Tuesday, February 9, 2010

என்னுடைய 50 வது பதிவு.



விளையாட்டாக பதிவு எழுத ஆரம்பித்து இன்று 50 வது பதிவை எழுதிவிட்டேன். இதுவரை என்னை தொடரும் உயர்ந்த உள்ளங்களுக்கும் என் பதிவிற்கு பின்னூட்டமிட்டு என்னை மேலும் எழுத தூண்டும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் . மேலும் நான் தொடர்ந்து எழுத உங்கள் ஆதரவு  தொடர்ந்து இருக்க கேட்டுக்கொள்கிறேன்  சரி இன்றைய பதிவிற்கு வரலாம்.

        

     இன்று கணினியில் நாம் பெரும்பாலும் உபயோகிப்பது தேடு இயந்திரம்(SEARCH ENGINE) ஆகும். இதில் கூகிள்(GOOGLE) தேடு இயந்திரம் பெரும்பான்மையாக அனைவராலும் உபயோகிக்க படுகிறது. இரண்டாம் இடத்தில் யாஹூ(YAHOO) நிறுவனமும், அதற்க்கு அடுத்த இடத்தில் மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள பிங்(BING) இவை மூன்றும் தற்போது கணிசமாக அனைவராலும் உபயோகிக்க படுகிறது. இவை மூன்றும் வெவ்வேறு தளங்களாகும்(WEBSITE).

        நாம் கூகுளில் எதாவது தேடி கிடைக்கவில்லை என்றால் யாஹூவில் தேட நினைப்போம், யாஹூவில் தேடி கிடைக்கவில்லை என்றால் பிங்கில் தேட நினைப்போம், ஆனால் இவை மூன்றிக்கும் செல்ல நாம் ஒவ்வொரு தளங்களாக ஓபன் செய்து பார்க்க வேண்டும். இதனால் நம்முடைய நேரம் வீணாக செலவாகும். இதற்க்கு மாறாக இந்த மூன்று தளங்களும் ஒரே இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும். நல்லாயிருக்குமில்ல. இந்த தளத்திற்கு செல்ல இங்கு கிளிக்  செய்யவும். இதை கிளிக் செய்தால் கீழே இருப்பதை போல ஒரு விண்டோ ஓபன் ஆகும்               

மேலே உள்ள விண்டோவில் மூன்று தேடு இயந்திரங்களும் கிடைக்கும். இதில் உங்களுக்கு தேவையானதை ஒரே இடத்தில் பெற்று மகிழலாம். நேரமிருந்தால் உங்கள் கருத்துக்களை கூறிவிட்டு செல்லவும்.   

11 comments:

கோவி.கண்ணன் [GK] said...

நல்வாழ்த்துகள்

சேட்டைக்காரன் said...

தொடர்ந்து வெளுத்துக்கட்டுங்க.நல்வாழ்த்துக்கள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாழ்த்துகள் நண்பா

Mrs.Menagasathia said...

congrats!!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

வாழ்த்துக்கள் சசி தொடரட்டும் உங்கள் வலையுலக சேவை பல ஆயிரம் பதிவுகள் பகிர வாழ்த்துக்கள்

Krish said...

i welcome u r perfomance

அண்ணாமலையான் said...

ரொம்ப சந்தோஷம்.. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதி பல சாதனகளை படைங்க

LK said...

congrats

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு. 50வது பதிவிற்கும் வாழ்த்துக்கள்.

கண்ணகி said...

வாழ்த்துக்கள்..

டவுசர் பாண்டி said...

உங்க 50 -வது பதிவிற்கு வாழ்த்துக்கள் , தொடர்ந்து எழுதுங்க , சிகரம் தொட வாழ்த்துக்கள்

Post a Comment

Text Widget

Text Widget