Tuesday, October 26, 2010

கூகுளின் இன்ஸ்டன்ட் வசதியை செயல்படுத்த அல்லது நீக்க

இணைய ஜாம்பவனாக இருக்கும் கூகுளின் தேடியந்திரத்தில் மேலும் ஒரு மைல் கல்லாக அமைந்து இருப்பது இந்த கூகுளின் இன்ஸ்டன்ட் வசதி. அதாவது நாம் கூகுளில் ஏதேனும் தேட வேண்டுமென்றால் அந்த வார்த்தையை கொடுத்து என்ட்டர் தட்டிய பிறகே நாம் தேடிய முடிவுகள் நமக்கு வரும்.





ஆனால் இந்த கூகுள் இன்ஸ்டன்ட்டில் நாம் எழுத்துக்களை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போதே அதனுடைய முடிவுகள் நமக்கு தெரியும். இது தான் இந்த கூகுள் இன்ஸ்டன்ட் என்ற புது வசதி. இது அனைவரும் அறிந்ததே.

  

கூகுள் இன்ஸ்டன்ட்டின் சில சிறப்பம்சங்கள்  
  • இந்த கூகுள் இன்ஸ்டன்ட் ஒவ்வொரு தேடுதலுக்கும் 2-5 வினாடிகள் சேமிக்க படுகிறதாம்.

  • இந்த கூகுள் இன்ஸ்டன்ட் உலகில் உள்ள அனைவரும் உபயோகித்தால் ஒரு நாளில் 3.5 பில்லியன் வினாடிகள் சேமிக்க படுமாம்.

  • ஒரு வினாடிக்கு 11 மணி நேரம் சேமிக்க படுமாம். 

இந்த வசதியை எப்படி செயல் படுத்துவது மற்றும் நீக்குவது என்று இங்கு காணலாம்.

முதலில் கூகுள் www.google.co.in தளத்திற்கு  செல்லவும். 


  • இதில் சர்ச் பாரில் ஏதேனும் தட்டச்சு செய்யுங்கள். இப்பொழுது சர்ச் பாரின் பக்கத்தில் Instant is On (or) Instant is Off என்ற லிங்க் இருப்பதை காண்பீர்கள்.

  • அதை க்ளிக் செய்யவும். இப்பொழுது இந்த வசதியை நீங்கள் நீக்கவோ அல்லது செயல்படுத்தியோ கொள்ளுங்கள்.

டுடே லொள்ளு 
Photobucket


உன்ன பெறுக்க சொன்னா விளையாடிகிட்டா இருக்க உனக்கு சம்பளம் கட் 

Monday, October 25, 2010

கணினியில் பென்டிரைவ் தானாக இயங்குவதை தடுக்க

அனைவரும் உபயோக்கித்து கொண்டிருக்கும் ஒரு சாதனமாக இப்பொழுது பென்டிரைவ் உள்ளது. இது நாம் கணினியில் நுழைத்தவுடன் அது தானாகவே இயங்க ஆரம்பிக்கும் வகையில் உங்கள் கணினியில் செட்டிங்க்ஸ் செய்ய பட்டிருக்கும் இது சிறந்த வசதியாகும். ஒரு சிலருக்கு இது பிடிப்பதில்லை வேறு ஏதேனும் வேலை செய்திருக்கும் போது பென்டிரைவ் நுழைத்தவுடன் அது வேலை செய்ய ஆரம்பிப்பதால் செய்து கொண்டிருக்கும் வேலையில் கவனம் சிதறுகிறது.


இந்த வசதியை நாம் எப்படி செயலியக்க வைப்பது என்று இப்பொழுது காண்போம்.
  • உங்கள் கணினியில் Start - Run -சென்று gpedit.msc என்று கொடுத்து உங்கள் கணினியின் Group policy பகுதிக்கு செல்லுங்கள்.

  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் படத்தில் காட்டியுள்ள இடத்திற்கு சரியாக செல்லுங்கள்.

  • Administrative Templates

  • System

  • Select Turn off Autoplay - என்பதை மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளதை போல தேர்வு செய்து கொள்ளுங்கள். 

  • Turn off Autoplay என்பதை இரண்டு முறை க்ளிக் செய்தால் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  • இதில் Enable என்பதை தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள கட்டத்தில் All drives என்பதை தேர்வு சிது கொள்ளுங்கள்.

  • கீழே உள்ள OK பட்டனை அழுத்தி விடுங்கள். அவ்வளவு தான் இனி நீங்கள் பென்டிரைவ் உங்கள் கணினியில் நுழைத்தவுடன் தானாக இயங்காது. 

  • My Computer சென்று நாம் தான் இயக்க வேண்டும்.

டுடே லொள்ளு 
Photobucket
ரொம்ப சூடா இருக்கு கொஞ்சம் ஹீட் குறைங்கப்பா 

தமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help

நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்”  அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக  நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது  மிக பெரிய பெருமை.  இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில்  அதிபரோ இல்லை.  'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை.   சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட  முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!
யார் இந்த கிருஷ்ணன்...?!!
சமையல்கலை படிப்பு படித்து தங்க பதக்கம் வாங்கியவர் இவர்....பல விருதுகளையும் பெற்ற இவர் சில காலம் பெங்களூரில் பிரபல ஹோட்டலில்  வேலை பார்த்தார், பின்னர் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்து அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளை  யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்கான சன்மானம், அந்த முதியவரின்  பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞரின்  கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது! இந்த மாதிரி புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்காக  உதவணும் என்று இவர் முடிவு செய்த போது  இவரது வயது வெறும்  21    
இப்போது 29 வயதாகும் கிருஷ்ணன் அவர்கள் காலை மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலை உணவையும் கிட்டத்தட்ட 400 புத்திசுவாதீனம் இல்லாதவர்களுக்கு தினம் அளிக்கிறார் .... !! இத்துடன் முடிவது இல்லை இவரது வேலை....அந்த மக்களில் சிலருக்கு முடிவெட்டுவது, நகம் வெட்டுவது தொடங்கி அவர்கள் இறந்து விட்டால் கொல்லி போடுவது வரை இவரது தொண்டு நீள்கிறது.......!!   



இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது! 
சி.என்.என். தேர்வு பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.....!



கிருஷ்ணனுக்கு எப்படி ஓட்டு போடுவது 
 இவருக்கு எப்படி நாம் ஓட்டு போடுவது என்று பார்ப்போம். இந்த லிங்கில் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். http://heroes.cnn.com/vote.aspx 


  • இதில் நான் கட்டம் போட்டு காட்டி இருப்பது தான் நம்மாளு அவர் படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள். 

  • உடனே அவருடைய படம் கீழே இருக்கும் காலி கட்டத்தில் வந்திருக்கும்.

  • அடுத்து உங்களுக்கு தெரியும் இரண்டு வார்த்தைகளை அந்த காலி கட்டத்தில் சரியாக நிரப்புங்கள். 

  • அடுத்து கீழே உள்ள VOTE பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் நம் தமிழனுக்கு உங்களால் ஒரு ஓட்டு அதிகமாகியது என்ற பெருமையோடு அந்த தளத்தில் இருந்து வெளியேறுங்கள்.

  • முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும். 

  • பதிவர்கள் நினைத்தால் இதை அனைவருக்கும் எளிதாக கொண்டு செல்ல முடியும். பதிவர்களே தமிழனுக்காக ஒரு பதிவை போடுங்கள்.

திருமதி கவுசல்யா அக்கா அவர்களின் பதிவை பார்த்து இந்த பதிவை போட எண்ணம் எனக்கு தோன்றியது. அது போல் உங்களுக்கு பதிவு போட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால் உடனே போடவும். தாமதிக்க வேண்டாம். கடைசி தேதி நவம்பர் 18 வரை மட்டுமே.

Sunday, October 24, 2010

கூகுளில் புதுவசதி - Google Music India

கூகுளில் தினம் தினம் புதிய வசதிகள் வந்துகொண்டே உள்ள நிலையில் இப்பொழுது வந்துள்ள வசதி இசைப்ரியர்களுக்காக. நம்மில் பெரும்பாலானோர் பாடல்களை விரும்பி கேட்க்கிறோம். தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் நாம் பாடல்களை கேட்டு மகிழ்வோம். நீங்கள் பாலிவுட் பாடல்களை கேட்டு ரசிப்பவரா உங்களுக்காக வந்துள்ளது தான் இந்த கூகுள் மியூசிக் இந்தியா. இதில் எண்ணற்ற பாடல்கள் குவிந்து கிடக்கின்றன.



இனி ஒவ்வொரு பாடலையும் தேடி அலைய வேண்டியதில்லை அனைத்து பாலிவுட் பாடல்களும் ஒரே இடத்தில் கொட்டி கிடக்கின்றன.





இதில் நமக்கு தேவையான பாலிவுட் பாடல் வரிகளையோ அல்லது படத்தின் பெயரையோ கொடுத்தால் அடுத்த வினாடியே அந்த பாடல்கள் உங்களுக்கு கிடைக்கும்.




மேலே படத்தில் காட்டியுள்ள இடத்தில் இருக்கும் பட்டன்களை க்ளிக் செய்தால் உங்களுக்கு ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகி உங்களுடைய பாடல்கள் எந்த தங்கு தடையின்றி ஒலிக்கும். அது மட்டுமில்லாமல் இதில் இந்த பாடலை பாடியவரின் விவரங்களையும் மற்றும் பாடலில் கால அளவையும் நடிகர் நடிகைகள் விவரங்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம்.



இந்த தளத்திற்கு செல்ல Google Music இந்த லிங்கில் செல்லவும்.



டுடே லொள்ளு 
Photobucket
இது போரடிக்குது கொஞ்ச நேரம் உங்க தலைய கொடுக்குறீங்களா விளையாடிட்டு தரேன்.

Friday, October 22, 2010

ஐ போனில் உங்கள் பிளாக் எப்படி தெரிகிறது என பார்க்க

நாம் வலைப்பூவில் தினம் தினம் புதிய பதிவுகளை எத்தனை பேர் பார்க்கின்றனர் எந்தெந்த இயங்கு தளங்களில் இருந்து பார்க்கிறார்கள் என்ற விவரங்களை Blogger Stats சென்றால் பார்த்து கொள்ளலாம். அதில் ஐ போன்கள் மூலம் எத்தனை பேர் பார்த்தார்கள் என்ற விவரமும் தெரியும். ஐ போன்கள் விலையில் அதிகமானவை. ஆகையால் நம்மில் அனைவரும் ஐ போன்கள் வைத்திருக்கும் வாய்ப்பு இல்லை. ஆகையால் ஐபோனில் நம் பதிவு எப்படி தெரியும் என்று நம்மால் பார்க்கவே முடியாது.
  • இனி அந்த கவலையை விடுங்கள் இதற்காகவே ஒரு தளம் உள்ளது 

  • கூகுளில் எதையோ தேடி கொண்டிருக்கும் போது கிடைத்தது இந்த தளம். 

  • இந்த தளம் சென்று நம் பிளாக்கின் url கொடுத்து என்ட்டர் தட்டினால் போதும் நம் உடனே நம் தளம் அங்கு இருக்கும் ஐபோன் மாதிரியில் அழகாக தெரியும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.

  • இதில் நம் கீபோர்டின் space bar அழுத்தி ஐபோனை நம் விருப்பம் போல் திருப்பி கொள்ளலாம்.

  • அதில் உள்ள Tips and Options அழுத்தினால் அஹில் உள்ள மேலும் பல வசதிகளை தெரிந்து கொள்ளலாம். 

இந்த தளத்திற்கு செல்ல இந்த லிங்கில் க்ளிக் Test IPhone செய்யுங்கள்.


டுடே லொள்ளு 








இன்னடா ஸ்டெயிலா நடக்குற 


Thursday, October 21, 2010

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களை வேகமாக தரவிறக்க

 நாம் இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை காண்கிறோம். நமக்கு பிடித்த பாடல்கள், படங்கள், நகைச்சுவை மற்றும் தொழில்நுட்பம் இப்படி ஏராளமான வீடியோக்களை நாம் இனையத்தில் பார்த்து ரசிக்கிறோம். இந்த வீடியோக்களை பார்க்கவே இணையத்தில் பல தளங்கள் இருந்தாலும் Youtube, Daily motion, Meta cafe போன்ற தளங்கள் பிரபலமானவை. 
ஒருசில வீடியோக்களை நாம் பார்க்கும் போது நாம் அதை நம் கணினியில் சேமித்து கொள்ளலாம் என்று தோன்றும். ஆனால் இந்த தளங்களில் நாம் வீடியோவை பார்க்க மட்டுமே முடியும் தரவிறக்க முடியாது. இதை போக்கவே ஒரு சூப்பர் மென்பொருள் உள்ளது.

பயன்கள்:   
  •  உபயோகிப்பதற்கு மிகவும் சுலபமானது. 

  • இது முழுக்க முழுக்க இலவச மென்பொருள்.

  • நமக்கு தேவையான வீடியோவின் url கொடுத்து START பட்டனை அழுத்தினால் போதும் அந்த வீடியோ நம் கணினியில் சேமிக்க பட்டு விடும்.

  • வீடியோ டவுன்லோட் திறன் மிகவும் வேகமாக உள்ளது.

  • வீடியோவை தரவிறக்கும் போதே நமக்கு தேவையான பார்மட்டில் மாற்றும் வசதி(AVI,MP4,WMV)

  • வீடியோவில் உள்ள பாடலை மட்டும் தனியே பிரித்தெடுக்கும் வசதி.

  • இப்படி ஏராளமான வசதிகளை பெற்று உள்ள இந்த மென்பொருளின் அளவு 7.19 MB மட்டும் தான்.

பயன் படுத்தும் முறை:

  • இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் உங்களுக்கு வரும் EXE பைலை இரண்டு முறை க்ளிக் செய்து உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

  • இப்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள சார்ட்கட் பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  • இங்கு நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL காப்பி செய்து அங்கு கொடுக்க பட்டிருக்கும் URL என்ற இடத்தில் பேஸ்ட் செய்யவும்.

  • அடுத்த கட்டத்தில் SAVE TO என்ற இடத்தில் உங்கள் வீடியோ சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும்.

  • அடுத்து OUTPUT என்ற இடத்தில் நீங்கள் இந்த வீடியோவின் வகையை(FORMAT) தேர்வு செய்து கொள்ளவும். மாற்றவேண்டாம் என்றால் WITH OUT CONVERSION என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.

  • அடுத்து  கீழே உள்ள START என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் உங்கள் வீடியோ நீங்கள் தேர்வு செய்த இடத்தில் வந்திருக்கும். உங்களுக்கு கீழே இருப்பதை போல செய்தி வரும்.





அவ்வளவு தான் இந்த முறையை பயன்படுத்தி இணையத்தில் உள்ள வீடியோக்களை எளிதாக தரவிறக்கி கொண்டு நினைத்த நேரத்தில் பார்த்து ரசித்து கொள்ளலாம். 


டுடேலொள்ளு 
Photobucket
ஏன்பா இப்படி ஏடாகூடமான படங்களையே போடுற வேற நல்ல படமே கிடைக்கலையா உனக்கு.

பென்ட்ரைவை(Pen drive) பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்

பென்ட்ரைவ் என்பது இப்பொழுது கணினி   உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருள் இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணினியில் பதியவோ உபயோகபடுத்த படுகிறது. இந்த பென்ட்ரைவ்கள் என்ன பிரச்சினை என்றால் இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணினிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. இதிலிருந்து நம் பென்ட்ரைவ் பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்களை கீழே கொடுத்துள்ளேன்.
1. USB WRITE PROTECTOR :
 இந்த மென்பொருள் உங்களுடைய பென்ட்ரைவ்களில் உள்ள கோப்புகளை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த கோப்புகளை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது. இதனால் உங்கள் பென்ட்ரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம். மற்றும் வைரசினால் இந்த 
பென்ட்ரைவ்களை கண்டறிய முடியவில்லை. இந்த மென்பொருள் மிக சிறிய அளவே(190KB) உடையது.




2. USB FIREWALL :
  பென்ட்ரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். USBயில் இருந்து கணினிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன் படுகிறது. இதை DOWNLOAD செய்து இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணினியின் பின்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும். ஏதேனும்  வைரஸ் உங்கள் கணினியில் புக முயற்சிக்கும் போது இந்த இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது. நன்றாக வேலை செய்கிறது. 




3. PANDA USB VACCINATION TOOL :
பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவினால் பென்டிரைவில் உள்ள autorun.inf பைலை முற்றிலுமாக தடைசெய்கிறது. உங்கள் பென்டிரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கபடுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது. இந்த மென்பொருளுக்கு நமக்கு தேவையான சார்ட்கட் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.


4. USB GUARDIAN :
இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான பைலை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம்.




மேலே கூறிய நான்கு மென்பொருட்களும் உங்கள் பென்ட்ரைவை பாதுகாக்க உதவுகின்றன. தரவிறக்கி கொள்ளுங்கள் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.


டுடே லொள்ளு 
Photobucket
ஏம்மா அந்த பக்கம் திரும்பி இருக்க உன் அழகான முகத்த கொஞ்சம் காட்டுமா 

Text Widget

Text Widget