Thursday, April 8, 2010

அவார்ட் கொடுக்கேறுனுங்க - ஏதோ நம்மால முடிஞ்சது

இந்த அவார்ட  ஒரு புண்ணியவான்(சைவ கொத்து பரோட்டா)  போனா போகுதுன்னு எனக்கு கொடுத்தாரு. ஆனா நான் இங்கே இந்த விருதை கொடுத்திருக்கும் அனைவரும் உண்மையிலேயே ராஜாக்கள், ராணிகள் தான். என்னை கவர்ந்த பத்து பேருக்கு இங்கு இந்த விருதை கொடுக்கிறேன். அனைவரும் அதை ஏற்று கொள்ளும் படி கேட்டு கொள்கிறேன்.    
AWARD


1. சமையல் அட்டகாசங்கள்: ஜலீலா 



நான் மிகவும் ருசித்து(ரசித்து) பார்க்கும் தளங்களில் ஒன்று நம்ம அக்கா உடைய தளமுங்க. எந்த அக்கான்னு பார்கறீங்களா நம்ம பதிவுலகதுக்கே பிரபலமான நம்ம ஜலீலா அக்கா தான். இவுங்க சமையல் மட்டுமில்லாமல், தையற்கலை, வைத்தியம் என்று அசத்து அசத்துன்னு அசத்துறாங்க. ஒன்னு மட்டும் சொல்றேங்க பதிவுலகத்துல ஏதாவது தேர்தல் வச்சா என் ஓட்டு இவங்களுக்கு தான்.  இவங்களுக்கு இந்த விருதை அளிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.



2. வேலன் 



நான் விரும்பி படிக்கும் தளங்களில் ஒன்று. இவருடைய அனைத்து பதிவுகளுமே சூப்பர் அதிலும் இவர் போட்டோஷாப்பை பற்றி விளக்கும் விதமே தனி அழகாக இருக்கும். நாம் காசு கொடுத்து படித்தாலும் இவ்வளவு எளிதாகவும் தெளிவாகவும் யாரும் சொல்லி தருவார்களா என்பது சந்தேகமே. அந்த அளவிற்கு எளிமையாக சொல்லி தருவார்(நானே கத்துகிட்டேன்னா பாருங்களேன்). அப்புறம் பதிவின் முடிவில் ஒரு படத்தையும் போட்டு அதற்கு ஒரு வசனத்தையும் கூறி இருப்பார் பாருங்களேன். உங்களால் சிரிக்காமல் வரமுடியாது.



3. கொஞ்சம் வெட்டி பேச்சு: சித்ரா  



இவர்களை பற்றி நான் சொல்லவே வேண்டியதில்லை அந்த அளவுக்கு இவுங்க பிரபலம். இவர் எழுதும் பதிவுகள் அனைத்துமே சூப்பர் ஹிட் தாங்க. வாழ்வில் நடந்த யதார்த்தை விளக்குவதில் இவருக்கு நிகர் ஆளையே நான் இந்த பதிவுலகில் இதுவரை பார்த்ததில்லை. விருதுகளின் ராணி இவுங்க. எக்கச்சக்க விருது வாங்கியிருக்காங்க நாமளும் ஒரு விருது கொடுதுடுவோம்னு தான். என்ன படத்தில் இவர் போட்டோவுக்கு பின்னாடி map இருக்குன்னு பார்க்கறீங்களா. உலகமே இவுங்க பின்னாடி தான் இருக்குதாம்.



4. வேர்களைதேடி: முனைவர் இரா. குணசீலன்



"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி" என்ற பெருமை பெற்ற நம் தமிழ் மொழியின் புகழை அனைவருக்கும் தெளிவுபடுத்தும் இவருடைய பணி மகத்தானது. என்ன புண்ணியம் செய்தனரோ இவருடைய மாணவர்கள் இவ்வளவு தமிழ் புலமை வாழ்ந்தவர் ஆசிரியராக கிடைப்பதற்கு. இவருக்கும் இந்த விருதை அளிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.



5. சும்மா : தேனம்மை லக்ஷ்மணன்  

  அடுத்து கவிதையில் கலக்கும் நம்ம தேனக்கா தான் .

 பதிவுலகில் நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் நபர் இவர்.  (என்னுடைய துவக்க காலத்தில் எனக்கு தவறாமல் பின்னூட்டங்களை கொடுத்து இதுவரை எழுத தூண்டியவர் இவரே). இவருடைய கவிதை பலத்தால் அனைவரின் உள்ளங்களை கட்டிபோடும் சக்தி படைத்தவர். இவருடைய பதிவுகள் பெரும்பாலும் யூத்புல் விகடனில் பிரசுரமாக்கபட்டுள்ளது. "கம்பன் வீட்டு கட்டு தறியும் கவிபாடும்" இது பழமொழி "தேனக்கா வீட்டு தென்னையும் கவிதை பாடும்" இது புதுமொழி. இவருக்கு இந்த விருதை அளிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.





புலிகேசின்னு சொன்னது ஏதோ காமெடின்னு நெனச்சிராதீங்க(முதலில் நானும் அப்படிதான் நினைத்தேன்). இவருடைய பதிவுகள் சமுதாய விழிப்புணர்வு வாழ்ந்ததாக இருக்கும்.  இவர் டரியல் என்று ஒரு பதிவை போட்டு இளைய நல்ல பதிவர்களை அவருடைய வாசகர்களுக்கு தெரிவித்து நம்முடைய தளத்திற்கான லிங்க்கையும் கொடுப்பார்.(இவ்வளவு பெரிய மனது யாருக்கு வரும் ஹா ஹா). இவருக்கும் இங்கு இந்த விருதை அளிக்கிறேன். 




இவரும் எக்கச்சக்கமான சமையல் பதிவுகளை போட்டு தள்ளிக்கொண்டே இருக்கிறார். இவருடைய சமையல் குறிப்புகள் மிகவும் எளிமையாக இருக்கும். சும்மா வகை வகையாக அயிட்டங்களை அள்ளி விடுகின்றார். இவரும் விருதுகளை அள்ளி விடுகின்றார். இவருக்கு  இந்த விருதை இங்கே அளிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.    




இன்னாம்மா எழுதுர்ராருய்யா இந்த ஆளு. இவர் கடைக்கு  போற எல்லா ஆளுங்களுக்கும் பரோட்டா நிச்சயம். இவருக்கு வரும் பின்னூட்டங்கள் இன்னும் சூப்பர். அதற்க்கு இவர் கொடுக்கும் பதில் அதை விட சூப்பர். இந்த கடையில எல்லாமே சூப்பர் தானுங்க. இவ்வளவையும் பண்ணி விட்டு கடைசியில கேட்டா இவர் பதிவுலகின் குழந்தையாம். என்னே சிறு பிள்ளை தனமான பேச்சு இது. இவருக்கும் இந்த விருதை இங்கே அளிக்கிறேன்.




சமையலில் இவர்கள் ஒன்னும் சளைத்தவர்கள் இல்லை. இவர்களும் தையற்கலை, காமெடி, விழாக்கள் என்று பல தலைப்புகளில் பதிவை எழுதி தள்ளுகிறார். இவருக்கும் இந்த விருதை கொடுப்பதில் மிக்க மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.  




நன்றாக ஊர் சுற்றி திரியும் நபர் இவர். அவர் பார்த்த இடங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வார். ஒரு ஸ்பெஷல் மேட்டர் இருக்குப்பா நம்ம சூப்பர் சார் கூடவே போட்டோ பிடித்து வைத்திருக்கிறார். பெரிய ஆளுதான் இவரு. 
(நண்பர்களே இன்னும் நிறைய பேரை லிஸ்ட்டில் சேர்த்து இருக்கலாம் ஆனால் அதற்க்கு இந்த பதிவு போதாது என்பதே உண்மை. அனைவரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம்)  
டுடே லொள்ளு 
Photobucket
மச்சான் இவுங்க கிட்ட மாட்டுன அவ்வளவு தான் சீக்கிரம் ஓடிடு.

15 comments:

க.பாலாசி said...

விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடமிருந்து பகிரும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

ரொம்ப நன்றி என் அன்புத் தம்பி சசிகுமார்...மறக்க இயலாமல் செய்து விட்டீர்கள்....சை கொ ப .,திவ்யா ஹரி., அக்பர் மேனகா எல்லோரும் கொடுத்து இருக்கிறார்கள் அனைவருக்கும் மனம் நெகிழ்ந்த நன்றி

சைவகொத்துப்பரோட்டா said...

விருதை பகிர்ந்து கொண்ட
உங்களுக்கும், பெற்ற அனைவருக்கும் எனது
வாழ்த்துக்கள், நன்றி சசி.

மன்னார்குடி said...

வாழ்த்துக்கள்.

வேலன். said...

நன்றி சசிகுமார்..நேற்றுதான் ஜெய்லானி விருது கொடுத்தார். இன்று தாங்கள் கொடுத்துள்ளீர்கள்.விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்,வேலன்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

சற்று வித்தியாசமான முயற்சி மிகவும் அருமை . விருது பெற்ற அனைவருக்கும் , உங்களுக்கும் வாழ்த்துக்கள் !

V.Radhakrishnan said...

விருது பெற்றவர்களுக்கும், தங்களுக்கும் வாழ்த்துகள்.

karthik said...

எனது வாழ்த்துகளும் அனைவருக்கும்

Mrs.Menagasathia said...

தங்களுக்கும்,விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!! எனக்கும் கொடுத்ததில் மகிழ்ச்சி+நன்றி சசி!!

Uma said...

congratulations to all the award recipients :)

கவியின் கவிகள் said...

விருது வழங்கியவரும் விருது பெற்றவரும் வாழ்க பல்லாண்டு.விருது என்பது அவரவர் செய்யும் பணிக்கான அங்கீகாரம் மட்டுமல்லாது அவருடைய பணி தொடர வழங்கும் ஊக்க மாத்திரையும் ஆகும்.

பா.வேல்முருகன் said...

விருது பெற்ற அனைவரும் விருதுக்கு மிக மிக தகுதியானவர்கள்தான். அவர்கள் இந்த விருது மட்டுமின்றி எழுத்துலகில் இன்னும் பலப்பல விருதுகள் பெற மனதார வாழ்த்துகிறேன்.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

தேனக்கா வீட்டு தென்னை மரமும் கவி பாடும் என்ற வரிகளை நல்ல இருக்குன்னு எல்லொரும் சொன்னாங்க சசி நன்றீ

அஹமது இர்ஷாத் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

S Maharajan said...

விருது கொடுத்து என்னை பெருமைபடுத்திய நண்பருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்

Post a Comment

Text Widget

Text Widget