இணையத்தில் கூகுள் என்பது இன்றியமையான ஒன்றாக உள்ளது. கூகுள் பல வசதிகளை தான் வாசகர்களுக்கு வழங்குகிறது. அந்த வசதிகளில் தவிர்க்க முடியாத வசதி கூகுள் தேடியந்திரம்(Search Engine). கூகுளில் தேடியந்திரங்கள் வாசகர்களுக்கு தேடுவதை துல்லியமாக தருவதில் கூகுளிற்கு நிகர் யாரும் இல்லை. அவ்வளவு பெருமை மிக்க தேடியந்திரத்தில் நமக்கு தேவையான PDF பைல்கள் மட்டும் வேண்டுமென்றால் சரியாக வருவதில்லை.PDF பைல்கள் மட்டுமின்றி PDF என்ற வார்த்தைகள் உபயோக படுத்த பட்டிருக்கும் சிறந்த தளங்கள் நமக்கு வருகின்றது. ஆகையால் நாம் PDF பைல்களை தேடி கண்டு பிடிப்பது கடினமான காரியமாக உள்ளது. ஆகவே நாம் தேடுதலில் எப்படி PDF பைல்கள் மட்டும் கொண்டு வருவது என்று பார்ப்போம்.
- நீங்கள் முதலில் கூகுள் தளத்திருக்கு செல்லுங்கள்.
- நீங்கள் தேடுவதற்கு பொருத்தமான வார்த்தையை கொடுத்து அதற்கு அருகே Filetype:pdf என்று கொடுக்கவும்.
- பின்பு search பட்டனை அழுத்தவும்.
- இப்பொழுது உங்களின் தேடலின் முடிவுகள் அனைத்தும் pdf பைல்களாகவே வந்திருக்கும்.
- இதை உறுதி படுத்தும் வண்ணம் அனைத்து முடிவுகளுக்கு முன்னும் [PDF] என்று
- உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும்.
அவ்வளவு தான் நீங்கள் விரும்பிய பிடிஎப் பைலை நீங்கள் தேடி பெறலாம்.
டுடே லொள்ளு
ரகசியத்தை யார்கிட்டயும் சொல்லிடாதே ரகசியாமா வச்சிக்கோ
7 comments:
nice sasi!!
மிக மிக தேவையான தகவல்..இதே போல் மற்ற பைல் வகைகளையும் தேடலாமா??
நல்ல தகவல் நண்பரே ...
மிகவும் உபயோகமான தகவல் மிக்க நன்றி...
Thanks Sasi.
நல்ல தகவல்.. நன்றி சசி..
GOOD POST SUPER
Post a Comment