Wednesday, June 23, 2010

நம் பிலாக்கரில் பதிவின் "Background Image on Pharagraph" எபெக்ட் கொண்டு வர?



நம் பிலாக்கரில் நாம் தினமும் பதிவு எழுதுகிறோம். நாம் எழுதும் பதிவில் ஏதேனும் முக்கியமான வரிகளை சேர்க்கும் போது நாம் அதை bold ஆக காட்டுவோம். இனி அப்படி பண்ண வேண்டியதில்லை. நம்முடைய முக்கியமான வரிகளை  சேர்க்கும் போது   அந்த வரிகளுக்கு பின்னால் ஏதேனும் படத்தினை சேர்த்தல் அனைவருக்கும் எளிதாகவும் தெரியும் நம்முடைய பதிவும் அழகாக இருக்கும். இதுபோல் நீங்கள் முழு பதிவிற்கே சேர்க்கலாம். 


இதுபோல் நம் தளத்தில் கொண்டுவர கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள்.

காப்பி செய்து கொண்டு உங்கள் பிலாக்கர் அக்கௌண்டில் நுழைந்து உங்கள் போஸ்ட் எடிட்டர் பகுதியில் நுழைந்து edit html மோடில் நீங்கள் காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்யவும்.  அந்த கோடிங்கில் "THE TEXT FOR THE PARAGRAPH GOES HERE " என்று வரும் இடத்தில் உங்களுக்கு தேவையான வரிகளை கொடுத்து விட்டு திரும்பவும் COMPOSE கிளிக் செய்தால் நீங்கள் கொடுத்த வரிகளுக்கு பின்னால் படம் சேர்ந்திருக்கும். அவ்வளவு தான் இனி நீங்கள் ஏதேனும் முக்கியமான வரிகளை கூறும் போது அதற்க்கு பின்னால் இதுபோல் படத்தை சேர்க்கலாம். கீழே உள்ள படங்களை பார்த்து கொள்ளவும்













குறிப்பு: இந்த கோடிங்கை ஒவ்வொரு முறையும் எப்படி ஞாபகம் வைத்து சேர்ப்பது என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அதற்க்கு நீங்கள் உங்களுடைய பிளாக்கர் அக்கௌண்டில் புகுந்து

  • DASSBOARD

  • SETTING

  • FORMATTING

  • POST TEMPLATE - பகுதியில் SAVE செய்து விட்டால் ஒவ்வொரு முறையும் நீங்கள் அந்த கோடிங்கை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டியதில்லை நாம் போஸ்ட் எடிட்டர் சென்றாலே EDIT HTML பகுதியில் அந்த கோடிங் சேர்ந்து விடும் அதை நாம் உபயோக படுத்தி கொள்ளலாம்.     



  பதிவை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள் 


டுடே லொள்ளு 
Photobucket
அய்ய்ய் எங்க அம்மா எனக்கு பொண்ணு பார்க்க போயிருக்காங்களே 

5 comments:

தமிழ் உதயம் said...

விருப்பப்பட்ட பதிவு.

அமைதிச்சாரல் said...

ரொம்ப நாளா தேடிக்கிட்டிருந்தேன். என் பதிவில் உபயோகப்படுத்திக்கிட்டேன். மிக்க நன்றி.

பட்டாபட்டி.. said...

இது நல்ல டிப்ஸ் பாஸ்..( எனக்கு புதுசு..)

Chitra said...

Thank you for this post. :-)

தேனம்மை லெக்ஷ்மணன் said...

நல்ல பகிர்வு சசி.. உங்க கை சரியாகிருச்சா.. உங்கள் புகழும் மென்மேலும் பரவட்டும்...

Post a Comment

Text Widget

Text Widget