Friday, August 27, 2010

உங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள் - Free Memory Improve Master

நம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணினியின் Ram முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் கணினியில் ஒரே நேரத்தில் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இருப்போம். ஒரு பக்கம் அலுவலக வேலை பார்ப்போம், இன்னொரு விண்டோவில் நம்முடைய வலைப்பதிவை பார்த்து கொண்டிருப்போம். அப்படி செய்து கொண்டு இருக்கும் போது நம் கணினியின் வேகம் மெமரி அதிகமாக உபயோக படுத்தப்படும். நம் கணினியும் வேகம் குறைந்து காணப்படும். இந்த குறைகளை தீர்க்கவே இந்த பதிவு.





இந்த மென்பொருளை நீங்கள் Install செய்து விட்டால் போதும் உங்கள் கணினியில் நீங்கள் எத்தனை ப்ரோக்ராம் ஒரே நேரத்தில் இயங்கினாலும் அதன் மெமரியை கட்டு படுத்தி உங்கள் கணினியின் வேகத்தை குறையாமல் பார்த்து கொள்ளும்.   இந்த மென்பொருளை நீங்கள் Download செய்ய உங்கள் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.





டவுன் லோட் செய்தவுடன் நமக்கு வந்திருக்கும் free-mim என்ற Setup பைல் வந்திருக்கும். அதை இரண்டு முறை கிளிக் செய்து மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். மென்பொருளை Install செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
 
இதில் நான் மேலே குறிப்பிட்டு காட்டி இருக்கும் இடத்தில் இந்த மென்பொருளின் வசதிகள் இருக்கும். இதில் ஐந்து  வகையான பிரிவுகள்  நமக்கு தெரியும்.
  • Information Overview

  • Memory Optimization

  • System Tuneup

  • Process Management

  • Configuration and Settings - என்ற பிரிவுகள் காணப்படும்.  

Information Overview : 

 இந்த பட்டனை கிளிக் செய்தவுடன் நமக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும். 




இந்த பிரிவில் நம் கணினி இப்பொழுது எவ்வளவு மெமரி உபயோக படுத்தபடுகிறது என்ற விவரம் இதில் நமக்கு தெரியும். இந்த விண்டோவில் உங்களுக்கு கீழே Good என்ற இது போல செய்தி வந்தால் உங்களுடைய கணினி போதிய அளவு மெமரி காலியாக உள்ளது என்று அர்த்தம். 


Memory Optimization 
இந்த பிரிவில் சென்றால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 
  • இந்த விண்டோவில் Fast Free, Deep Compress என்ற இரு வசதிகள் இருக்கும் இவை இரண்டுமே நம் கணினியின் மெமரிய கட்டு படுத்த உதவும் வசதிகளாகும். 

  • இதில் உள்ள Fast Free என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே ஒரு மெசேஜ் விண்டோ வரும். 

  • அதில் உங்களுடைய கணினி இதற்க்கு முன்னர் எவ்வளவு மெமரியை உபயோகித்தது. இப்பொழுது இந்த மென்பொருள் எவ்வளவு மெமரிய கட்டு படுத்தி உள்ளது என்ற விவரம் வரும்.   

  • இதை நீங்கள் ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டியதில்லை ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் அது தானாகவே இயங்கி நம் கணினியின் மெமரியை கட்டுபடுத்தும். 

  • இடைவெளி நேரத்தை மாற்ற விரும்பினால் அதற்கு கீழே உள்ள Auto Free every என்ற இடத்தில் உங்களுடைய நேரத்தை தேர்வு செய்து Save செய்து விடுங்கள். 

அடுத்து உள்ள மூன்று பிரிவுகளும் மென்பொருளின் அமைப்பை சரிசெய்வதர்க்கும், நம் கணினியில் எந்த பைல்கள் எவ்வளவு மெமரியை உபயோகித்து கொள்கிறது போன்ற தகவல்கள். கண்டிப்பாக உங்கள் கணினி முன்பை விட வேகமாக இயலும்.



டுடே லொள்ளு 
Photobucket
அவுங்க கிரகத்துக்கு போறது எவ்ளோ சந்தோசம் பாருங்க 

8 comments:

சி. கருணாகரசு said...

மிக பயனுள்ளத் தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றிங்க.

அஸ்மா said...

நல்ல பயனுள்ள பதிவு சசி! ட்ரை பண்ணிவிட்டு டவுட் இருந்தால் கேட்கிறேன். ஆனால் நீங்கள்தான் சில நேரம் பதில் தருவதில்லை....?

அஸ்மா said...

அப்படியா...மன்னிப்பெல்லாம் எதற்கு சசி? பாவம், நீங்களே பிசியான ஆளா இருக்கீங்க. 'read more' option என் template க்கு சரியா வரமாட்டேங்குது என்று உங்களிடம் கேட்டிருந்தேனே! நேரம் கிடைக்கும்போது அதற்கு மெயில் பண்ணுங்கள். அடுத்து, இந்த‌ 'Free Memory Improve Master' "Warning:This file is executable. This file has the ability to change your computer's settings.Be sure you trust the distributor" அப்படீன்னு ஒரு warning பண்ணுதே! என்னுடைய hard disk ஏற்கனவே 2 section னாக பிரிக்கப்பட்டுள்ளது. எதுவும் ப்ராப்ளம் ஆகாதில்லையா? உங்கள் பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.

அஸ்மா said...

நன்றி சசி! ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும்போது கணிணி வேகம் குறைந்து அப்படியே ப்ளாக் ஆகிவிடுகிறது. இதை ட்ரை பண்ணிட்டு சொல்றேன். மீண்டும் நன்றி சசி!

அஸ்மா said...

சூப்பர் சசி! நன்கு வேலை செய்கிறது. ப‌கிர்ந்துக் கொண்ட உங்களின் நல்ல உள்ளத்திற்கு பாராட்டுக்கள், நன்றிகள்!

நேசமுடன் ஹாசிம் said...

அருமையான பகிர்வு நண்பா மேலும் உன் புகள் விண்ணை அடையட்டும் என்றும் உன்பின்னே நட்புடன்

பிரவின்குமார் said...

வழக்கம்போல் மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பரே..!

THILLAI-MANI said...

mr.sasi good job super (:a:)

Post a Comment

Text Widget

Text Widget