Monday, October 25, 2010

கணினியில் பென்டிரைவ் தானாக இயங்குவதை தடுக்க

அனைவரும் உபயோக்கித்து கொண்டிருக்கும் ஒரு சாதனமாக இப்பொழுது பென்டிரைவ் உள்ளது. இது நாம் கணினியில் நுழைத்தவுடன் அது தானாகவே இயங்க ஆரம்பிக்கும் வகையில் உங்கள் கணினியில் செட்டிங்க்ஸ் செய்ய பட்டிருக்கும் இது சிறந்த வசதியாகும். ஒரு சிலருக்கு இது பிடிப்பதில்லை வேறு ஏதேனும் வேலை செய்திருக்கும் போது பென்டிரைவ் நுழைத்தவுடன் அது வேலை செய்ய ஆரம்பிப்பதால் செய்து கொண்டிருக்கும் வேலையில் கவனம் சிதறுகிறது.


இந்த வசதியை நாம் எப்படி செயலியக்க வைப்பது என்று இப்பொழுது காண்போம்.
  • உங்கள் கணினியில் Start - Run -சென்று gpedit.msc என்று கொடுத்து உங்கள் கணினியின் Group policy பகுதிக்கு செல்லுங்கள்.

  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் படத்தில் காட்டியுள்ள இடத்திற்கு சரியாக செல்லுங்கள்.

  • Administrative Templates

  • System

  • Select Turn off Autoplay - என்பதை மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளதை போல தேர்வு செய்து கொள்ளுங்கள். 

  • Turn off Autoplay என்பதை இரண்டு முறை க்ளிக் செய்தால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  • இதில் Enable என்பதை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள கட்டத்தில் All drives என்பதை தேர்வு சிது கொள்ளுங்கள்.

  • கீழே உள்ள OK பட்டனை அழுத்தி விடுங்கள். அவ்வளவு தான் இனி நீங்கள் பென்டிரைவ் உங்கள் கணினியில் நுழைத்தவுடன் தானாக இயங்காது. 

  • My Computer சென்று நாம் தான் இயக்க வேண்டும்.

டுடே லொள்ளு 
Photobucket
ரொம்ப சூடா இருக்கு கொஞ்சம் ஹீட் குறைங்கப்பா 

6 comments:

பிரவின்குமார் said...

வழக்கம்போல் மிகவும் பயனுள்ள தகவல்.

Praveen-Mani said...

useful post..thanks sasi anna..!

அருண் பிரசாத் said...

இதை disable செய்வதால் CD/DVD autoplayவும் disable ஆகிவிடுமா?

கக்கு - மாணிக்கம் said...

சசி, சில பென்றைவர்களில் இருந்து கோப்புகளை முழுவதும் நீக்கி அதனை சுத்தம் செய்ய முடிவதில்லை. write protected என்றுதான் செய்திதான் வருகிறது. இதனை எப்படி சரி செய்யலாம்?

PalaniWorld said...

நல்ல பயனுள்ள தகவல் நண்பரே .நன்றி

PalaniWorld said...

நல்ல பயனுள்ள தகவல் நண்பரே .நன்றி

Post a Comment

Text Widget

Text Widget