இணையத்தில் நாம் உலாவும் போதோ அல்லது ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ நம் கணினியில் நமக்கு தெரியாமால் பல தேவையற்ற பைகள் சேர்ந்து விடுகிறது. இந்த பைல்களால் தான் நம் கணினியில் தினம் தினம் புது பிரச்சினை உருவாகி நம் கணினியும் மெதுவாக இயங்குகிறது. இந்த தேவையற்ற பைல்களை தேடி அழிக்க இணையத்தில் பல மென்பொருட்கள் இலவசமாக கிடைத்தாலும் நம்மில் பெரும்பாலவனர்களின் விருப்பம் Ccleaner தான்.முன்பு நாம் Ccleaner v2.35 உபயோகித்து வந்தோம். இதிலேயே மாற்றங்கள் செய்து Ccleaner v2.36 என்ற புதிய பதிப்பை 27Sep அன்று வெளியிட்டு உள்ளார்கள்.
மென்பொருளின் பயன்கள்
- 500 மில்லியனுக்கும் மேற்ப்பட்டவர்கள் உபயோகிக்கும் மென்பொருள்.
- சிறிய அளவுள்ள மென்பொருள் (3.3mb)
- இது ஒரு இலவச மென்பொருள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.
- இதை தரவிறக்க நீங்கள் அந்த தளத்தில் உறுப்பினர் ஆக வேண்டியதில்லை.
- இதை Install செய்வதற்கும் அதிக இடம் தேவையில்லை.
- சுலபமாக கையாளலாம்.
- இதிலேயே Registry சுத்தம் செய்யும் வசதியும் உள்ளது.
- சரியாக நமக்கு தேவையில்லாத பைல்களை தேடி அழிக்கும்.
- அதிவேகமாக இயங்க கூடியது. அதிகபட்சம் 2 நிமிடத்திற்குள் நம் கணினியை சுத்தம் செய்து விடலாம்.
- தரவிறக்கம் செய்தவுடன் உங்களுக்கு வந்த .exe பைலை இன்ஸ்டால் செய்யுங்கள்.
- இன்ஸ்டால் செய்து முடித்ததும் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும்.
- இப்பொழுது உங்கள் கணினியில் உள்ள நீக்க வேண்டிய பைல்கள் அனைத்தும் உங்களுக்கு scan ஆகி வரும்.
- இப்பொழுது நீங்கள் அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து தேவையில்லாத பைல்களும் அழிந்து விடும்.
- உங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணினி சுத்தம் செய்ய பட்டு விட்டது.
- இதே முறையில் நீங்கள் உங்கள் Registry சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
டுடே லொள்ளு


7 comments:
ஒரு சின்ன சந்தேகம். latest version ஐ download செய்யும் போது, ஏற்கனவே இருக்கும் version ஐ நீக்க வேண்டுமா.
Thank you.
Thanks sasi, today's lollu sweet.
நன்றி நண்பரே!
thanks sasi anna
நன்றி சசி தம்பி
அய்யா இந்த தளம் நல்லகீதுப்ப மெய்யலுமே எனக்கு தெரியாத மெட்டர்கள இங்கே வந்து கத்துகீனே தேங்ஸ்ப்பா
Post a Comment