Wednesday, August 4, 2010

நம் பதிவை காப்பி அடிப்பதை முற்றிலுமாக தடுக்க சூப்பர் வழி

நண்பர்களே இன்று நாம் பார்க்க போகும் பதிவு மிகவு பயன் உள்ள பதிவு அனைத்து நண்பர்களும்  பயன் படுத்தி கொள்ளுங்கள். நாம் தினமும் கிடைக்கும்  கொஞ்சம் ஒய்வு நேரங்களில் கூட ஒய்வு எடுத்து கொள்ளாமல் உடலை வருத்தி கொண்டு நம்மால் முடிந்த வரை சிறப்பான பதிவை எழுதுகிறோம். இதை நம் நண்பர்களும் வாசகர்களும் படித்து மகிழ்வார்கள். ஆனால் சில ஈன பிறவிகள் நாம் சிரமப்பட்டு எழுதிய இந்த பதிவுகளை காப்பி செய்து அவர்கள் தளத்தில் போட்டு நோகாமல் நோம்பு கும்பிட்டு வந்தார்கள் ஆனால் இனிமேல் அப்படி எதுவும் அவர்களால் பண்ண முடியாது உங்கள் தளத்தில் இருந்து ஒரு எழுத்தை கூட அவன் காப்பி செய்ய முடியாது.





இடது பக்க மவுசை செயலியக்க செய்ய


என்னடா இது இடது பக்க மவுசை செயலியக்க செய்தால் நாம் பதிவில் ஏதேனும் லிங்க் கொடுத்தால் வேலை செய்யாதே என்று யோசிக்கிறீங்களா கவலையை விடுங்கள் நாம் கொடுத்துள்ள லிங்கில் வேலை செய்யும் மற்ற பகுதியில் வேலை செய்யாது. கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்.



காப்பி செய்து கொண்டு உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Design - Edit Html - Expand Widjet template - சென்று இந்த வரியை </head> கண்டுபிடிக்கவும். காப்பி செய்த கோடிங்கை கண்டுபிடித்த கோடிற்கு முன்னே/மேலே பேஸ்ட் செய்யவும். அடுத்து SAVE TEMPLATE கொடுத்து விடுங்கள் இப்பொழுது உங்கள் தளத்தில் வந்து பதிவு பகுதியில் இடது கிளிக் செய்து பாருங்கள் வித்தியாசம் தெரியும்.பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே படத்தில்  இருப்பதை போல விண்டோ இருக்கும்.







வலது கிளிக் செயலியக்க செய்ய


இது நிறைய பேர் உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள். தெரியாதவர்களுக்காக இந்த பதிவு. உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Design - Add a Gadget - Html/JavaScript - சென்று கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.

அடுத்து கீழே உள்ள SAVE பட்டனை அழுத்தி நம் தளம் வந்து வலது கிளிக் செய்து பார்த்தால் உங்களுக்கு ஒரு அறிவிப்பு பலகை Sorry Function Disabled என்று வரும் இதை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி கொள்ளுங்கள். அவ்வளவு தான் இனி உங்கள் தளத்தில் இருந்து ஒரு எழுத்து கூட காப்பி செய்வது மிகவும் கடினம்.



என்ன இனிமே நம் தளத்த காப்பி பண்ண முடியாதான்னு கேக்கறீங்களா இன்னும் ஒரு சில வழிகள் உள்ளன. அவ்ளோ மூளை இருந்தா அவன் என் காப்பி பண்ண போறான் அது கொஞ்சம் கடினம் . கவலையை விடுங்கள்.   





தல அப்டியே ஒரு ஓட்டு போட்டு போங்க தல புண்ணியமா போவும். 


டுடே லொள்ளு 
 Photobucket
என்ன நல்லா இருக்கீங்களா 

24 comments:

srividhya Ravikumar said...

உண்மையாகவே மிகவும் நல்ல பதிவு... நன்றி...

தோழி said...

இந்த பிரச்சினையால் வெகுவாக பாதிக்கப் பட்டிருக்கிறேன். நண்பர் ஒருவர் கொடுத்த நிரல் (கோடிங்) ஒன்றினை பயன் படுத்தி தற்போது இந்த பாதக செயலை தடுக்க முனைந்திருக்கிறேன். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

V.Radhakrishnan said...

நேற்று நான் பதிவு எழுதும்போது உங்களை நினைத்தேன். இன்று அழகிய பதிவு ஒன்று போட்டுவிட்டீர்கள். மிக்க நன்றி சசி.

Admin said...

சசி எனப்பா இப்படி ஒரு பதிவை எழுதின்னி... இது தானே நீங்க யாரும் எழுத கூடாதுன்னு நனைச்சுட்டு இருந்தன்..
:-0 -x(

Admin said...

sasi ..... very bad....

கே.ஆர்.பி.செந்தில் said...

நல்ல யோசனை தம்பி..

Mrs.Menagasathia said...

thxs sasi!!

The Rebel said...

Its a javascript.So the wayout is obvious.Anyways i will not post it.

beeo said...

fire fox add-on -ல் noscript 2.0 அப்படின்னு ஒன்று உள்ளது உங்களை ஏமாற்ற . நன்றி.

Admin said...

பாடவா தமிழா சூப்பர் கலக்கிட்டா....திருடுறது பெரிய மேற்றா; றிக்ஸ் அதிகம் தானே... எங்களுக்கு அது றஸ்கு சாப்பிடுற மாதிரி.... sasi please publich this comment.

இராமசாமி கண்ணண் said...

நன்றி சசி

தமிழ் உதயம் said...

தேவையான நல்ல பதிவு.

Anonymous said...

inth programe codingkai koda eduka mudijalai and link podaal click pannalama?

மகாதேவன்-V.K said...

முக்கியமான பதிவு நன்றி சசி! ஆனால் என்னால் நீங்கள் குறிப்பிட்ட மாதிரி கோடிங்கை காப்பி செய்ய முடியவில்லையே ஆலோசனை தாருங்கள்

S Maharajan said...

super sasi

ஜெய்லானி said...

வல்லவனுக்கு வல்லவன் இருக்கிறான் பாஸ் ,அதனால ..என்னத்த சொல்ல ...!!!

Chitra said...

Great tip! Thank you.

புலவன் புலிகேசி said...

நல்ல உபயோகமான பதிவு சசி...ஆனா படவா தமிழன் சொன்னது போல் நடக்க வாய்ப்புள்ளது.

GEETHA ACHAL said...

சூப்பர்ப் பதிவு...நன்றி சசி...

யுவகிருஷ்ணா said...

இடதுபக்க மவுஸ் க்ளிக்கை டிஸேபிள் செய்துவிடுகிறீர்கள். ஓக்கே. ஆனால் டெக்ஸ்ட் முழுக்க ஹைலைட் செய்துவிட்டு, இடதுபக்க மவுசை க்ளிக்காமல் Ctrl + C போட்டு காப்பி செய்யமுடியுமில்லையா?

NONO said...

இது தீர்வில்லை... சிலவேளைகளில் சில பெயர்கள், இடங்களின் பெயர்கள், copy பண்ணி மேலதிக தகவல் தேட வேண்டியிருக்கும்...இந்த தடையால் சிரமம்... மேலே சிலபேர் கூறியது போல் soucrce code மூலம் முழுபக்கத்தையூம் பண்ணலாம்!

பாடுமீன் said...

Enakku sari varalla Brother Neenka sonna vali

Jeyamaran said...

நல்ல பதிவு நண்பரே உங்கள் பதிவுகளை tamil.kijj.in தலத்தில் போடுவதன் மூலமாக உங்களின் டிராபிக்கை அதிகரிக்கலாம்...............

asiya omar said...

உங்கள் தளத்தில் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கு.தவறாமல் கருத்து சொல்வதற்க்கு மிக்க நன்றி தம்பி.வாழ்க வளமுடன் என்றென்றும்.

Post a Comment

Text Widget

Text Widget