Monday, March 15, 2010

நம்முடைய பிளாக்கரில் "Reply This Comment" பட்டன் கொண்டுவர

நம்முடைய தளத்தில் நாம் எழுதும் பதிவுகளுக்கு நம் வாசகர்களிடம் இருந்து கருத்துக்கள் வரும். அப்படி வரும் கமெண்ட்ஸ்க்கு நாம் நன்றி சொல்லி பதில் ஒரு கமெண்ட்ஸ் போடுவோம். நாம் அப்படி போடும் போது கருத்து சொன்ன நண்பரின் பேரை டைப் செய்தோ அல்லது காப்பி செய்தோ யாருக்கு நாம் நன்றி சொல்கிறோம் என்று தெரிவிப்போம்.

     இந்த முறை தான் பெரும்பாலும் கடைபிடிக்க படுகிறது. ஆனால் அதற்கு பதில் இந்த reply என்ற பட்டன் நமக்கு வரும் comments பக்கத்தில் இருந்தால் நமக்கு ஒவ்வொரு முறையும் காப்பியோ, டைப்போ செய்ய தேவை இல்லை. இந்த reply என்ற பட்டனை அழுத்தியவுடன் அவர்களுடைய பேரே அதில் வந்து விடும்.



மேலே உள்ள படத்தில் இருப்பதை போல உங்களுடைய தளத்தில் கொண்டு வர கீழே பின் தொடருங்கள்.
 முதலில் உங்களுடைய தளத்தை ஒரு Backup எடுத்து வைத்து கொள்ளுங்கள். 
உங்களுடைய பிளாக்கர் அக்கௌன்ட்டில் நுழைந்து கொள்ளுங்கள்.
DASSBOARD- LAYOUT- EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE - செல்லவும். பின்பு கீழே உள்ள HTML CODE கண்டுபிடிக்கவும். (CTRL+4 டைப் செய்து வரும் விண்டோவில் அந்த கோடை டைப் செய்தால் சுலபாமாக கண்டு பிடிக்கவும். 
<b:include data='comment' name='commentDeleteIcon'/>

</span>

மேலே உள்ள கோடை கண்டு பிடித்த பின்பு  கீழே உள்ள HTML CODE காப்பி செய்து கண்டு பிடித்த கோடின் கீழே பேஸ்ட் செய்யவும்.





<span><a expr:href='&quot;https://www.blogger.com/comment.g?blogID=3543484279889644124&amp;postID=&quot; + data:post.id + &quot;&amp;isPopup=true&amp;postBody=%40%3C%61%20%68%72%65%66%3D%22%23&quot; + data:comment.anchorName + &quot;%22%3E&quot; + data:comment.author + &quot;%3C%2F%61%3E#form&quot;' onclick='javascript:window.open(this.href, &quot;bloggerPopup&quot;, &quot;toolbar=0,location=0,statusbar=1,menubar=0,scrollbars=yes,width=450,height=450&quot;); return false;'>

<img src='http://i907.photobucket.com/albums/ac276/yamsasi2003/reply04.png'/></a>

</span>

பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே படத்தில் உள்ளதை போல இருக்கவேண்டும். 



இப்படி வந்தால் இதுவரை நீங்கள் செய்த அனைத்தும் சரியே. ஒரு சபாஸ் போட்டு கொள்ளுங்கள்.

அடுத்து   ஒரு முக்கியமான விஷயம் மேலே உள்ள படத்தில் நான் 19 இலக்க எண்ணை வட்டமிட்டு காட்டியிருப்பேன். அதை நீங்கள் உங்களுடைய தளத்தில் blog Id எண்ணை மாற்றவேண்டும். அதை எப்படி கண்டு பிடிப்பது என்று கீழே பார்க்கவும் 

இப்பொழுது நீங்கள் HTML CODE சேர்த்து கொண்டிருக்கும் விண்டோவின் ADDRES BAR பாருங்கள் 

அதில் உங்களுடைய ID NO இருக்கும். கீழே உள்ள படத்தை பாருங்கள்.







நான் காட்டியிருக்கும் அந்த எண்களை மட்டும் காப்பி செய்து இந்த கோடினில் உள்ள எண்ணின் மீது REPLACE செய்து விடவும். அவ்வளவு தான் உங்கள் தளத்தில் REPLY பட்டன் சேர்ந்து இருப்பதை காண்பீர்கள். நல்ல உபயோகமுள்ளதாக இருக்கும்.


போயிடாதீங்க உங்களுடைய கருத்துகளையும் சொல்லி விட்டு போங்க. 

24 comments:

Mrs.Menagasathia said...

good post sasi!!

Uma said...

நன்றி. ஆனால் இது த்ரெட் ஆரம்பிக்காமல், @<> என்று தனி காமெண்ட் ஆகத் தான் வருகிறது. எனினும் பயனுள்ளது.

சைவகொத்துப்பரோட்டா said...

ஏகப்பட்ட மேட்டர் இருக்கு போல, தொடரட்டும் உங்கள் பணி, நன்றி.

மன்னார்குடி said...

கலக்குங்க சசி.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

Thanks Sasi

புலவன் புலிகேசி said...

மிக மிக உபயோகமான பதிவு சசி..என் வலைப்பூவில் இணைச்சிட்டேன். நன்றி...

மைதீன் said...

nallaarukku sasi,keep it up

malar said...

எனக்கு இப்படிதான் இருக்கு.நீங்கள் சொன்ன மாதிரி சேர்க்க முடியவில்லை.

மன்னார்குடி said...

நானும் மாற்றி பார்த்துவிட்டேன். நன்றி சசி.

Giri said...

நல்ல தகவல்...நன்றி...என் ஓட்டு உங்களுக்கு நிச்சயம் உண்டு தலைவா...அப்படிப்பட்ட நல்ல தகவல் இது...

வேலன். said...

நன்றாக இருக்கின்றது சசி...வாழ்க வளமுடன்:வேலன்.

Anonymous said...

@SUREஷ் (பழனியிலிருந்து)

வரதராஜலு .பூ said...

மிகவும் அருமை. எளிமையாகவும் உள்ளது. நன்றி

தம்பி.... said...

சசி உங்களுக்கு எந்த ஊருப்பா ?

karthik said...

அருமையான பதிவு தல

வரதராஜலு .பூ said...

எனது தளத்தில் உபயோகபடுத்திவிட்டேன். மிக்க நன்றி சசி

தோழமையுடன் said...

நீண்ட நாளாக தேடிக் கொண்டிருந்த நுட்பத்தை வழங்கியமைக்கு நன்றிகள். வாழ்த்துக்கள்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

@SUREஷ் (பழனியிலிருந்து)

Anitha Mohan said...

Nice job u hv done it...........

அறிவன்#11802717200764379909 said...

Aspire டெம்ப்ளேட்டில் நீங்கள் குறிப்பிட்டுள்ள கோட் இடம்பெறவில்லை.(comment name)

Cool Boy கிருத்திகன். said...

thanks brother

ராமலக்ஷ்மி said...

மிக உபயோகமான பதிவு. எனக்கும் செய்ய ஆசை. ஆனால் டெம்ப்ளேட்டில் கைவைக்கவே எப்போதும் பயம்:(! முயற்சித்துப் பார்க்கிறேன்:)!

வெறும்பய said...

மிக மிக உபயோகமான பதிவு

நேசமுடன் ஹாசிம் said...

நன்றி நண்பா சரிசெய்தேன்

Post a Comment

Text Widget

Text Widget