Thursday, February 18, 2010

நெற்பயிரின் மூலம் விவசாயிகள் அமைத்த வியப்பூட்டும் ஓவியங்கள்.

மிகவும் அழகான ஓவியங்கள் ஜப்பானில் உள்ளது .இவை அனைத்தும் நெற்பயிர் மூலம்

உருவாக்க பட்டுள்ளது.இதில் எந்த விதமான கிராபிக்ஸ். இவைகள் தகுந்த திட்டமிட்டு உருவாக்க பட்டுள்ளது.

இந்த ஓவியங்கள் விவசாயிகளின் கடின உழைப்பின் மூலம் உருவாக்க பட்டுள்ளது. இதில் எந்த விதமான பெயிண்ட், பிரஷ், எதையும் உபயோகிக்க வில்லை. அதற்கு மாறாக வித விதமான நெற்பயிர்களை உபயோகித்து இந்த ஓவியங்களை உருவாக்கியுள்ளனர்.     
இந்த பயிர்களை வெயில் காலத்திலேயே விவசாயிகள் குறிப்பிட்ட வடிவத்தில் நட்டுவிடுவார்கள். அது வளர்ந்த பிறகு கண்கொள்ளா ஓவியங்களாக காட்சியளிக்கும்.
 






அடுத்து கீழே இருப்பது ஜப்பானில் இன்னொரு இடத்தில் உருவாக்க பட்டிருக்கும் ஓவியம். இந்த ஓவியம் 15000 சதுர மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. இப்படி நெற்பயிர்களை கொண்டு ஓவியம் அமைக்கும் வழக்கம் 1993 ல் இருந்து ஜப்பானில் கடைபிடிக்க படுகிறது. இதை உருவாக்க அவர்கள் பல்வேறு நாட்டில் இருந்து விதைகளை  
வாங்கி இந்த ஓவியம் அமைக்கிறார்கள்.   




இது போல் ஓவியங்களை உருவாக்குவதன் மூலம் அந்த கிராமங்களின் வருவாய் அதிகரித்துள்ளதாக அந்த விவசாயிகள் கூறுகிறார்கள். அந்த கிராமங்கள் ஜப்பானில் ஒரு சுற்றுலா தளமாகவே அறிவிக்க பட்டுவிட்டது. 
 




பதிவு பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை கூறிவிட்டு செல்லுங்கள்.

5 comments:

DrPKandaswamyPhD said...

அற்புதமாக இருக்கிறது. தகவல் சேகரித்து பகிர்ந்தமைக்கு நன்றி.

Mrs.Menagasathia said...

அற்புதமான புகைப்படங்கள்!! அனைத்தும் அருமை...

செ.சரவணக்குமார் said...

அருமையான பகிர்வு நண்பா. பல புதிய செய்திகளை உங்கள் பதிவுகளில் அறிய முடிகிறது. ஓவியங்கள் கொள்ளை அழகு.

மின்னல் said...

புகைபடங்கள் அருமை.பச்சை நிறத்தை பார்க்கும் போது ஊர் நினைவுகள் வருகிறது

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அட 3 டி ஓவியம் போல இருக்கு பகிர்வுக்கு நன்றி சசி

Post a Comment

Text Widget

Text Widget