Saturday, August 28, 2010

பதிவு போடும் நேரத்தை எப்படி குறைப்பது- புதியவர்களுக்காக பாகம்-2

 ஒவ்வொரு நாளும் எந்த பதிவு போடலாம் என்ன எழுதலாம் என்று யோசித்தே பதிவர்கள் நேரங்களை செலவு செய்கிறோம். நீங்கள் பதிவு போடும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை இங்கு கூறி உள்ளேன். இந்த முறைகளை நீங்கள் கடைபிடித்தால் உங்கள் பதிவு போதும் நேரத்தை கண்டிப்பாக குறைக்க முடியும்.

உங்கள் பிளாக்கின் Stats பார்ப்பதை தவிருங்கள் 

 நாம் நம்முடைய பிளாக்கின் STATS பார்ப்பதிலேயே நமக்கு கிடைக்கும் நேரத்தின் பெறும் பகுதியை இதிலேயே செலவிடுகிறோம். அது நமக்கு ஒரு விட சந்தோசத்தை கொடுத்தாலும் நம்முடைய நேரம் வீணாக செலவு செய்யப்படுவது மறுக்க இயலாத உண்மை.



கணினி முன் யோசிக்க வேண்டாம்:
 கணினி முன் உட்கார்ந்த பிறகே  எந்த பதிவு எழுதலாம் என்று யோசிக்க கூடாது. இன்று என்ன எழுத வேண்டும் என்று முன்பே யோசித்து விட்டு எழுத வரவும். அல்லது உங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் உங்களுக்கு தோன்றியதை பிளாக்கில் எழுதி டிராப்டில் சேமித்து வைத்து கொள்ளவும். பின்பு வந்த நீங்கள் அதை வெளியிட்டு கொள்ளலாம். 


தேடியந்திரங்களில்  உஷார்
தேடியந்திரங்களில்  நாம் எதையோ தேட போவோம் நாம் கொடுத்த தலைப்பில் உள்ள அல்லது அதற்கு சம்பந்தமான தளங்களை ஆயிரக்கணக்கில் நமக்கு தேடியந்திரங்கள்  தரும். இப்படி தரும் போது நாம் நமக்கு என்ன தேவையோ அதை மட்டும் பெற்று கொண்டு வரவும். நமக்கு தெரியாமலே நம்முடைய கவனத்தை ஈர்க்கும் சக்தி படைத்தது இந்த தேடியந்திரங்கள்.



கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தவும்:
நாம் நம்மிடம் எப்பொழுதும் ஒரு டைரியும் ஒரு பேனாவும் வைத்து கொண்டிருப்பது நல்லது. நாம் எங்கோ பஸ்ஸிலோ அல்லது ரெயிலிலோ சென்று கொண்டு இருக்கும் போது வீணாக மற்றவருடன் அரட்டை அடித்து கொண்டோ அல்லது தூங்கி கொண்டோ  போவதை விட அந்த நேரத்தில் யோசித்து உங்கள் டைரியில் குறித்து வைத்து கொள்ளலாம். தேவை படும் போது பதிவிட்டு கொள்ளலாம்.  இதனால் நம்முடைய பயண நேரமும் வீணாகாது.


மனசை தளர விட வேண்டாம்:
நீங்கள் நல்ல முறையில் பதிவு எழுதியும் யாரும் ஓட்டு போடவில்லை பதிவு பிரபலமாக வில்லை பின்னூட்டங்கள் வரவில்லை என்று யோசிக்கவே வேண்டாம் நீங்கள் எழுதுவதை தொடர்ந்து எழுதுங்கள். இல்லை நீங்கள் இப்படி யோசித்து கொண்டு இருந்தால் ஒரு பதிவையும் உங்களால் சரிவர எழுதமுடியாது.  ஆதலால் நீங்கள் எழுதும் பதிவை சிறப்பாக எழுதுங்கள் அதுவே போதும்.



பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஒரு ஓட்டு போட்டு விட்டு செல்லவும் 


டுடே லொள்ளு 



Photobucket
Funny animation
டே நாதாரி வேகமா  அழுத்துடா பின்னாடியே ட்ரெயின் வருது 


12 comments:

asiya omar said...

நல்ல ஐடியா.உங்கள் பதிவு எப்பவுமே அருமை சகோ.

சிவா said...

என்னை போல் புதியவர்களுக்கு உங்கள் வலைப்பக்கம் மிகவும் உதவி செய்கிறது... தொடரட்டும் உங்கள் பணி...

பிரவின்குமார் said...

பயனுள்ள பதிவுலக தகவல்கள். ரொம்ப அருமையா.. சொல்லியிருக்கீங்க.. நண்பரே..!

ஜெய்லானி said...

சரிதான் :-))

என்னது நானு யாரா? said...

அருமையான விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள். எல்லோரும் Follow செய்யதக்கவையாக உள்ளன. நன்றி நண்பா!

rk guru said...

today lollu super......kadaci vadainaalum yenakkuthaan...

ம.தி.சுதா said...

நல்ல அறிவுரை நன்றிகள்... எனக் கொரு சந்தேகம் தீர்க்கணும் உங்க மெயில் முகவரி தரமுடியுமா. (mathisuthakaran@gmail.com)

Tamil Blog said...

அருமை. பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்தது.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை.........

ஜெயந்தி said...

பதிவர்களுக்கு தேவையான யோசனைகள்.

Farhath said...

சிறந்த பதிவு எனக்கு ரொம்ப உபயோகப்படும்...

Sumathy said...

Very useful tips.Thank you very much.

Post a Comment

Text Widget

Text Widget