Thursday, May 6, 2010

நம்முடைய பிலாக்கரில் Background Music கொண்டுவர

ண்பர்கள் பலர் மெயில் மூலமாகவும், பின்னூட்டங்கள் மூலமாகவும் எப்படி நம் பிலாக்கரில் எப்படி  Background Music சேர்ப்பது என்று கேட்டதனால் இந்த பதிவை நான் இங்கு போட கடமை பட்டுள்ளேன்.   நம்முடைய பிலாக்கரில் background Music கொண்டுவருவது என்று இங்கு காணலாம்.



இதற்க்கு முதலில் நம்மிடம் அந்த சேர்க்க விரும்பும் mp3 பைலின் URL இருக்க வேண்டும். இல்லை என்றாலும் கவலையில்லை. இந்த சேவையை இணையத்தில் நிறைய தளங்கள் இலவசமாக தருகிறார்கள். நான் இந்த தளத்தை தேர்ந்தெடுத்து உள்ளேன்.  http://www.fileden.com இங்கு க்ளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லவும். சென்றவுடன் கீழே உள்ளதை போல விண்டோ வரும். இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினர் ஆகிகொள்ளுங்கள்.





இதில் உள்ள Register என்பதை க்ளிக் செய்து உறப்பினர் ஆகினால் அவர்கள் உங்கள் மெயிலுக்கு ஒரு Activation Link அனுப்புவார்கள் அதை க்ளிக் செய்து உங்கள் அக்கௌன்ட் Activate செய்து கொள்ளுங்கள்.    உறுப்பினர் ஆகியவுடன் அந்த தளத்திற்கு சென்று உங்களுடைய User Id, Password கொடுத்து உள்ளே நுழைந்து கொள்ளுங்கள் . உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும் 




வரும் விண்டோவில் நான் காட்டியுள்ளதை போல Upload என்பதை க்ளிக் செய்யுங்கள் . 
உங்களுக்கு கீழே உள்ளதை போல வரும். 


இதில் Continue to file uploader என்பதை கொடுத்து விடவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல வரும் 




இதில் browse files என்பதை க்ளிக் செய்து உங்கள் ஆடியோ பைலை செலக்ட் செய்து கொள்ளுங்கள். அடுத்து அருகில் உள்ள Start Upload என்பதை கொடுத்துவிட்டால் உங்கள் ஆடியோ பைல் upload ஆகும் , ஆகி முடிந்ததும் உங்களுக்கு உங்களுடைய ஆடியோ பைலின் URL கீழே தெரியும் அதை குறித்து கொள்ளவும்.







இப்பொழுது உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள் DASSBOARD - LAYOUT - ADD A GADGET - HTML/JAVA SCRIPT சென்று கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். இந்த கோடிங்கில் URL OF YOUR MUSIC FILE என்ற இடத்தில் நீங்கள் உங்கள் ஆடியோ பைலின் URL முகவரியை கொடுக்கவும். அவ்வளவு தான் உங்கள் தளத்தின் BACKGROUND MUSIC சேர்ந்து  இருக்கும். 
<embed style="width:250px; height:100px; visibility:true" autostart="true" loop="true" src="URL of your Music file"/></embed>


இதில் உங்கள் தளத்தில் MUSIC PLAYER தெரிய வேண்டாம் என்று நினைத்தால் visibility: hidden என்று கொடுக்கவும்.   


குறிப்பு: Music Player hidden செய்வதனால் நம் தளத்திற்கு வரும் வாசகர்கள் பாட்டு தேவையில்லை என்றால் நிறுத்த முடியாது அது தொடர்ந்து பாடி கொண்டே இருக்கும் . இது சில பேருக்கு எரிச்சலை தரும்.         


இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் கேட்கவும் பதிலளிக்க நான் காத்து கொண்டிருக்கிறேன்.  





டுடே லொள்ளு 



Photobucket
அழாதடா ராஜா அம்மா வந்துட்டேனில்ல 

10 comments:

srividhya Ravikumar said...

மிகவும் அருமை.. நான் முயற்சிக்கிறேன் .. நன்றி

Mrs.Menagasathia said...

super sasi!!

மரா said...

சூப்பர் பதிவு நண்பரே! வாழ்க வளமுடன்.

தேசாந்திரி-பழமை விரும்பி said...

அருமையான பனி செய்து கொண்டிருக்கிறீர்கள் நண்பரே !!!
வாழ்த்துக்கள் !!! நானும் பாலோயர் நானும் பாலோயர்...

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்லாருக்கே..

Thanujan said...

Your information is very very useful.but sorry friend. I'm not able to understand. so can you explain more.

Anonymous said...

how to hide bloger source code...?

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அதிக நாட்களாகஅறிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்த ஒன்று இன்று உங்களின் பதிவின் வாயிலாக அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி நண்பரே !

பிரஷா said...

உங்கள் பதிவு. நானும் முயற்சித்து பார்த்தேன் பலன் கிடைக்கவில்லை. பிரேத்தியமாக player எதுவும் போட வேண்டுமா?

love is pain said...

heloooo anna DASSBOARD - LAYOUT - ADD A GADGET - HTML athu bloggrla ewnga erukku thu enru solluveenkla

Post a Comment

Text Widget

Text Widget