Tuesday, August 10, 2010

உங்கள் இமெயிலில் இருந்தே நம் பிளாக்கரில் பதிவு போடலாம் வாங்க

உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் இன்னொமொரு வசதி Email மூலமாகவும் பதிவு போடலாம். நாம் வழக்கமாக பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து தான் பதிவு போடுவோம். ஆனால் நம்முடைய ஈமெயில் மூலமாகவும் பதிவு போடுவதை தான் இங்கு காணபோகிறோம். குறிப்பாக இந்த வசதி அலுவலகங்களில் இருந்து பதிவு போடுபவர்களுக்கு மிகவும் உதவும்.







பயன்கள் :

  • நாம் பதிவு போட பிளாக்கர் தளத்திற்கு செல்ல வேண்டியதில்லை. 

  • ஒரு சில அலுவலகங்களில் நம்முடைய மெயில் தவற மற்ற அனைத்து தளங்களும் வேலை செய்யாதவாறு முடக்கி வைத்திருப்பார்கள் அந்த சமயங்களில் இந்த வசதி  மிகவும் துணையாக இருக்கும் .

  • நீங்கள் மற்றவர்கள் பார்ப்பதற்கு வேலை சம்பந்தமாக ஏதோ மெயில் தான் அனுப்பி கொண்டிருக்கிறான் என்று தோன்றும். (ஆனால் இதில் உள்ள உள்குத்து நமக்கு தானே தெரியும்)

  • இதனால் மேலதிகாரிகளிடம் மாட்டி கொள்வோம் என்ற பயமில்லாமல் செய்யலாம்.  

இந்த வசதியை பெற நீங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும்.  உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். நுழைந்து 
DASSBOARD - SETTINGS - EMAIL&MOBILE - என்ற இடத்திற்கு செல்லவும் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ  வரும் . 
  • இந்த இடத்தில் காட்டியுள்ளதை போல உங்கள் secret word கொடுக்கவும். (இதை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் ரகசியாமாக வைத்திருங்கள் ஏனென்றால் இதை வைத்து அவர்கள் உங்களுடைய தளத்தில் போஸ்ட் பப்ளிஸ் செய்யலாம்). 

  • Secret word கொடுத்தபின் Publish email Immediately என்பதை கிளிக் செய்து கீழே உள்ள Save settings என்பதை கிளிக் செய்து விடவும். இப்பொழுது நீங்கள் வெற்றிகரமாக Email via post வசதியை Activate செய்து விட்டீர்கள்.    

பயன்படுத்தும் முறைகள் :

  • உங்கள் இமெயில் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். (நான் ஜிமெயில் தேர்வு செய்து உள்ளேன் ) 

  • இங்கு To என்ற இடத்தில் உங்களுடைய பிளாக்கர் மெயில் ஐடியை தரவேண்டும்.  

  • subject என்ற இடத்தில் உங்களுடைய பதிவின் தலைப்பை தரவேண்டும்.

  • ஏதேனும் படத்தை சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் உங்கள் படத்தை Attach seidhu vidavum  

  • உங்களுடைய பதிவை மெயில் content box ல் கொடுத்து கீழே உள்ள send பட்டனை அழுத்தினால் உங்களுடைய பதிவு உங்கள் பிளாக்கில் பப்ளிஷ் ஆகிவிடும். 



சரி ஒருவேளை இந்த வசதி தேவையில்லை எனில் நீங்கள் திரும்பவும் பிளாக்கரில் அதே இடத்திருக்கு சென்று disable என்பதை கிளிக் செய்து save கொடுத்தால் போதும்.



    டுடே லொள்ளு 
    Photobucket
    எவ்ளோ நாள் தான் நாங்களும் தவழ்ந்து கிட்டே போறது புது டெக்னாலஜி வந்துடுச்சி    



    நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் உங்கள் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும்.

    10 comments:

    mkr said...

    அருமையான தகவல் சசி.

    தமிழ் உதயம் said...

    பயனுள்ள பதிவு.தேவைப்படும் போது பயன் படுத்தி கொள்கிறேன்.

    குடந்தை அன்புமணி said...

    இரண்டுமே Super oh.......... supper...... :))

    பதிவுலகில் பாபு said...

    ரொம்ப நல்ல தகவலைக் குடுத்தீங்க.. கண்டிப்பா யூஸ்புல்லா இருக்கும்.. நன்றி..

    Mrs.Menagasathia said...

    useful post!!

    Jeyamaran said...

    Attakaasam boss

    Gayathri said...

    useful post....and the todays lollu is so cute..thanks for the post....

    நேசமுடன் ஹாசிம் said...

    மிகவும் பயன்மிக்க தொரு வழிகாட்டலை அழகாக விளக்கியுள்ளீர் தோழரே மிக்க நன்றி தங்களின் சேவை மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்

    Mujibur Rahman said...

    very nice Thank u

    ராஜவம்சம் said...

    உபயோகமானப்பதிவு வாழ்த்துக்காள்.

    Post a Comment

    Text Widget

    Text Widget