
இதை நாம் உருவாக்குவதால் ஒரே நேரத்தில் அனைவருக்கும் மெயிலை அனுப்பலாம் அதுவும் மிகவும் சுலபமாக. ஒவ்வொரு மெயிலாக சேர்க்க வேண்டியதில்லை. பண்டிகை அல்லது விழாக்காலங்களில் வாழ்த்து செய்தியை அனுப்புவதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
- இதற்க்கு உங்கள் ஜிமெயில் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
- பின்பு Contacts என்ற பட்டனை அழுத்தவும்.
- அடுத்து கீழே உள்ள NEW GROUP என்ற பட்டனை அழுத்தவும்.
- உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் குரூப்பின் பெயரை கொடுத்து கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தவும்.
- உங்கள் குருப் உருவாகிவிட்டது. இப்பொழுது அதில் எப்படி நமக்கு நண்பர்களின் மெயில் ஐடிகளை சேர்ப்பது என்று பார்ப்போம்.
- அதே பக்கத்தில் Most Contected, Other Contacts என்று இரு பிருவுகள் இருக்கும். அதில் நீங்கள் எது வேண்டுமோ அதி கிளிக் செய்யுங்கள்.
- உங்களின் நண்பர்கள் மெயில் ஐடிகள் வரும் அதில் உங்களுக்கு தேவையான நண்பர்களுக்கு நேராக உள்ள கட்டத்தில் டிக் குறியிட்டு தேர்வு செய்து கொள்ளவும்.
- படத்தில் உள்ளவாறு Groups கிளிக் செய்து கொள்ளவும்.
- உங்களுக்கு ஒரு பட்டியல் உண்டாகும். அதில் உங்களுடைய குரூப் தேர்வு செய்து கொள்ளவும்.
- அவ்வளவு தான் நீங்கள் தேர்வு செய்த அனைத்து மெயில் முகவரிகளும் அந்த நீங்கள் உருவாக்கிய குரூப்பில் சென்று விடும்.
- இப்பொழுது நீங்கள் எப்பவும் போல மெயில் அனுப்ப COMPOSE கிளிக் செய்யுங்கள்.
- நீங்கள் அனுப்ப வேண்டிய மெயிலை உருவாக்கி கொண்டு TO என்ற இடத்தில் மெயில் முகவரியை கொடுப்பதற்கு பதில் அந்த GROUP NAME கொடுக்கவும்.
- அவ்வளவு தான் ஒரே நேரத்தில் அந்த குரூப்பில் நீங்கள் தேர்வு செய்த அனைவருக்கும் சென்று விடும்.
டுடே லொள்ளு
வாம்மா சீக்கிரம் எவ்வளவு நேரம் காத்து கிடக்கிறது ஒரே பசியா இருக்கு.
10 comments:
நல்ல தகவல் ..
நல்ல தகவல்....சசி அண்ணா
அருமையான விளக்கத்துடன் அவசியமான வளிகாட்டல் நண்பா மிக்க நன்றி
அருமை சசி, இன்னைக்கி லொள்ளு :))
நல்ல தகவல் நண்பா மிக்க நன்றி.
எனக்கு இது புதிய தகவல் சசி! நன்றி! சரி நம்முடைய Followers-களுக்கு ஒரே நேரத்தில் மெயில் அனுப்புவதற்கான வசதி இருக்கிறதா? அதேப் போல Follower-ஆகி விட்டு எந்த ஒரு கமண்ட்டும் இடாமல் செல்வோரின் ப்ளாகை பார்க்கவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் சசி?
முடிந்தால் வருகின்ற பதிவில் சொல்லுங்கள் சசி!
thxs a lot sasi!! useful post...
Thanks for the useful information. While sending to the group, the email ids of other recipients are also shown in the composer box. If you send through BCC, there is a danger of getting filtered. Is there any method by which we can use google as mass mailer. Only the recipient mail id should be shown, not all.
thanks
Hai Sasi,how can i downlad a youtube videos in my mobile there is any software i am using NokiaE51
Post a Comment