Saturday, April 3, 2010

நம்முடைய பிலாக்கர் பதிவில் எப்படி MP3 (ஆடியோ) பைல்களை சேர்ப்பது?



 நாம் பிலாக்கரில் பதிவு எழுதும் போது பதிவிற்கு சம்பந்தமான ஆடியோ, வீடியோ பைல்களை சேர்க்க நினைப்போம். வீடியோ பைல்களை எப்படி நம்முடைய பதிவில் சேர்ப்பது என்று என்று நான் முந்தைய பதிவில் கூறி இருக்கிறேன். அதை பார்க்காதவர்கள் இங்கு சென்று பார்த்து கொள்ளவும்.  இங்கு நான் சில ஆடியோ பைல்களை இங்கு சேர்த்துள்ளேன்






    இப்பொழுது நம்முடைய பதிவில் எப்படி ஆடியோ பைல்களை சேர்ப்பது என்று இங்கு பார்க்க போகிறோம்.

இந்த வசதியை பெற இந்த தளத்திற்கு செல்லவும் http://www.4shared.com இந்த தளத்தில் நீங்கள் உறுப்பினர் ஆக வேண்டியதில்லை உங்களுடைய gmail id உபயோக படுத்தி கொள்ளலாம்.  google என்பதை க்ளிக் செய்து உங்கள் Gmail Id , Password கொடுத்து உள்ளே நுழைந்து கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ ஓபன் ஆகும். 







இதில் முதலில் நீங்கள் Choose file என்பதை க்ளிக் செய்து உங்களுடைய AUDIO பைலை தேர்ந்து எடுத்து கொள்ளுங்கள். அதற்கு அடுத்து UPLOAD என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். நீங்கள் செலக்ட் செய்த FILE அப்லோட் ஆகி மேலே வரும் வந்த பைலை DOUBLE CLICK செய்யுங்கள். உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் 
 
இதில் EMBED என்பதை க்ளிக் செய்யுங்கள். உங்களுக்கு மேலே உள்ளதை போல வரும் அதில் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீள, அகல அளவுகளை மாற்றிக்கொண்டு கீழே உள்ள HTML CODE காப்பி செய்து கொள்ளுங்கள்.  காப்பி செய்து கொண்டு உங்கள் POST EDITOR பகுதியில் EDIT HTML என்பதை க்ளிக் செய்து நீங்கள் காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே உள்ளதை போல இருக்கும் 
அவ்வளவு தான் நீங்கள் தேர்வு செய்த ஆடியோ பைல் உங்களுடைய போஸ்ட்டில் வந்திருக்கும்.  


டுடே லொள்ளு 
DOCTOR
சரி எல்லாரும் வந்து வரிசையில நில்லுங்க, ஆளுக்கு ஒரு ஊசி போட்டுக்கிட்டு போங்க  

12 comments:

ஹாய் அரும்பாவூர் said...

வர வர சிறப்பான தகவல்களை தருகிறாய் நண்பா
தகவல்களுக்கு நன்றி
தொடரட்டும் உன் சேவை அன்புடன்

ஆகமக்கடல் said...

பதிவிற்கு நன்றி நண்பரே,நோக்கியா 3110C மொபைலில் PDFபைலை படிக்க ஏதேனும் softwere instal செய்யமுடியுமா?@கக்கு - மாணிக்கம்

தமிழ் உதயம் said...

எப்போதாவது ஆடியோ பைலை இணைக்கக்கூடிய இடுகை வெளியிடும் போது முயற்சிக்கிறேன்.

myworld said...

சசி அண்ணா,
தகவலுக்கு நன்றி...

S Maharajan said...

சூப்பர் தகவல் சசி

saravanabalaji s said...

நல்ல பதிவு நண்பரே, இதனை அப்படியே நமது mobile phone க்கு தரவிறக்கி கொள்ள ஏதும் வாய்ப்புகள் உள்ளதா, அதாவது உங்கள் தளத்தில் தாங்கள் வைத்துள்ள வடிவேலு joke ஐ click செய்து download to any mobile என்ற அளவில், அப்படி எனில் எவளவு நீளத்திற்கான file ஐ download செய்து கொள்ள முடியும்

Chitra said...

தகவல்களுக்கு நன்றி

ARANTHAIRAJA said...

பயனுள்ள பகிர்வு நண்பரே... இதுபோன்ற பிளாக்குகளை நிர்வகிக்கும் பல டிப்ஸ்-களை அடிக்கடி வழங்க வேண்டுகிறோம். நன்றி.

srividhya Ravikumar said...

Nice blog.. super explanation.. following you and i am glad that i am your 100 th follower

srividhya Ravikumar said...

Nice site.. following you

மரா said...

உருப்படியன தகவல்.நன்றி

sweetprabha said...

THANK YOU VERY MUCH FOR YOUR VALUABLE COMMUNICATION.........

Post a Comment

Text Widget

Text Widget