Tuesday, October 12, 2010

கூகுளில் பாதுகாப்பாக தேடுவதற்கு

இணையத்தில் கூகுளை உபயோக படுத்தாதவர்கள் எவரும் இல்லை என்ற அளவிற்கு கூகுளின் சேவை எண்ணிலடங்காதது. கூகுள் தேடியந்திரங்கள் கேட்டதை நொடியில் கொடுக்கும். பெருமை வாய்ந்த கூகுள் நிறுவனம் தற்போது அனைவருக்கு கொடுத்திருக்கும் வசதி தான் SSL SECURE SEARCH. இந்த வசதி மூலம் நாம் கூகுளில் தேடுவதை யாரும் அறிய முடியாது. பாதுகாப்பானதாக இருக்கும்.
இந்த வசதியை பெற இந்த லிங்கில் க்ளிக் செய்யவும்.  https://www.google.com/.



  • இந்த URL பார்த்தாலே உங்களுக்கு வித்தியாசம் தெரியும் ஒரு 'S' அதிகமாக சேர்ந்திருக்கும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.



  • பொதுவாக இந்த 'S' வங்கிகள், மெயில் தளங்கள்,கடவுச்சொல் கொடுத்து நுழையும்  மற்றும் ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்யும் தளங்களிலேயே இந்த பாதுகாப்பு இருக்கும்.

  • இப்பொழுது வளர்ந்து வரும் நவீன தொழில் நுடபதிர்க்கு ஏற்ற வகையில் கூகுள் இந்த சேவையை அனைவருக்கும் அளித்து உள்ளனர்.

  • இனி நாம் கூகுளில் மிகவும் பாது காப்பாக நமக்கு தேவையானதை தேடி பெற்று கொள்ளலாம்.

டுடே லொள்ளு 
Photobucket


எவ்ளோ காலம் தான் இவுங்கோ குடிக்கறதையே பாக்குறது 

உங்கள் மொபைல் போனை பாதுகாக்க சிறந்த 3 இலவச ஆன்டி வைரஸ்கள்

நாகரிகம் வளர்ந்து விட்ட இன்றைய காலக்கட்டத்தில் மொபைல் என்பது ஒரு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. இதிலும் இளம் வயதினர் இன்டர்நெட்டுடன் கூடிய செல் போன் வைத்திருப்பது ஒரு பெருமையாக கருதுகின்றனர். கணினியில் செய்யப்படும் அனைத்து வேலைகளும் இப்பொழுது மொபைல்களிலும் செய்து கொள்ளலாம்.

எந்த அளவுக்கு சாதகமான வசதிகள் உள்ளது அந்த அளவிற்கு அதில் வைரஸ் எளிதில் பரவும் பாதகமும் இருக்கு. இதை தடுக்கவே நிறைய Antivirus இருந்தாலும் அதில் சிறந்த Anti virus மென்பொருட்களை இங்கு பதிவாக கொடுத்து உள்ளேன். இதை பயன் படுத்தி உங்கள் மொபைல் போனை பாதுகாப்பானதாக வைத்து கொள்ளுங்கள்.



NetQin  Mobile Anti Virus

இந்த தளம் ஆன்டி வைரசின் செயல்பாடு மிகவும் சிறந்ததாக உள்ளது. இந்த தளத்தில் சென்று உங்கள் மொபைலின் மாடல் எண், மொழி மற்றும் மொபைல் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி உங்கள் மென்பொருளை தரவிறக்கி கொள்ளவும்.



இந்த மென்பொருளை தரவிறக்க NetQin Mobile Anti Virus


Look Out Mobile Anti Virus





இந்த ஆன்டி வைரசும் நன்றாக செயல் படுகிறது. இதன் மூலம் உங்கள் மொபைல் போனின் அனைத்து தகவல்களையும் நகல் எடுத்து வைத்து கொள்ளலாம். தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளலாம். இதில் ஆன்லைன் ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. இதை தரவ்றக்க இந்த லிங்கில் சென்று உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் மொபைல் போனின் ரகத்தை குறிப்பிட்டு GO க்ளிக் செய்து உடன் மேலே Download என்ற மஞ்சள் நிற பட்டன் வரும் இதை க்ளிக் செய்து இந்த மென்பொருளை தரவிறக்கி கொள்ளலாம்.
இதை தரவிறக்க - Mylook Out Mobile Anti Virus


Get Droid Free Anti Virus


Android மொபைல் போன்கலுக்காக பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருள் ஆகும். இது வைரஸ், மால்வேர் அவற்றிடம் இருந்து போன்களை பத்திரமாக பாதுகாக்கிறது. இந்த மென்பொருளை தரவிறக்க  Droid Security


 டுடே லொள்ளு  
Photobucket
நீங்க பண்ற கலாட்டாவுக்கு என்ன ஏண்டா அம்புல குத்துறீங்க 

Monday, October 11, 2010

குரோமில் உள்ளது போல் பயர்பாக்ஸிலும் Auto Fill Forms

கூகுள் குரோம் தந்து புதிய பதிப்பான கூகுள் குரோம் ஆறில் சிறந்த வசதிகளை வாசகர்களுக்கு அளித்து இருந்தது. அதில் முக்கியமான ஒன்று தான் இந்த Auto Fill Forms.
இந்த வசதியின் மூலம் நாம் இணையத்தில் படிவங்களை ஒவ்வொரு முறையும் நிரப்ப வேண்டியதில்லை ஒரே கிளிக்கில் நாம் படிவத்தை பூர்த்தி செய்து விடலாம்.
இதனால் குரோம் உபயோகிப்பவர்கள் எளிதாக ஆன்லைன் படிவங்களை எளிதாக நிரப்ப முடிந்தது.  இனி பயர்பாக்ஸ் உபயோகிப்பவர்களும் இந்த வசதியை பெறலாம். ஆமாம் அதற்காக நீங்கள் ஒரே ஒரு Add-on மட்டும் உங்கள் பிரவுசரில் பொருத்தினால் போதும். 

இன்ஸ்டால் செய்யும் முறை: 
  • இந்த லிங்கில் சென்று இந்த Autofill Forms நீட்சியை தரவிறக்கி கொள்ளுங்கள். 

  • உங்கள் பிரவுசரில்  இன்ஸ்டால் ஆகியவுடன் உங்கள் பயர்பாக்சை Restart seidhu கொள்ளுங்கள். 

  • இந்த நீட்சியை உங்கள் பிரவுசரில் நிறுவியவுடன் உங்களுக்கு ஒரு பென்சில் போன்ற பட்டன் உங்கள் பிரவுசரில் தெரியும். 

  • அதை க்ளிக் செய்து Settings பகுதிக்கு செல்லுங்கள்.உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ உண்டாகும்.

  • இதில் 25 தகவல்கள் காணப்படும். அந்த தகவல்களில் உங்களுக்கு தேவையான தகவலை நிரப்பி கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தி விடவும்.

  • இதில் நீங்கள் வேண்டாம் என்று நினைக்கும் கட்டத்தை நீக்க Main என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.

  • உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.

  • இதில் அந்தந்த தகவல்களுக்கு நேராக உள்ள டிக் குறியை எடுத்து விட்டால் Simple பகுதியில் அந்த கட்டங்களை நீக்கி விடலாம்.

  • மட்டும் இதில் உள்ள MOVE UP, MOVE DOWN பட்டங்கள் மூலம் நமக்கு தேவையான தகவலை மேலேயும் கீழேயும் நகர்த்தி கொள்ளலாம்.

  • இதில் நீங்கள் Interface என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு தேவையான Shortcut key கொடுத்து கொள்ளலாம்.

  • இதில் உங்களுக்கு தேவையான Shortcut key கொடுத்து உங்கள் மாற்றங்களை சேமித்து கொள்ளுங்கள். 

பயன் படுத்து முறை:
  • நீங்கள் ஏதேனும் தளத்தில் உறுப்பினர் ஆக நினைக்கின்றீர்கள் என வைத்து கொள்வோம்.

  • அவர்கள் உங்கள் விவரங்களை நிரப்புவதற்காக படிவங்கள் தருவார்கள் அதில் இனி நீங்கள் ஒவ்வொரு விவரமாக தட்டச்சு செய்ய வேண்டியதில்லை. 

  • உங்கள் மவுசில் Right Clik செய்யுங்கள். 

  • இதில் நீங்கள் Autofill Forms என்ற லிங்கை க்ளிக் செய்யவும். க்ளிக் செய்தவுடனே உங்கள் விவரங்கள் அந்தந்த கட்டங்களில் சரியாக பொருந்தியிருக்கும்.

  • அல்லது உங்கள் கீ போர்டில் ALT+J ஒருசேர அழுத்தினாலும் உங்களுடைய vivarangal பொருந்தி விடும். 

  • இந்த Add-on பற்றி மேலும் அறிந்து கொள்ள http://autofillforms.mozdev.org/

அவ்வளவு தான் பயர் பாக்ஸ் உபயோகிப்பவர்களும் இந்த வசதியை பெற்று அவர்களின் பொன்னான நேரம் செலவாவதை தடுக்கலாம்.
டுடே லொள்ளு 
Photobucket


ஏண்டா மொட்ட தலையா யார பார்த்து கண்ணடிக்கிற 

விருப்பமில்லாத தளங்களில் உள்ள Follow லிஸ்டில் இருந்து விலக

நாம் இணைய உலகில் பல எண்ணற்ற வலைத்தளங்களை பார்வையிட்டு அதில் உள்ள செய்திகளை நாமும் படிக்கிறோம். நமக்கு பிடிக்கும் தளங்களில் Google friend connect மூலம் பாலோ செய்கிறோம். இப்படி follow செய்வதனால் அவர்கள் தளத்தில் ஏதேனும் பதிவு போட்டால் உடனே அது நம் பிளாக்கின் Dassboard பகுதியில் வந்து விடும். அந்த லிங்கில் சென்று நாம் பதிவைபார்க்கிறோம். இது அனைவரும் அறிந்ததே. 
ஒரு சில நேரங்களில் நாம் முன்பு follow செய்த தளங்கள் இப்பொழுது எந்த பதிவையும் இடாமல் சேவை நிறுத்த பட்டிருக்கலாம் அல்லது முன்பு நல்ல செய்திகளை கொடுத்த தளங்களில் இருந்து தற்போது நமக்கு பிடிக்காத செய்திகளை வெளியிடலாம் அந்த சமயங்களில் நாம் அந்த தளங்களின் Followers பட்டியலில் எப்படி விலகுவது என்று கீழே காணலாம்.

  • இதற்கு முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். 

  • உங்கள் பிளாக்கின் Dassboard பகுதிக்கு செல்லவும்.

  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.இதில் இடது பக்கத்தில் உள்ள Blogs I am Following என்ற பட்டனை அழுத்தவும்.

  • அதில் நாம்  பின்தொடரும் தளங்கள் மற்றும் அந்த தளங்களில் வெளியான கடைசி பதிவின் லிங்க் காணப்படும்.

  • இதில் கீழே நீல நிறத்தில் உள்ள MANAGE என்ற பட்டனை அழுத்தவும்.

  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  • இதில் நீங்கள் ஏதேனும் ஒரு தளத்திற்கு நேராக உள்ள Settings என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.

  • நீங்கள் நீக்க வேண்டிய தளமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எந்த தளத்திற்கு நேராக உள்ள Settings லிங்கை க்ளிக் செய்யலாம்.

  • Settings க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  • உங்களுக்கு வரும் விண்டோவில் Sites you've joined என்ற லிங்கை க்ளிக் செய்யவும். 

  • க்ளிக் செய்தவுடன் வலது பக்கத்தில் நீங்கள் பின்தொடரும் அனைத்து தளங்களும் வந்திருக்கும்.

  • இதில் எந்தெந்த தளங்களில் இருந்து விலக நினைக்கிறீர்களோ அந்த தளங்களுக்கு நேராக உள்ள Stop Following என்ற லிங்கை அழுத்தினால் போதும் நீங்கள் அந்த தளத்தின் Followers லிஸ்டில் இருந்து நீங்கி விடுவீர்கள்.

  • இனி அந்த தளத்தில் எந்த பதிவு போட்டாலும் உங்கள் பிளாக்கில் அப்டேட் ஆகாது.

டுடே லொள்ளு 


Photobucket


டேடேடே பார்த்து போட மச்சான் 

Sunday, October 10, 2010

தரம் குறையாமல் படங்களின் அளவை குறைக்க யாகூ நிறுவனத்தின் Smush It

ஒரு படம் என்பது ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்கிறார்கள் வல்லுனர்கள். நாம் எழுத்தில் புரிய வைக்க முடியாததை ஒரு படத்தை காட்டினால் மற்றவர்களுக்கு எளிதாக புரிந்து விடுகிறது அது மட்டுமல்லாது ஏதேனும் நிகழ்வை சுட்டிக்காட்டவோ அல்லது நம் பதிவை அழகாக மாற்றவோ நாம் பதிவிற்கு சம்பந்தமான சில படங்களை சேர்ப்போம்.

அப்படி நாம் படங்களை சேர்ப்பதனால் நம் பதிவுகள் திறக்க அதிக நேரம் எடுக்கிறது. மற்றும் நம் கணினியில் வைத்திருந்தாலும் படங்கள் அவற்றின் அளவிற்கு ஏற்ப நம் கணினியின் கொள்ளளவை நிரப்புகின்றன. ஆகையால் இந்த படங்களின் அளவை எப்படி குறைப்பது அதுவும் தரத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல்.


பயன்கள்:
  • நம் பதிவுகள் திறக்க அதிக நேரம் எடுத்து கொள்ளாது.

  • நம் கணினியில் அதிக இடத்தை பெற்று கொள்ளாது.

  • நம் படத்தின் தரம் எந்த விதத்திலும் குறையாது.

  • நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை.

  • ஒன்றிற்கு மேற்ப்பட்ட படங்களை ஒரே நேரத்தில் மாற்றும் வசதி.

  • இந்த தளம் சென்ற வுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.



  •  இதில் படத்தில் காட்டியிருப்பதை போல் UPLOADER என்பதை கிளிக் செய்யுங்கள்.

  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  • அதில் Select files to Smush என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

  • நீங்கள் அளவை குறைக்க வேண்டிய அனைத்து படங்களையும் தேர்வு செய்து open கொடுக்கவும்.

  • அவ்வளவு தான் நீங்கள் தேர்வு செய்த அனைத்து படங்களும் அளவு குறைந்து ஆனால் அதே தரத்தோடு வந்திருக்கும்.

  • உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும் அதில் நீங்கள் smush செய்த படங்கள் தெரியும்.

  • Savings என்ற இடத்தில் உங்கள் படத்தில் குறைக்க பட்ட அளவு காட்டப்படும்.

  • Sumsh செய்த படங்களை தரவிறக்க மேலே உள்ள Download Smushed Images என்ற பட்டனை க்ளிக் செய்தால் உங்கள் படங்கள் அனைத்தும் ஒரே Zip கோப்பில் உங்கள் கணினியில் சேமிக்க படும்.

  • நீங்கள் இணையத்தில் இருக்கும் படத்தையும் அளவை குறைக்கலாம். இதற்கு அருகில் உள்ள URL என்ற பட்டனை அழுத்தவும்.

  • இது போல் விண்டோ வந்ததும் உங்கள் படத்தின் URL இங்கு கொடுக்கவும்.

  • ஒவ்வொரு படத்தின் URL தனிதனி வரியில் கொடுக்கவும். அடுத்து கீழே உள்ள Smush pattanai அழுத்தினால் உங்கள் படம் தயாராகிவிட்டது.

  • நீங்கள் தரவிறக்கி கொள்ளலாம்.

இந்த தளத்திற்கு செல்ல இந்த லிங்கில் Smush It செல்லவும். 

    டுடே லொள்ளு 


    Photobucket


    இரும்மா இந்த சுயம் வரத்திலாவது நல்ல மாப்பிள்ளை கிடைக்குதான்னு பார்ப்போம்.

    Saturday, October 9, 2010

    உங்கள் வீடியோவில் இருந்து தேவையான பகுதியை Gif பைலாக சேமித்து கொள்ள

    நம்மிடம் ஏதேனும் வீடியோ இருக்கும் அதில் உள்ள சிறிய பகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து அதை எப்படி gif பைலாக மாற்றுவது என்று இங்கே காணப்போகிறோம். இந்த வேலையை செய்ய நமக்கு இந்த சிறிய மென்பொருள் தேவைபடுகிறது. 
    இந்த மென்பொருளை டவுன்லோட் செய்தவுடன் உங்கள் கணினியில் உங்களுக்கு வரும் பைலை நேரடியாக இயக்கலாம்.



    • Install செய்ய வேண்டியதில்லை.

    • மென்பொருளை ஓபன் செய்ததும் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

    • இதில் பைல் கிளிக் செய்து உங்கள் வீடியோவினை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

    • இது Avi, Mp4 ஆகிய பைல்களாக இருத்தல் அவசியம்.

    • உங்கள் வீடியோவை தேர்ந்தெடுத்து கொண்டு உங்களுக்கு Gif பைலாக மாற்ற விரும்பும் பகுதியை தேர்ந்தெடுக்க இந்த scroll குறியை நகர்த்தவும்.

    • உங்களுக்கு வேண்டிய பகுதி வந்ததும் Set Start Point என்ற குறியை கிளிக் செய்யவும்.



    • உங்களுக்கு தேவையான பகுதி வந்தவுடன் End என்று குறிப்பிட்டு இருக்கும் பட்டனை க்ளிக் செய்து விடவும். 

    • இப்பொழுது நீங்கள் Export என்பதை க்ளிக் செய்யவும். 

    • அடுத்து Export to animated gif என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.

    • அடுத்து உங்கள் File name கேட்க்கும் அதை கொடுத்து விட்டு Save என்பதை கிளிக் செய்து விடவும்.

    • அவ்வளவு தான் உங்கள் Gif பைல் உருவாகி விட்டது.

    இந்த மென்பொருளை தரவிறக்க  Movie to Animated Gif




    டுடே லொள்ளு 


    Photobucket
    கொஞ்ச நேரம் தனியா ஆட விடுங்கப்பா 

    Friday, October 8, 2010

    பிளாக்கர் தளத்திற்கு உங்கள் ஆலோசனைகளை நேரடியாக கூறலாம் வாங்க

    பிளாகர் தளம் நம் தமிழ் பதிவர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிகமாக உபயோகிக்கப்படும் தளமாக உள்ளது. முந்தைய நாட்களில் இந்த தளம் சில அடிப்படை வசதிகளை கொண்டே காணப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வருடத்தில் பல வசதிகளை கொடுத்துகொண்டே உள்ளது அதற்கு காரணம் வாசகர்கள் நேரடியாக தங்கள் ஆலோசனைகள் வழங்கும் வசதியை ஏற்ப்படுதியதே.
    இந்த தளத்தில் நம்மை போன்ற பல பிளாக்கர் வாசகர்கள் அவர்களின் கருத்தை கூறி இருப்பார்கள். அந்த ஆலோசனைகள் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் அதற்கு ஓட்டு போட வேண்டும். இதில் அதிக ஓட்டு பெரும் ஆலோசனைகள் பிளாக்கர் குழுவினால் பரீசிலிக்கபட்டு அந்த வசதியை அவர்கள் பிளாக்கரில் புகுத்துவார்கள். இந்த முறை மூலம் நமக்கு கிடைத்ததே இந்த 



    • Template Designer

    • Spam comments Filtering

    • Popular post

    • Stats

    • Add Caption 

    • Jump Breaks

    • Upload Multiple Images 

    போன்ற வசதிகளாகும். இந்த வரிசையில் நமக்கு தேவையான வசதிகளை நாமே கெட்டு பெரும் இந்த அறிய வாய்ப்பை இப்பொழுது திரும்பவும் துவக்கி உள்ளனர்.  இந்த அறிய வாய்ப்பை நழுவ விடாமல் இந்த லிங்கில் சென்று நம் ஆலோசனைகளையும், ஏற்கெனவே கேட்கப்பட்டுள்ள நல்ல வசதிகளுக்கு ஓட்டும் போட்டு நமக்கு தேவையான வசதியை பெற இந்த லிங்கில் Blogger Products and Ideas செல்லவும். 

    உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
    • இந்த விண்டோவில் உங்களுக்கு ஏற்க்கனவே கேட்கப்பட்டுள்ள வசதிகள் வரும். 

    • இதில் இந்த வசதி பிடித்திருந்தால் டிக் குறியிடவும். ஒருவேளை கேட்கப்பட்டுள்ள வசதி உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் skip கொடுத்து விடவும்.

    • உங்கள் ஆலோசனைகளை தெரிவிக்க கீழே காட்டியிருக்கும் Submit an Idea என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

    • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

    • இது போல வந்தவுடன் உங்களுக்கு தேவையான வசதியை பற்றி அந்த காலி கட்டத்தில் கொடுக்கவும்.

    • கீழே உள்ள இரண்டு கட்டங்களில் முறையே உங்கள் பெயர், உங்கள் இடம் ஆகியவைகளை கொடுத்து கீழே உள்ள Submit கிளிக் செய்யவும்.

    • உங்களுக்கு இன்னொரு சிறிய விண்டோ ஓபன் ஆகும் அதில் I accept என்பதை கிளிக் செய்து திரும்பவும் Submit என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவு தான் நீங்கள் அனுப்பிய ஆலோசனை பிளாக்கர் தளத்திற்கு நேரடியாக சென்று விட்டது.

    • இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள Blogger Buzz செல்லவும்.

    நான் Comments Reply Option,Upload gif file direct to blogger post பற்றி தெரிவித்து உள்ளேன். இந்த வசதி அனைவருக்கு பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் இந்த லிங்கில் சென்று உங்கள் வாக்கினை இடவும்.
    டுடே லொள்ளு
    Photobucket
    உங்க கிட்ட கமென்ட் வாங்கருதுக்குள்ள நான் படறேன் பார் பாடு அய்யய்யோ 

    Text Widget

    Text Widget