Saturday, March 20, 2010

பிலாக்கரில் பதிவின் முதல் எழுத்தை மட்டும் பெரியதாக காட்ட

இது என்னுடைய 100 வது பதிவு. இதுவரை நான் எழுதும் பதிவு ஒவ்வொரு பதிவையும் ரசித்து எனக்கு வாழ்த்துக்களை சொல்லி என்னை நூறாவது பதிவு வரை அழைத்து வந்த என் வாசகர்களுக்கும் என்னை பின்தொடரும் உயர்ந்த உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து. இந்த நூறாவது பதிவை உங்களுக்காக சமர்பிக்கிறேன்.     



நாம் எழுதும் பதிவில் முதல் எழுத்தை மட்டும் நமக்கு தேவையான அளவு எப்படி பெரியதாக்குவது என்று காண போகிறோம். இந்த வசதியை நம் தளத்தில் பெற முதலில் உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்பு

DASSBOARD - LAYOUT - EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE - செல்லவும்.

சென்று கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடிக்கவும்.


]]</b:skin>
கோடிங்கை கண்டு பிடித்த பின் கீழே உள்ள HTML CODE காப்பி செய்து கண்டுபிடித்த கோடிற்கு முன்/மேலே பேஸ்ட் செய்யவும்.
.post large { float:left; color: $headerBgColor; font-size:60px; 

line-height:50px; padding-top:1px; padding-right:5px; }





சரியான இடத்தில் பேஸ்ட் செய்தவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் இதில் SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தவும்.

 இன்னும் ஒரு சிறிய வேலை உள்ளது. நீங்கள் பதிவு எழுத ஆரம்பிக்கும் போது நீங்கள் பெரியதாக ஆக்க நினைக்கும் எழுத்தை(முதல் எழுத்து)  மட்டும் 

<large>முதல் எழுத்து</large>


உதாரணமாக நீங்கள் "அ" என்ற எழுத்தை பெரியதாக்க நினைத்தால் கீழே உள்ளதை போல கொடுக்க வேண்டும்.

<large>அ</large>




இப்படி கொடுத்த பின் அடுத்த எழுத்துக்களை எப்பவும் எழுதுவதை போல எழுதி கொள்ளுங்கள். அப்புறம் நீங்கள் எழுதியதும் பதிவை பப்ளிஷ் செய்து பார்த்தால் நீங்கள் கொடுத்த எழுத்து மட்டும் பெரியதாக வந்திருப்பதை காண்பீர்கள். 
டுடே லொள்ளு 
running
ஓட்ரா ராஜா ஓட்ரா  

21 comments:

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பெரிய விசயம் தான்.தலைவரே மின்னி மறையும் எழுத்துக்கள் பற்றி டிப்ஸ் கொடுங்க..

ஜோதிஜி said...

உங்கள் உழைப்பு வியப்பாக இருக்கிறது. படம் எங்கிருந்து பிடிக்கிறீர்கள்?

தேனம்மை லெக்ஷ்மணன் said...

கடைசி படத்தை மாத்துங்க சசி பயமா இருக்கு

சைவகொத்துப்பரோட்டா said...

செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள் சசி.

Chitra said...

100வது பதிவு வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சசி!! லொள்ளும்,பதிவும் சூப்பர்ர்!!

Shyam said...

சூப்பர் லொள்ளு சார்!! எங்கே இறுதி பிடிக்கிரிங்க, வாழ்த்துகள்

A.சிவசங்கர் said...

vaalthukal nanpaa

வேலன். said...

100 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள் சசி...வாழ்க வளமுடன்,வேலன்.

SShathiesh-சதீஷ். said...

அண்மைக்காலமாகத்தான் உங்கள் வாசகனாக இருக்கின்றே. இது என் முதல் பின்னூட்டம் என நினைக்கின்றேன். வியப்பாக இருக்கின்றது. நிறைய விடயங்கள் பகிர்கின்றீர்கள். எங்களைப் போன்ற மசாலா பதிவுகளை விட்டு விட்டு கமல் போல உங்கள் தேடலுக்கு என் வாழ்த்துக்கள். சதம் என்ன இன்னும் பல சதம் அடிக்க வாழ்த்துக்கள்.

நீச்சல்காரன் said...

வாழ்த்துக்கள் நண்பரே

S Maharajan said...

நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள் சசி...தொடர்ந்து பல நூறுகளை அடிக்க வாழ்த்துக்கள்...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

வாழ்த்துக்கள் நண்பரே

அன்புடன் மலிக்கா said...

வாழ்த்துக்கள் சசி...தொடர்ந்து பல பல சாதனைகள் புரிய வாழ்த்துகள். இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் சசி..பாராட்டுகள்

DrPKandaswamyPhD said...

வாழ்த்துக்கள்.

புலவன் புலிகேசி said...

உங்களை இந்த வார்ப் பதிவராக டரியலில் அறிமுகம் செய்திருக்கிறேன்..

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் பாஸ் தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள்...!

karthik said...

100 பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்
இந்த சாதனை என்றும் தொடர்க .........

தம்பி.... said...

வாழ்த்துக்கள் சசி, இத்தனை குப்பைகளுக்கு மத்தியில் உங்கள் உபயோகமான பதிவுகள் மாணிக்கங்கள் தான்........Keep it Up..

dheva said...

பயனுள்ள....பதிவு.. Boss.....சூப்பர்!

Post a Comment

Text Widget

Text Widget