Wednesday, August 25, 2010

புதியவர்களுக்காக: வலைப்பதிவு ஆரம்பித்து பதிவு போடுவது எப்படி



இது நம் அனைவருக்கும் தெரிந்து நாம் தினமும் உபயோகிக்கும் விஷயம் தான். ஆனால் நம்மை போன்ற எவ்வளவோ பேர் பதிவு எழுத ஆசை இருந்தும், எப்படி பிளாக் ஆரம்பிப்பது எப்படி  பதிவு எழுதுவது என்று தெரியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்பது உண்மையே. எனக்கும் தினமும் ஒரு மெயிலாவது எப்படி பிளாக் ஆரம்பிப்பது என்று வருகிறது. இதனால் ஒரு பதிவையே போட்டு விடுகிறேன்.
பிளாக் ஆரம்பிப்பதற்கு அதிக கணினி அறிவு வேண்டும், அல்லது சிறந்த அறிவாளியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நீங்கள் நினைத்து கொண்டிருந்தால் அவை முற்றிலும்  தவறே. நீங்கள் பிளாக் ஆரம்பிக்க சிறிது கணினி அறிவு இருந்தால் சுலபமாக இருக்கும். கொஞ்சம் கூட கணினி அறிவு இல்லையா உங்களுக்கு போக போக கண்டிப்பாக பழகிவிடும். கீழே உள்ள வழிமுறைகளை கடைபிடிக்கவும்.
Sign your Account
  • நீங்கள் பிளாக் ஆரம்பிக்க www.blogger.com என்ற தளத்திற்கு செல்லவும். கீழே உள்ள Create Blog என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.

  • நீங்கள் சொந்த சேவைக்கு உபயோகிக்கும் மெயிலை இதற்கு கொடுக்க வேண்டும் இதெற்கென்று ஜிமெயிலில் ஒரு புதிய அக்கௌன்ட் திறந்து கொள்ளுங்கள்.கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

  • CONTINUE என்ற பட்டனை அழுத்தவும். 

NAME OF YOUR BLOG 
  • இந்த பகுதி  உங்களுக்கு மிகவும் முக்கியமான பகுதி இங்கு தான் நீங்கள் உங்கள் பிளாக்கின் தலைப்பு மற்றும் BLOG URL தேர்ந்தெடுக்க வேண்டும்.

  •  நீங்கள் உங்கள் தலைப்ப தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் எழுத போகும் பதிவிற்கு ஏற்ற மாதிரி தேர்ந்தெடுக்கவும்.

  •  URL சிறியதாக உள்ளதை போல தேர்ந்தெடுக்கவும் வாசகர்களுக்கு நினைவில் வைக்க சுலபமாக இருக்கும். 

  • முடிந்த அளவு உங்கள் URL மற்றும் பிளாக்கின் தலைப்பு ஒன்றாக இருப்பதை போல தேர்ந்தெடுக்கவும்.

  •  நீங்கள் தேர்ந்தெடுத்த URL கொடுக்கும் போது இடையில் SPACE விட கூடாது. 

  • URL கொடுத்து கீழே உள்ள Check Availability என்பதை கிளிக் செய்து நீங்கள் கொடுத்த ID காலியாக இருக்கிறதா இல்லை வேறு யாரேனும் உபயோக படுத்துகிறார்களா என்பதை உறுதி செய்து  கொள்ளுங்கள். 

  • This Blog address is available என்ற செய்தி வரும் வரை நீங்கள் URL சிறிது மாற்றம் செய்து கொடுத்து கொண்டே இருங்கள்.    

  • அடுத்து கீழே உள்ள Verification code கொடுத்து Continue என்பதை கிளிக் செய்யவும். கீழே உள்ள படத்தில் பார்க்கவும்.

CHOOSE YOUR BLOG TEMPLATE 
இதில் மூன்றாவது படி உங்கள் பிளாக்கின் Template தேர்ந்தெடுப்பது அதாவது நம்முடைய பிளாக் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுப்பது. 


இதில் நீங்கள் விரும்பிய டெம்ப்ளேட் தேர்வு செய்து கீழே உள்ள Continue என்பதை கிளிக் செய்து விடுங்கள். இப்பொழுது உங்களுடைய பிளாக்கை தொடங்கி விட்டீர்கள். இப்பொழுதே நீங்கள் பதிவு எழுதவேண்டும் என்றால் கீழே உள்ள START BLOGGING என்ற பட்டனை அழுத்தவும். அது நேராக உங்களுடைய Post editior பகுதிக்கு கொண்டு செல்லும்.  கீழே உள்ள படத்தை பார்த்து உங்களுடைய பதிவை எழுத ஆரம்பியுங்கள். 




பதிவு எழுதி முடிந்ததும் கீழே உள்ள Preview என்ற பட்டனை அழுத்தினால் உங்களுடைய பதிவு பப்ளிஷ் செய்தால் எப்படி வரும் என்று நமக்கு காட்டும்.  சரி பார்த்த பின்னர் நம் பதிவில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமென்றால் செய்துவிட்டு அருகில் உள்ள PUBLISH POST என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய பதிவு உங்கள் வலை தளத்தில் வெளியாகி விடும்




View Post கிளிக் செய்தால் போதும் உங்களுடைய நேராக உங்களுடைய பிளாகிற்கு உங்களை அழைத்து சென்று விடும். அதற்கு பின்னர் 


உங்கள் பதிவை  பிரபலமாக்க தமிழ் திரட்டிகளான இன்ட்லி, தமிழ்10தமிழ்மணம் , உலவுதிரட்டி ,  தமிழ் உலகம்   ஆகிய திரட்டிகளில் இணைத்து கொள்ளவும். 


டுடே லொள்ளு
Photobucket
பயப்படாதீங்க! ஓட்டு யாரு போடலையோ அவுங்கள மட்டும் தான் கடிப்பேன் ஹி ஹி ஹி 

14 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

இப்ப பரவாயில்லை, முன்னெல்லாம் ஆரம்பிக்கிறதுக்கு தாவு தீரும் ...

அமைதிச்சாரல் said...

புதியவர்களுக்கு உபயோகமானது...

செ.சரவணக்குமார் said...

அருமை சசி. மிக நல்ல பகிர்வு. புதிதாய் எழுத வருபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அருண் பிரசாத் said...

ஓட்டு போட்டாச்சு, பாம்பை அனுப்பாதீங்க

உமாபதி said...

=))

sandhya said...

புதுசா எழுத வரவங்கள்கு ரொம்ப ஹெல்ப் புல்லானா பதிவு .நன்றி

Gayathri said...

pudhiya padhivargalukku migavum payanulladhaaga ullathu ungal padhivu..vazhthukkal

பதிவுலகில் பாபு said...

நல்ல தகவல்.. புதியவர்களுக்கு கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்..

raja said...

:)]

maduri sankaramoorthi said...

good work valia emman

வசூல்ராஜாmbbs said...

நல்ல பதிவு.. சசி

Chitra said...

Useful to beginners. :-)

Cable Sankar said...

மிக அருமையான தேவையான பதிவு.. வாழ்த்துக்கள்.

InternetOnlineJobHelp said...

Free online Classified Website , Buy & Sell ,Jobs, Real Estate , Education , Pets , Entertainment, Electronics More - www.classiindia.com

Post a Comment

Text Widget

Text Widget