த முடியாது அது தொடர்ந்து பாடி கொண்டே இருக்கும் . இது சில பேருக்கு எரிச்சலை தரும்.         


இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் கேட்கவும் பதிலளிக்க நான் காத்து கொண்டிருக்கிறேன்.  





டுடே லொள்ளு 



Photobucket
அழாதடா ராஜா அம்மா வந்துட்டேனில்ல 

Text Widget

Text Widget