அனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள்
கணினி உபயோகிக்கும் பெரும்பாலானவர்களில் நம் கணினியை சுத்தம் செய்ய Ccleaner உபயோகித்து கொண்டிருக்கும். இது நம் கம்புட்டரில் உள்ள தேவையற்ற பைல்களையும் குப்பை தொட்டியில் உள்ள பைல்களையும் நீக்க பயன்படுகிறது. இணையத்தில் எவ்வளவோ மென்பொருட்கள் இருந்தாலும் நாம் ஏன் இந்த Ccleaner பயன் படுத்துகிறோம். அதற்காக நாம் அனைவரும் உபயோகிக்க விண்டும் என்று கீழே பார்ப்போம்.
மென்பொருளின் பயன்கள் - 500 மில்லியனுக்கும் மேற்ப்பட்டவர்கள் உபயோகிக்கும் மென்பொருள்.
- சிறிய அளவுள்ள மென்பொருள் (3.3mb)
- இது ஒரு இலவச மென்பொருள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.
- இதை தரவிறக்க நீங்கள் அந்த தளத்தில் உறுப்பினர் ஆக வேண்டியதில்லை.
- இதை Install செய்வதற்கும் அதிக இடம் தேவையில்லை.
- சுலபமாக கையாளலாம்.
- இதிலேயே Registry சுத்தம் செய்யும் வசதியும் உள்ளது.
- சரியாக நமக்கு தேவையில்லாத பைல்களை தேடி அழிக்கும்.
- அதிவேகமாக இயங்க கூடியது. அதிகபட்சம் 2 நிமிடத்திற்குள் நம் கணினியை சுத்தம் செய்து விடலாம்.
- தரவிறக்கம் செய்தவுடன் உங்களுக்கு வந்த .exe பைலை இன்ஸ்டால் செய்யுங்கள்.
- இன்ஸ்டால் செய்து முடித்ததும் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும்.
- இப்பொழுது உங்கள் கணினியில் உள்ள நீக்க வேண்டிய பைல்கள் அனைத்தும் உங்களுக்கு scan ஆகி வரும்.
- இப்பொழுது நீங்கள் அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து தேவையில்லாத பைல்களும் அழிந்து விடும்.
- உங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணினி சுத்தம் செய்ய பட்டு விட்டது.
- இதே முறையில் நீங்கள் உங்கள் Registry சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
தமிழ் மணம் பதிவு பட்டையில் பிரச்சினையா

என்ன தல நானும் காலைல இருந்து பாக்குறேன் ஒரே ஸ்டெப் போட்டு கிட்டு இருக்கீங்க யார் குறு நம்ம கேப்டனா.
![]()
தமிழ் திரட்டிகளுள் இன்ட்லிக்கு அடுத்தபடியாக உள்ள திரட்டி இந்த தமிழ்மணம். இந்த தளத்தில் இப்பொழுது மேம்படுத்தப்பட்ட பதிவு பட்டையை வெளியிட்டு உள்ளார்கள். இந்த மேம்படுத்த பட்ட பட்டை சிலவேளைகளில் சரியாக இயங்கவில்லை. நமக்கு ஓட்டு போடவேண்டும் என்று நினைத்தாலும் வாசகர்கள் நமக்கு ஓட்டு போடமுடியாமல் போகிறது. ஆகையால் இந்த பதிவு பட்டையை நம்முடைய பதிவிற்கு கீழே பொருத்தினால் இது நன்றாக வேலை செய்கிறது எந்த பிரச்சினையும் இல்லை. பதிவு பட்டையை எப்படி கீழே கொண்டுவருவது என்று பார்ப்போம்.
உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து
- Design- Edit Html - Expand Widget Template- சென்று இந்த வரியை கண்டு பிடிக்கவும்.
- <data:post.body/> இந்த வரியை கண்டுபிடித்தவுடன் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த கோடிற்கு கீழே/பின்னே பேஸ்ட் செய்யவும்.
<script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'></script><b:if cond='data:blog.pageType == "item"'><script expr:src=' "http://services.thamizmanam.com/toolbar.php?date=" + data:post.timestamp + "&posturl=" + data:post.url + "&cmt=" + data:post.numComments + "&blogurl=" + data:blog.homepageUrl + "&photo=" + data:photo.url' language='javascript' type='text/javascript'></script></b:if>
பேஸ்ட் செய்ததும் கீழே உள்ள Save Template என்ற பட்டனை அழுத்தி உங்கள் தமிழ்மண பதிவு பட்டையை சேமித்து கொள்ளுங்கள்.
நீங்கள் மேலே உள்ள பட்டையை நீக்க வேண்டும் என்று நினைத்தால்.உங்கள் பிளாக்கில் மேற் கூறிய அதே இடத்தில் சென்று கீழே உள்ள கோடிங்கை கண்டுபித்து
<b:if cond='data:post.dateHeader'>
</b:if>
அதற்கு கீழே உள்ள தமிழ்மண கோடிங்கை நீக்கி விடவும்.
டுடே லொள்ளு
என்ன தல நானும் காலைல இருந்து பாக்குறேன் ஒரே ஸ்டெப் போட்டு கிட்டு இருக்கீங்க யார் குறு நம்ம கேப்டனா.
7 comments:
Dear sir. it's a useful article but i couldn't download it.they asked to pay
Thank you.
நன்றி சசி.
தேவையான மென்பொருள்.. பகிர்வுக்கு நன்றி சசிகுமார் -
தகவலுக்கு மிக்க நன்றி சகோதரா...
useful article..
பயனுள்ள தகவல்....வாழ்த்துகள் சசி
Post a Comment