முதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள். அங்கு மேலே படத்தில் காட்டியுள்ளதை போல Comments என்ற ஒரு புதிய லிங்க் இருக்கும் அந்த லிங்கில் செல்லுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்
கமெண்ட்ஸ் பக்கத்திற்கு சென்றவுடன் அதில் மூன்று option இருக்கும்.
- Published - நம் தளத்தில் இதுவரை வந்த கமெண்ட்ஸ்
- Awaiting Moderation - இது நாம் பப்ளிஷ் செய்யவேண்டிய கமெண்ட்ஸ்
- Spam - இது நாம் தடுக்க வேண்டிய கமெண்ட்ஸ் வரும் பகுதி.
இந்த பகுதியில் இதுவரை நமக்கு வந்த அனைத்து கமெண்ட்களும் அதனதன் தலைப்போடு நமக்கு தெரியும். வலது பக்க மூலையில் நமக்கு இதுவரை வந்த மொத்த கம்மேன்ட்களின் எண்ணிக்கை வரும். இதில் நீங்கள் spam ஆக நினைக்கும் பின்னூட்டத்தை டிக் செய்து spam என்ற பட்டனை அழுத்தினால் போதும். அந்த comment நம்முடைய spam பகுதிக்கு சென்று விடும். கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
Spam :
இனிமேல் நமக்கு வரும் comment மிகவும் பாதுகாப்பாக வரும் இன்னொரு விஷயம் நமக்கு வரும் கமெண்ட் இனி நம் பதிவின் தலைப்போடு சேர்ந்தே வரும். இதற்காக நாம் post name என்பதை அழுத்தி பார்க்க தேவையில்லை.
நன்றி உலவு.காம்
இதுவரை என் தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து தோழர்களுக்கும் மிக்க நன்றி.பதிவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் நம் தமிழ் திரட்டியான உலவு.காம் ஒரு போட்டியை அறிமுக படுத்தியது பதிவை இடு பரிசை எடு என்பது. அதில் சென்ற மாத சிறந்த பதிவராக என்னை தேர்வு செய்து உள்ளனர். என்னை தேர்வு செய்த உலவு.காம் நிறுவனர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது போல் மேலும் பல மாற்றங்கள் செய்து பதிவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
டுடே லொள்ளு
என்ன வான வேடிக்கைன்னு பார்க்கறீங்களா எவ்ளோ சொன்னாலும் கேட்க மாட்டேங்குறாங்க, பாசக்கார பயபுள்ளைங்க
17 comments:
தமிழ் திரட்டியான உலவு.காம் "சிறந்த பதிவர் " ஆக தேர்ந்தேடுக்கபப்ட்டதர்க்க்கு வாழ்த்துக்கள் சசி . :))
வாழ்த்துக்கள் சசி.. தொடர்ந்து பல புதிய தகவல்களை அறிமுகப்படுத்தவும்...
நன்றி... ப்ளாக்கர் டிப்ஸ்க்கு.
உலவு.காம் "சிறந்த பதிவர் " ஆக தேர்ந்தேடுக்கபப்ட்டதர்க்க்கு வாழ்த்துக்கள் நண்ப.
வாழ்த்துக்கள் ...:)
மேலும் உலவ .. வாழ்த்துக்கள் தம்பி ...
தகவலுக்கு நன்றி...
உலவு.காமில் சிறந்த பதிவராக தேவு செய்ய்பட்டதற்கு வாழ்த்துக்கள்.
தகுதியானவர்களுக்கு கிடைத்த தகுதியான பாராட்டுகள்......வாழ்த்துகள் சசி, உங்கள் பதிவுக்கும் வாழ்த்துகள், பயனுள்ள தகவல்.
பயனுள்ள பதிவு! "சிறந்த பதிவர்" பட்டத்திற்கு வாழ்த்துக்கள் சகோதரர் சசி!
நண்பரே இந்த வசதி ரொம்ப நாளாயிருக்கே புது வசதியில்லை. நான்கூட புது வசதின்னு வந்து ஏமாந்துட்டேன்.
நண்பரே spam filter வசதி தற்போது தான் அறிமுக படுத்தியுள்ளார்கள். நீங்கள் வேறு எதையோ கூறுகிறார்கள்.
புதிய புதிய தகவல்களை தந்துவரும் சசிகுமாருக்கு பரிசு கிடைதிருப்பதில் ஆச்சரியமில்லை. வாழ்த்துகள்.
சிறந்த பதிவர் பட்டத்திற்கு வாழ்த்துக்கள்.மிக தகுதியுடையவர் தான் தம்பி.
நல்ல தொரு கட்டுரை வாழ்த்துக்கள் சகோதரா
சகோதரா யாரோ பழைய வசதி என்றிருக்கிறாங்கா. பரவாயில்லை நான் வலையுலகிற்கு புதியவன் உங்கள் மூலம் தான் அறிந்தேன். போட்டியில் வென்றதற்கு வாழ்த்துக்கள்.
Nalla thagaval
Post a Comment