Thursday, September 30, 2010

ஒரே நேரத்தில் உங்கள் பைலை 15+ ஆன்டிவைரஸில் ஸ்கேன் செய்ய

கணினி இல்லாமல் எதுவும் இல்லை என்று உள்ள இந்த காலக்கட்டத்தில் தினம் தினம் புது புது வைரஸ்கள் உருவாகி நம் கணினியில் பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றன. இந்த வைரஸ்களை தடுக்க எவ்வளவு ஆன்டிவைரஸ்கள் உள்ளன. இதில் என்ன பிரச்சினை என்றால் ஒவ்வொரு ஆன்ட்டிவைரசும் ஒவ்வொரு விஷயத்தில் சிறந்ததாக உள்ளது. ஆகையால் நம் பைலை எப்படி ஒரே நேரத்தில் 15+ ஆன்ட்டிவைரசில் ஸ்கேன் செய்வது என்று காணலாம்.
ஆனால் நம் கணினியில் ஒன்றிற்கும் மேற்பட்ட  ஆன்டிவைரஸ் நிறுவ சில நிறுவனங்கள் ஒத்துழைப்பதில்லை. ஆகையால் நாம் ஒரே ஒரு ஆன்டிவைரஸ் மட்டுமே நம் கணினியில் நிறுவ முடிகிறது. ஆகையால் ஒரு ஆன்டிவைரசில் மட்டுமே நம் பைல்களை ஸ்கேன் செய்து வந்தோம்.

  • குறிப்பாக நமக்கு இமெயில் வரும் பைல்கள் நம்பக தன்மை வாய்ந்ததா என்று இந்த முறையில் அறிந்து கொள்ளலாம்.

  • இந்த குறையை போக்க நமக்கு இந்த தளம் உதவுகிறது. இந்த தளம் சென்றவுடன் உங்களக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  • மேலே படத்தில் காட்டியுள்ள இடத்தில் உள்ள Choose file என்பதை க்ளிக் செய்யுங்கள்.

  • உங்களுக்கு வரும் விண்டோவில் நீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்ய விரும்பும் பைலை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

  • அடுத்து அதற்கு கீழே உள்ள Submit file என்பதை கிளிக் செய்யுங்கள்.உதவிக்கு கீழே உள்ள பதத்தை பார்த்து கொள்ளவும்.

  • அவ்வளவு தான் நீங்கள் தேர்வு செய்த பைல் வைரஸ் ஸ்கேன் ஆகி ஒவ்வொரு ஆன்டி வைரசிற்கு நேராக அதான் முடிவுகள் வரும்.



மேலே படத்தில் உள்ளதை போல அனைத்து ஆன்டிவைரசிலும் Found nothing என்று முடிவு வந்தால் உங்கள் பைல் 100% பாதுகாப்பாக உள்ளது. நீங்கள் இந்த பைலை தைரியமாக உபயோக படுத்தி கொள்ளலாம்.
இந்த தளம் செல்ல இந்த லிங்கில் கிளிக் http://virusscan.jotti.org/enசெய்யவும்
டுடே லொள்ளு 
Photobucket
ச்சே ஒரு நிமிஷத்துக்கு ஒரு முறை இந்த எந்திரன்  ட்ரெயிலர போட்டு இம்ச படுத்துராம்பா 

ஜிமெயிலில் குரூப் உருவாக்கி ஒரே நேரத்தில் அனைவருக்கும் மெயில் அனுப்ப

கூகுள் தரும் சேவைகளில் தவிர்க்க முடியாத ஒன்று ஜிமெயில் ஆகும். நாம் அனைவரும் ஜிமெயில் உபயோகிக்கிறோம். இந்த ஜிமெயிலில் பல சேவைகள் உள்ளது. அதில் ஒன்று தான் இந்த Groups. அதாவது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மெயில் அனுப்புவது. இந்த வசதியை நிறைய பேர் உபயோக படுத்தி கொண்டு இருக்கலாம். நண்பர் ஒருவர் மெயிலில் தொடர்பு கொண்டு கேட்டதனால் அவருக்கு மட்டுமின்றி தெரியாதவர்களுக்கு உபயோக படும் என்று இப்பதிவு.

இதை நாம் உருவாக்குவதால் ஒரே நேரத்தில் அனைவருக்கும் மெயிலை அனுப்பலாம் அதுவும் மிகவும் சுலபமாக. ஒவ்வொரு மெயிலாக சேர்க்க வேண்டியதில்லை. பண்டிகை அல்லது விழாக்காலங்களில் வாழ்த்து செய்தியை அனுப்புவதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

  • இதற்க்கு உங்கள் ஜிமெயில் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.

  • பின்பு Contacts என்ற பட்டனை அழுத்தவும்.

  • அடுத்து கீழே உள்ள NEW GROUP என்ற பட்டனை அழுத்தவும்.

  • உங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் குரூப்பின் பெயரை கொடுத்து கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தவும்.

  • உங்கள் குருப் உருவாகிவிட்டது. இப்பொழுது அதில் எப்படி நமக்கு நண்பர்களின் மெயில் ஐடிகளை சேர்ப்பது என்று பார்ப்போம்.

  • அதே பக்கத்தில் Most Contected, Other Contacts என்று இரு பிருவுகள் இருக்கும். அதில் நீங்கள் எது வேண்டுமோ அதி கிளிக் செய்யுங்கள்.

  • உங்களின் நண்பர்கள் மெயில் ஐடிகள் வரும் அதில் உங்களுக்கு தேவையான நண்பர்களுக்கு நேராக உள்ள கட்டத்தில் டிக் குறியிட்டு தேர்வு செய்து கொள்ளவும்.

  • படத்தில் உள்ளவாறு Groups கிளிக் செய்து கொள்ளவும்.

  • உங்களுக்கு ஒரு பட்டியல் உண்டாகும். அதில் உங்களுடைய குரூப் தேர்வு செய்து கொள்ளவும். 

  • அவ்வளவு தான் நீங்கள் தேர்வு செய்த அனைத்து மெயில் முகவரிகளும் அந்த நீங்கள் உருவாக்கிய குரூப்பில் சென்று விடும்.

  • இப்பொழுது நீங்கள் எப்பவும் போல மெயில் அனுப்ப COMPOSE கிளிக் செய்யுங்கள்.

  • நீங்கள் அனுப்ப வேண்டிய மெயிலை உருவாக்கி கொண்டு TO என்ற இடத்தில் மெயில் முகவரியை கொடுப்பதற்கு பதில் அந்த GROUP NAME கொடுக்கவும்.

  • அவ்வளவு தான் ஒரே நேரத்தில் அந்த குரூப்பில் நீங்கள் தேர்வு செய்த அனைவருக்கும் சென்று விடும்.

டுடே லொள்ளு 
Photobucket


வாம்மா சீக்கிரம் எவ்வளவு நேரம் காத்து கிடக்கிறது ஒரே பசியா இருக்கு.

Wednesday, September 29, 2010

கூகுளில் PDF பைல்களை மட்டும் தனியாக தேட

இணையத்தில் கூகுள் என்பது இன்றியமையான ஒன்றாக உள்ளது. கூகுள் பல வசதிகளை தான் வாசகர்களுக்கு வழங்குகிறது. அந்த வசதிகளில் தவிர்க்க முடியாத வசதி கூகுள் தேடியந்திரம்(Search Engine). கூகுளில் தேடியந்திரங்கள் வாசகர்களுக்கு தேடுவதை துல்லியமாக தருவதில் கூகுளிற்கு நிகர் யாரும் இல்லை.  அவ்வளவு பெருமை மிக்க தேடியந்திரத்தில் நமக்கு தேவையான PDF பைல்கள் மட்டும் வேண்டுமென்றால் சரியாக வருவதில்லை.
PDF பைல்கள் மட்டுமின்றி PDF என்ற வார்த்தைகள் உபயோக படுத்த பட்டிருக்கும் சிறந்த தளங்கள் நமக்கு வருகின்றது. ஆகையால் நாம் PDF பைல்களை தேடி கண்டு பிடிப்பது கடினமான காரியமாக உள்ளது. ஆகவே நாம் தேடுதலில் எப்படி PDF பைல்கள் மட்டும் கொண்டு வருவது என்று பார்ப்போம்.

  • நீங்கள் முதலில் கூகுள் தளத்திருக்கு செல்லுங்கள்.

  • நீங்கள் தேடுவதற்கு பொருத்தமான வார்த்தையை கொடுத்து அதற்கு அருகே Filetype:pdf என்று கொடுக்கவும். 

  • பின்பு search பட்டனை அழுத்தவும். 

  • இப்பொழுது  உங்களின் தேடலின் முடிவுகள் அனைத்தும் pdf பைல்களாகவே வந்திருக்கும். 

  • இதை உறுதி படுத்தும் வண்ணம் அனைத்து முடிவுகளுக்கு முன்னும் [PDF] என்று 

  • உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும். 

அவ்வளவு தான் நீங்கள் விரும்பிய பிடிஎப் பைலை நீங்கள் தேடி பெறலாம்.


டுடே லொள்ளு 
View Photos Photo Sharing Funny Pics
ரகசியத்தை யார்கிட்டயும் சொல்லிடாதே ரகசியாமா வச்சிக்கோ 

Tuesday, September 28, 2010

கணினியை அதிவேகமாக சுத்தமாக்க Ccleaner Latest version V2.36

இணையத்தில் நாம் உலாவும் போதோ அல்லது ஏதேனும் டவுன்லோட் செய்யும் போதோ நம் கணினியில் நமக்கு தெரியாமால் பல தேவையற்ற பைகள் சேர்ந்து விடுகிறது. இந்த பைல்களால் தான் நம் கணினியில் தினம் தினம் புது பிரச்சினை உருவாகி நம் கணினியும் மெதுவாக இயங்குகிறது. இந்த தேவையற்ற பைல்களை தேடி அழிக்க இணையத்தில் பல மென்பொருட்கள் இலவசமாக கிடைத்தாலும் நம்மில் பெரும்பாலவனர்களின் விருப்பம் Ccleaner தான்.

முன்பு நாம் Ccleaner v2.35 உபயோகித்து வந்தோம். இதிலேயே மாற்றங்கள் செய்து   Ccleaner v2.36 என்ற புதிய பதிப்பை 27Sep அன்று வெளியிட்டு உள்ளார்கள்.

மென்பொருளின் பயன்கள் 

  • 500 மில்லியனுக்கும் மேற்ப்பட்டவர்கள் உபயோகிக்கும் மென்பொருள்.

  • சிறிய அளவுள்ள மென்பொருள் (3.3mb)

  • இது ஒரு இலவச மென்பொருள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.

  • இதை தரவிறக்க நீங்கள் அந்த தளத்தில் உறுப்பினர் ஆக வேண்டியதில்லை.

  • இதை Install செய்வதற்கும் அதிக இடம் தேவையில்லை.

  • சுலபமாக கையாளலாம்.

  • இதிலேயே Registry சுத்தம் செய்யும் வசதியும் உள்ளது.

  • சரியாக நமக்கு தேவையில்லாத பைல்களை தேடி அழிக்கும்.

  • அதிவேகமாக இயங்க கூடியது. அதிகபட்சம் 2 நிமிடத்திற்குள் நம் கணினியை சுத்தம் செய்து விடலாம். 

கீழே உள்ள Download லிங்கை  அழுத்தி மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.



  • தரவிறக்கம் செய்தவுடன் உங்களுக்கு வந்த .exe பைலை இன்ஸ்டால் செய்யுங்கள். 

  • இன்ஸ்டால் செய்து முடித்ததும் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் அதில் உள்ள Analyze என்ற பட்டனை அழுத்தவும்.

  • இப்பொழுது உங்கள் கணினியில் உள்ள நீக்க வேண்டிய பைல்கள் அனைத்தும் உங்களுக்கு scan ஆகி வரும். 

  • இப்பொழுது நீங்கள் அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து தேவையில்லாத பைல்களும் அழிந்து விடும். 

  • உங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணினி சுத்தம் செய்ய பட்டு விட்டது.

  • இதே முறையில் நீங்கள் உங்கள் Registry சுத்தம் செய்து கொள்ளுங்கள். 

டுடே லொள்ளு 
Photobucket
அந்தபக்கம் போங்க சார் இங்க என்ன சார் வேடிக்கை 

பிளாக்கில் பதிவின் தலைப்பை நடுவில்(Center) கொண்டு வர

 நம்முடைய பிளாக்கில் நாம் தினம் பதிவு எழுதி வெளியிடுகிறோம். அப்படி வெளியிடும் போது நம் பிளாக்கில் நம் பதிவின் தலைப்பு இடது பக்கத்தில் இருந்தே ஆரம்பிக்கும். சிறிய தலைப்புகளாக இருந்தால் பாதியிலேயே பார்ப்பதற்கு அழகற்று காணப்படும். ஆனால் நம் பிளாக்கின் தலைப்பை நடுவில் கொண்டு வந்தால் நம் பதிவின் தலைப்பு அழகாக இருக்கும். அதை எப்படி நம்முடைய பிளாக்கில் கொண்டு வருவது என இங்கு பார்க்க போகிறோம்.

  • முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். 

  • Design - Edit Html - என்ற பகுதிக்கு செல்லுங்கள்.

  • சென்று .post h3 {  என்ற வரியை கண்டு பிடிக்கவும் (இந்த கோடிங் உங்கள் தளத்தில் சற்று மாறியிருக்க வாய்ப்புள்ளது) . 

  • Ctrl+f உபயோகித்தால் சுலபமாக கண்டு பிடிக்கலாம். உங்கள் கோடிங் கீழே இருப்பதை போல இருக்கும்.

.post h3 {

margin:.25em 0 0;

padding:0 0 4px;

font-size:140%;

font-weight:normal;

line-height:1.4em;

color:$titlecolor;

}
இந்த கோடிங்கில் நீங்கள் text-align:center; இந்த ஒரே ஒரு வரியை மட்டும் சேர்த்தால் போதும்.

.post h3 {

text-align:center;

margin:.25em 0 0;

padding:0 0 4px;

font-size:140%;

font-weight:normal;

line-height:1.4em;

color:$titlecolor;

}
மேலே காட்டியுள்ள இடத்தில் சரியாக text-align:center; ஒருவரியை மட்டும் சேர்த்து விட்டு கீழே உள்ள PREVIEW பட்டனை அழுத்தி நீங்கள் சேர்த்த கோடிங் வேலை செய்கிறதா என்று கண்டறிந்து பின் SAVE TMEPLATE என்ற பட்டனை அழுத்தி விடவும்.





 இப்பொழுது உங்களின் பதிவின் தலைப்புகள் நடுவில் வந்து விடும்.உங்கள் பழைய பதிவுகளின் தலைப்புகளும் தானாகவே மாறிவிடும். அதற்காக edit செய்ய வேண்டியதில்லை.

டுடே லொள்ளு 
free myspace graphics :: myspace images :: myspace pictures free myspace layouts


மவனே யார்க்கிட்ட 

Monday, September 27, 2010

உங்கள் பிளாக்கில் வைரஸ் உள்ளதா என கண்டறிய

இந்த வைரஸ் மனிதனை தான் ஒரு ஆட்டு ஆட்டுதுன்னு பார்த்தால் கணினியை கூட விட்டு வைக்க மாட்டேங்குது. இன்னும் ஒரு படி மேல் சென்று வலைத்தளங்களை கூட விட்டு வைப்பதில்லை. பெரிய வலைத்தளங்கள் கூட இந்த பிரச்சினையால பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நம் தளத்தை நாம் பாதுகாப்பாக வைத்து கொள்ள நம் பிளாக்கில் வைரஸ் உள்ளதா என பரிசோதிக்கலாம் வாருங்கள்.

இந்த சேவையை நமக்கு ஒரு தளம் வழங்குகிறது. இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.



  • அதில் நீங்கள் SUBMIT URL என்ற பட்டனை அழுத்தி உங்களுக்கு வரும் கட்டத்தில் நீங்கள் உங்களுடைய பிளாக்கின் URL கொடுக்கவும்.  

  • பிறகு அதற்க்கு அருகே உள்ள SUBMIT URL என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் பிளாக் ஸ்கேன் ஆகும்.உங்களுக்கு கீழே இருப்பதை போல முடிவு வரும்.

  • நான் வட்டமிட்டுள்ள இடத்தில் உங்கள் தளத்தின் முடிவு வந்திருக்கும். 

  • ஒரே நேரத்தில் ஏழு இயங்கு தளங்களில் உங்கள் பிளாக் பரிசோதிக்கப்படும். 

  • இந்த ஏழு தளங்களில் Clean site என்று வந்தால் உங்கள் பிளாக் எந்த வைரசினாலும் பாதிக்க படவில்லை பாதுகாப்பாக உள்ளது. 

  • உங்கள் தளத்தில் ஏதேனும் வைரஸ் இருந்தால் அந்த பட்டியலில் காண்பிக்கப் பட்டுவிடும்.

  • இதே போல் வாரம் ஒருமுறை உங்கள் பிளாக்கை பரிசோதித்து பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.

  • இந்த தளம் செல்ல இந்த லிங்கில் http://www.virustotal.com/ செல்லுங்கள்

டுடே லொள்ளு 
free myspace graphics :: myspace images :: myspace pictures free myspace layouts


சனியனே நீ வந்ததால் தானே என் தூக்கமெல்லாம் கெட்டு போச்சு.

Sunday, September 26, 2010

பேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலில் உங்களை நீக்கியவரின் விவரங்கள் அறிய

இந்த கணினி உலகில் பேஸ்புக் என்பது ஒரு அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. நம்மில் 90% மேல் பேஸ்புக் உபயோகிக்கிறார்கள். நம் மெயிலுக்கு பேஸ்புக்கில் இருந்து ஒரு மெயில் வரும் இத்தனை நண்பர்கள் உங்களை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர் என்று வரும் ஆனால் யார் யார் நம்மை நண்பர்கள் லிஸ்டில் இருந்து நீக்கி உள்ளனர் என்பதை கண்டறியும் வசதி பேஸ்புக்கில் இல்லை. மற்றும் நாம் நண்பர்கள் கோரிக்கை அனுப்பி இன்னும் எத்தனை கோரிக்கைகள் ஏற்க்கபடாமல் உள்ளது என்றும் எப்படி கண்டறிவது என்று கீழே பார்ப்போம்.

  • இந்த வசதியை பெற நீகள் இந்த லிங்கில் http://www.unfriendfinder.fr சென்று அங்கு உள்ள Download என்ற பட்டனை அழுத்தி ஸ்கிரிப்ட் பைலை டௌன்லோட் செய்து கொள்ளுங்கள். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளுங்கள்.

  • இந்த ஸ்கிரிப்ட் பைலை டௌன்லோட் செய்தவுடன் உங்கள் பிரௌசரில் தானகவே இணைந்து கொள்ளும். 

  • இந்த ஸ்கிரிப்ட் பைல் Google Chrome/ Opera / Mozillaa / Safari ஆகிய இயங்கு தளங்களில் இயங்குகிறது. 

  • நீங்கள் Mozilla firefox உபயோகித்து கொண்டிருந்தால் இந்த ஸ்கிரிப்ட் பைலை நிறுவ நீங்க உங்கள் பிரவுசரில் Greese Monkey Add On நிறுவியிருக்க வேண்டும்.  

  • இந்த ஸ்கிரிப்ட் பைலை நிறுவியவுடன் உங்கள் பேஸ்புக் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.

  • உங்களுக்கு புதியதாக ஒரு வசதி Unfriends  என்ற லிங்க் இருக்கும். 

  • இதில் கடந்த ஒரு வாரத்தில் உங்களை பட்டியலில் இருந்து நீக்கியவரின் விவரங்கள் தெரியும். 

  • இதில் உள்ள இன்னுமொரு வசதி ஏற்க்கபடாத கோரிக்கைகள். 

  • நாம் அனுப்பிய நட்பு கோரிக்கைகளை ஏற்காமல் இருப்பவர்களின் விவரங்களையும் இதில் பார்த்து கொள்ளலாம். 

  • இதில் நாம் அனுப்பிய நட்பு கோரிக்கைகளை நாமே அகற்றி விடலாம்.

டுடே லொள்ளு 
free myspace graphics :: myspace images :: myspace pictures free myspace layouts


இதுல எத்தனை பேர் இருக்காங்கன்னு முடிஞ்சா கண்டு பிடிச்சு சொல்லுங்க பார்ப்போம் 

Friday, September 24, 2010

உங்கள் பிளாக்கின் பதிவுகளை அப்படியே புத்தகமாக உருவாக்க

 நாம் எழுதும் ஏதாவது ஒரு பதிவு ஏதோ பத்திரிகையிலோ அல்லது புத்தகத்திலோ வந்தால் எவ்வளவு சந்தோசப்படுவோம். நம்முடையை அனைத்து பதிவுகளையும் அப்படியே ஒன்றாக புத்தகமாக வெளியிட்டால் கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவே இல்லை. நம் பதிவுகள் அனைத்தையும் எப்படி நாம் புத்தகமாக உருவாக்குவது என்றே இங்கு காணபோகிறோம்.

இதற்க்கு முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.பின்பு Dassboard- Settings - Site feed - Full- Save Settings -என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.



இந்த சேவையை நமக்கு ஒரு வலைத்தளம் செய்கிறது. இந்த தளத்தில் நம் புத்தகத்தை உருவாக்கும் வரை இலவசமே. ஆனால் அதை டவுன் லோட் செய்ய வேண்டுமென்றால் அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்தால் தான் டவுன்லோட் செய்ய முடியும். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் க்ளிக் BLOG2PRINT செய்யவும்.



இந்த தளம் சென்ற உடன் உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும் இதில் உங்களுடைய பிளாக்கின் முகவரியை கொடுத்து Print My Blog என்ற அருகில் இருக்கும் பட்டனை அழுத்தினால் உங்களுடைய பிளாக் ஸ்கேன் ஆகி கீழே இருப்பதை போல விண்டோ இருக்கும்.
  • Include Posts: இந்த இடத்தில் உங்களுக்கு எத்தனை பதிவுகள் புத்தகமாகக வேண்டுமோ அதனை செலக்ட் செய்து கொள்ளவவும். (ALL POSTS செலக்ட் செய்ய வேண்டாம் சில சமயம் சரியாக இயங்கவில்லை.)

  • Labels: இதில் உங்கள் பதிவுகளை நீங்கள் உங்கள் labels வகையில் வகை படுத்தலாம்.

  • Comments: நம் பதிவை படித்துவிட்டு வாசகர்கள் கூறும் கமென்ட் ஆக்டிவேட் செய்ய.

  • Page Template: இந்த இடத்தில் நீங்கள் Compact செலக்ட் செய்வதே சிறந்தது.

  • Order of Posts: உங்களின் பதிவுகள் வரிசை படுத்த.

அடுத்து COVERS என்ற பகுதி இருக்கும். இதில் உங்கள் புத்தகத்தின் அட்டை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.



    அடுத்து உள்ள DEDICATION என்ற இடத்தில் உங்கள் புத்தகத்தின் ஏதேனும் முன்னுரையை கொடுத்து கீழே உள்ள CREATE MY BOOK என்ற பட்டனை அழுத்தவும். அவ்வளவு தான் உங்கள் புத்தகம் தயாராகி கொண்டிருக்கிறது. சிறிது நேரம் காத்திருக்கவும். முடிவில் உங்கள் புத்தகம் தயாராகி வரும்.

    தேவைபட்டால் நீங்கள் அங்கே கொடுக்கபட்டிரும் விலை பட்டியலில் சொடுக்கி உங்கள் புத்தகத்தை தரவிறக்கி கொள்ளலாம்.


    டுடே லொள்ளு 
    free myspace graphics :: myspace images :: myspace pictures free myspace layouts
    டே தலையே சுத்துது, யார் கிட்ட கத்துகிட்ட கொஞ்சம் அட்ரஸ் கொடு நம்ம தமிழ் நடிகர்களுக்கு யூஸ் ஆகும்.

    நமக்கு இமெயில் அனுப்பியவரின் விவரங்கள் அறிய

    இணையத்தில் பல நிறுவனங்கள் இலவச ஈமெயில் சேவையை தருவதனால் பல பேர் அந்த சேவையை பயன்படுத்தி நம் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இமெயில் அனுப்புகிறோம். இது மட்டுமில்லாமல் நமக்கு தெரியாதவர்கள் மற்றும் சில மோசடி கும்பல்களிடம் இருந்து கூட இமெயில்கள் வந்து கொண்டு இருக்கிறது. இப்படி அனுப்பப்படும் ஈமெயில்கள் எங்கிருந்து யாரால் அனுப்பபடுகிறது என இங்கு அறிந்து கொள்வோம்.
    நமக்கு ஈமெயில் அனுப்பியவரின் விவரம்:

    • இதற்க்கு நமக்கு Spokeo என்ற தளம் நமக்கு உதவி புரிகிறது. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் http://www.spokeo.com செல்லவும்.



    • இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும்.

    • அதில் உங்களுக்கு தெரியும் காலி இடத்தில் நீங்கள் தகவல் பெற விரும்பும் இமெயில் ஐடியை கொடுத்து அருகே உள்ள SEARCH என்ற அழுத்தவும்.

    •  உங்களுக்கு உங்கள் மெயில் ஐடி ஸ்கேன் ஆகி தகவல்கள் தெரியும். 

    • ஒருமுறை நீங்கள் உங்கள் மெயில் ஐடியை கொடுத்து உபயோகித்து பாருங்கள். உங்களுக்கே வியப்பாக இருக்கும். 

    FRIENDS:



    • இந்த தளத்தில் இன்னொரு சிறப்பான வசதி நம் மெயில் இந்த friends என்ற வசதி. இந்த வசதியின் மூலம் நம் மெயிலில் உள்ள நண்பர்களின் விவரங்களை அறிந்து கொள்ளமுடியும்.



    • நண்பரே இதில் நீங்கள் உங்கள் பிளாக்கர் மெயில் ஐடியை உபயோகிக்க வேண்டாம். இந்த தளம் பாதுகாப்பு வாய்ந்தது என்று தெரியவில்லை. கவனமாக இருப்பதே நல்லது. 



    இந்த தளத்தில் மேலும் சில வசதிகள் இருந்தாலும் (NAME FINDER, PHONE FINDER) இவைகள் சரியாக இயங்கவில்லை. ஆகையால் அவைகளை பற்றி இங்கு விளக்கவில்லை. 
    டுடே லொள்ளு 



    Photobucket
    கண்ணுக்குள் வைத்து பார்த்து கொள்கிறாராம் 

    Text Widget

    Text Widget